வட்டி...


அட்டைப் பூச்சிற்கு
அண்ணனாய்;
உழைப்பை உறிஞ்சும்
அரக்கனாய்;
பட்டித் தொட்டிகளெல்லாம்
கொடிக்கட்டிப் பறந்து;
மானத்தை வாங்க
அம்மணமாய் நிற்கும் வட்டி!

கருமம் மட்டுமே கலையாய்;
தருமம் இதன் விலையாய்;
குட்டிப்போடும் வட்டி மலையாய்;
கொடுத்து நிற்பவன் சிலையாய்!

வாங்கித் திண்பவன்
கொளுத்து நிற்க;
ஏமாந்தவன் ஏங்கி நிற்க;
கூறுப்போடும் மனித நேயத்தின்
ஆணிவேர் இந்த வட்டி!

கொஞ்சம் கொஞ்சமாய் கொல்வதில்
எய்ட்ஸுக்கு இரண்டாம் இடமுண்டு;
போட்டி என்று வந்தால்;
வட்டி முன்னே நின்றால்!

மனிதநேயத்தை அறுக்கும்
வட்டியை வெறுத்திடுவோம்;
ஊடுறுவும் விஷச் செடியை
அறுத்திடுவோம்!

அட்டைப் பூச்சிற்கு
அண்ணனாய்;
உழைப்பை உறிஞ்சும்
அரக்கனாய்;
பட்டித் தொட்டிகளெல்லாம்
கொடிக்கட்டிப் பறந்து;
மானத்தை வாங்க
அம்மணமாய் நிற்கும் வட்டி!

கருமம் மட்டுமே கலையாய்;
தருமம் இதன் விலையாய்;
குட்டிப்போடும் வட்டி மலையாய்;
கொடுத்து நிற்பவன் சிலையாய்!

வாங்கித் திண்பவன்
கொளுத்து நிற்க;
ஏமாந்தவன் ஏங்கி நிற்க;
கூறுப்போடும் மனித நேயத்தின்
ஆணிவேர் இந்த வட்டி!

கொஞ்சம் கொஞ்சமாய் கொல்வதில்
எய்ட்ஸுக்கு இரண்டாம் இடமுண்டு;
போட்டி என்று வந்தால்;
வட்டி முன்னே நின்றால்!

மனிதநேயத்தை அறுக்கும்
வட்டியை வெறுத்திடுவோம்;
ஊடுறுவும் விஷச் செடியை
அறுத்திடுவோம்!

4 comments:

 1. வட்டி என்னும் அரக்கனை பற்றிய அழகான வரிகள்

  ReplyDelete
 2. பணம் இருபவன்பெருக்க .நினைக்கிறான் என்ன செய்வோம்.
  வாழ்க்கைக்கும் வட்டிக்கும் உழைக்க வேண்டியிருக்கிறது.

  ReplyDelete
 3. சித்திக்November 28, 2010 at 10:21 AM

  கொஞ்சம் கொஞ்சமாய் கொல்வதில்
  எய்ட்ஸுக்கு இரண்டாம் இடமுண்டு;
  போட்டி என்று வந்தால்;
  வட்டி முன்னே நின்றால்!

  அருமை அருமை !!

  ReplyDelete
 4. வட்டி பற்றிய கவிதை அருமையா இருக்கு.
  டைட்டில் நல்ல இருக்கு, ஒரு மற்றம் செய்யணும் பேக்ரவ்ண்டில் கருப்பு கலர் இல்லாமல் Transparent மூலமாக அதன் ஒரிஜினல் கலரையே பயன்படுத்துங்கள் நல்லா இருக்கும்

  ReplyDelete