ஏங்குகிறேன் மழைக்கு..



சுதந்திரமாய் விழும் உனை;
சிறையென  ஜன்னல்
கம்பியுடன்;
கண் கொட்டாமல்
சிரித்துக் கொண்டே நான்!

பள்ளிப் பருவத்தில்
மேகங்கள் கறுத்ததும்
என் முகம் சிரிக்கும்;
பள்ளி விடுமுறையை
எண்ணி!

அம்மா அடித்தாலும்
நனைவேன்;
நனைந்தப் பின்னே
அவள் முந்தானையிலே
ஒளிவேன்!

குடைக் கொண்டு;
குனிந்துக் கொண்டு;
கப்பல் விட்டக்
கதையுண்டு!

எத்தி விளையாடக்
கால்பந்தாக;
விதிமுறை இல்லாவிட்டாலும்
விடுமுறைக்காக!

ஜலதோஷத்தில்
தும்மியக் காலங்கள் கடந்து;
விம்முகிறேன்;
பாலையில் என்றாவது
பெய்யும் மழைக்கு
ஏக்கத்துடன்!


சுதந்திரமாய் விழும் உனை;
சிறையென  ஜன்னல்
கம்பியுடன்;
கண் கொட்டாமல்
சிரித்துக் கொண்டே நான்!

பள்ளிப் பருவத்தில்
மேகங்கள் கறுத்ததும்
என் முகம் சிரிக்கும்;
பள்ளி விடுமுறையை
எண்ணி!

அம்மா அடித்தாலும்
நனைவேன்;
நனைந்தப் பின்னே
அவள் முந்தானையிலே
ஒளிவேன்!

குடைக் கொண்டு;
குனிந்துக் கொண்டு;
கப்பல் விட்டக்
கதையுண்டு!

எத்தி விளையாடக்
கால்பந்தாக;
விதிமுறை இல்லாவிட்டாலும்
விடுமுறைக்காக!

ஜலதோஷத்தில்
தும்மியக் காலங்கள் கடந்து;
விம்முகிறேன்;
பாலையில் என்றாவது
பெய்யும் மழைக்கு
ஏக்கத்துடன்!

No comments:

Post a Comment