மெளனம்


தெரியாதப் பதிலால்;
விழிகள் நடனமாட;
உயராத ஒலியால்
மெளனமாய் நிற்க;
முகம் சிவக்கும்
எதிர் இருப்பவருக்கு!

ஒத்துக்கொண்டக்
காரியத்திற்கு;
உதடுகள் இரண்டும்
உரிந்து நிற்க;
மெளனமான மொழியால்;
முகம் மலறும்;
எதிர் இருப்பவருக்கு!

பொங்கி வரும்
சினத்திற்கு;
முட்டுக்கட்டையாய்
முழுங்கி நிற்கும்
வார்த்தைக்கு;
மெளனமாய் இருந்து
மூக்கை உடைப்போம்
எதிர் இருப்பவருக்கு!

தொண்டையில்
சிக்கியக் காற்றும்;
எழாத நாவும்;
ஒலிக்குச் சரணடைந்து
மெளனம் என்றப் பாஷையாக!

பேசுகின்ற இடத்தில்
மொழியால் பதில் அளிப்போம்;
தேவையில்லா இடத்தில்
மெளனமே பாஷையாக்குவோம்!

தெரியாதப் பதிலால்;
விழிகள் நடனமாட;
உயராத ஒலியால்
மெளனமாய் நிற்க;
முகம் சிவக்கும்
எதிர் இருப்பவருக்கு!

ஒத்துக்கொண்டக்
காரியத்திற்கு;
உதடுகள் இரண்டும்
உரிந்து நிற்க;
மெளனமான மொழியால்;
முகம் மலறும்;
எதிர் இருப்பவருக்கு!

பொங்கி வரும்
சினத்திற்கு;
முட்டுக்கட்டையாய்
முழுங்கி நிற்கும்
வார்த்தைக்கு;
மெளனமாய் இருந்து
மூக்கை உடைப்போம்
எதிர் இருப்பவருக்கு!

தொண்டையில்
சிக்கியக் காற்றும்;
எழாத நாவும்;
ஒலிக்குச் சரணடைந்து
மெளனம் என்றப் பாஷையாக!

பேசுகின்ற இடத்தில்
மொழியால் பதில் அளிப்போம்;
தேவையில்லா இடத்தில்
மெளனமே பாஷையாக்குவோம்!

குற்றம் யார் மீது...


ஒளிந்திருக்கும் போது;
இழுத்து வருவாய்;
உறவினரோடுக்
கதைக்கச் சொல்லிக்
காதைத் திருகுவாய்!

வெட்கப்படும் எனைத்;
திட்டித்தீர்ப்பாய்;
சிறுப்பிள்ளைக்கு என்ன
கூச்சம் என்று;
முதுகில் தட்டுவாய்!

இறுகிய;
இறக்கத்தில்
இலவசமானக் குறைந்த
ஆடையில் ஊர்ச்
சுற்றிக் காட்டுவாய்!

பள்ளிப் படிப்பிலே;
வீரம்; தீரம் என்று;
சூடேற்றிக்;
காதைச் சூடேற்றும்
கைப்பேசியைக் கரத்தில்
திணித்தாய்!
மனதில்மெல்லியதாய்
ஆசையை விதைத்தாய்!

கனாவோடு உலாவரக்;
கல்லூரிக் கைக்கொடுத்தது;
நீ கொடுத்தச் சுதந்திரம்;
காற்றில் பறந்து ஆடியது;
இன்று வீட்டைவிட்டு;
காரில் பறந்து ஓடியது!

முடிந்தப்பின்னே
மூக்கைச் சிந்திப்
பயனில்லை;
ஏற்றுக்கொண்டால்
படி ஏறிவருவோம்
நம் வீட்டிற்கு;
ஒதுக்கிவிட்டால்;
ஓடுகாலிப் பெற்றோர்
என்றப் பட்டம் வரும்
உங்களுக்கு!

ஒளிந்திருக்கும் போது;
இழுத்து வருவாய்;
உறவினரோடுக்
கதைக்கச் சொல்லிக்
காதைத் திருகுவாய்!

வெட்கப்படும் எனைத்;
திட்டித்தீர்ப்பாய்;
சிறுப்பிள்ளைக்கு என்ன
கூச்சம் என்று;
முதுகில் தட்டுவாய்!

இறுகிய;
இறக்கத்தில்
இலவசமானக் குறைந்த
ஆடையில் ஊர்ச்
சுற்றிக் காட்டுவாய்!

பள்ளிப் படிப்பிலே;
வீரம்; தீரம் என்று;
சூடேற்றிக்;
காதைச் சூடேற்றும்
கைப்பேசியைக் கரத்தில்
திணித்தாய்!
மனதில்மெல்லியதாய்
ஆசையை விதைத்தாய்!

கனாவோடு உலாவரக்;
கல்லூரிக் கைக்கொடுத்தது;
நீ கொடுத்தச் சுதந்திரம்;
காற்றில் பறந்து ஆடியது;
இன்று வீட்டைவிட்டு;
காரில் பறந்து ஓடியது!

முடிந்தப்பின்னே
மூக்கைச் சிந்திப்
பயனில்லை;
ஏற்றுக்கொண்டால்
படி ஏறிவருவோம்
நம் வீட்டிற்கு;
ஒதுக்கிவிட்டால்;
ஓடுகாலிப் பெற்றோர்
என்றப் பட்டம் வரும்
உங்களுக்கு!

ஓப்பீடு..


மனம் நொறுங்கி;
தினம் அழுது;
பண வீக்கத்தால்
பாலைவனத்தில்;

இளமையை
இறுக்கப்பிடித்து;
கைப்பிடித்தவளோ
கரைக்கு அப்பால்!

இமை நனைந்து;
இதயம் அழ;
தந்தையிடம்
தளர்ந்தக் குரலில்;
தகவலோடு நான்!
 
புலுங்கியது;உள்ளம்
குலுங்கியதுப் போதும்;
தொலைபேசியில்
தொலைத்த உறவுகள்
எங்கே;
உங்கள் முகம் பார்த்து
ஊதியம் பெறமுடியாதா
அங்கே;
   
தந்தையின் சர்வச்
சாதாரணமான விடை;
ரணமாய் நெஞ்சில்;
என் காலத்தில்;
உன் அம்மாவிற்கு கடிதம்
சேரவே வாரங்கள் ஆகும்!
அழுது வடியும்
எழுத்திற்கு
உடைந்து அழும் குரல்
எவ்வளவோ மேல்!

மனம் நொறுங்கி;
தினம் அழுது;
பண வீக்கத்தால்
பாலைவனத்தில்;

இளமையை
இறுக்கப்பிடித்து;
கைப்பிடித்தவளோ
கரைக்கு அப்பால்!

இமை நனைந்து;
இதயம் அழ;
தந்தையிடம்
தளர்ந்தக் குரலில்;
தகவலோடு நான்!
 
புலுங்கியது;உள்ளம்
குலுங்கியதுப் போதும்;
தொலைபேசியில்
தொலைத்த உறவுகள்
எங்கே;
உங்கள் முகம் பார்த்து
ஊதியம் பெறமுடியாதா
அங்கே;
   
தந்தையின் சர்வச்
சாதாரணமான விடை;
ரணமாய் நெஞ்சில்;
என் காலத்தில்;
உன் அம்மாவிற்கு கடிதம்
சேரவே வாரங்கள் ஆகும்!
அழுது வடியும்
எழுத்திற்கு
உடைந்து அழும் குரல்
எவ்வளவோ மேல்!

துரோகம்..


கரம் இட;
தோளுக்கு
ஆள் பிடித்து;
அந்த ஆளுக்கு
எனைப் பிடிக்கப்;
பஞ்சணையாய்
பாசாங்குச் செய்து;
வஞ்சம் வைக்க;
தஞ்சம் கொள்வேன்;
நம்பியோரின் உறவுக்கு
நஞ்சிட்டுக் கொல்வேன்!

துர் தாகம்
ஊற்றெடுக்க;
துரோகங்கள் பீறிட;
அசையாத மனதையும்
ஆட்டிவைப்பேன்;
என் பக்கம்
தலையாட்ட வைப்பேன்!

கறுத்த விழிகளில்;
பளிச்சிடும் ஆசைகளைப்;
பதவியாய்;பணமாய்;
தோற்றம் கொடுத்துத்;
தோற்கச் செய்வேன்
நட்பினையும்
உறவினையும்
உதறச் செய்வேன்;
பாதிக்கப்பட்டவனைக்
கதறச் செய்வேன்!

கரம் இட;
தோளுக்கு
ஆள் பிடித்து;
அந்த ஆளுக்கு
எனைப் பிடிக்கப்;
பஞ்சணையாய்
பாசாங்குச் செய்து;
வஞ்சம் வைக்க;
தஞ்சம் கொள்வேன்;
நம்பியோரின் உறவுக்கு
நஞ்சிட்டுக் கொல்வேன்!

துர் தாகம்
ஊற்றெடுக்க;
துரோகங்கள் பீறிட;
அசையாத மனதையும்
ஆட்டிவைப்பேன்;
என் பக்கம்
தலையாட்ட வைப்பேன்!

கறுத்த விழிகளில்;
பளிச்சிடும் ஆசைகளைப்;
பதவியாய்;பணமாய்;
தோற்றம் கொடுத்துத்;
தோற்கச் செய்வேன்
நட்பினையும்
உறவினையும்
உதறச் செய்வேன்;
பாதிக்கப்பட்டவனைக்
கதறச் செய்வேன்!

வெளிநாட்டு வேலைபழைய நினைவுகள்
தூசுப்படிந்துக்;
காசுக்காக தேசம் கடந்துப்;
பள்ளி நண்பர்களும்;
கல்லூரி தோழர்களும்;
அலைவரிசையில்
அலையடிக்கும்;
எப்போதாவது
உள்ளத்திற்கு மகிழ்ச்சியாய்
குளிர் அடிக்கும்!

வெயிலும் பனியும்
நம் சருமத்திடம்
சரணடைந்து;
பெற்றோரின் விரலுக்கு
நம் காதுச் சமர்ப்பணமாய்;
திருகி விளையாட!

குளியலுக்காக
வாய்க்காலையும்;
வரப்புகளையும்
வலைவீசித் தேடி;
ஓடியப் பாதங்கள்;
ஓய்வாக இன்று!

என் வியர்வைகள்
குளிர்சாதனப்பெட்டிற்கு
வெட்கப்பட்டு;
மேனியில்
மறைந்துப்போய்;
வியர்வை என்பதே
மறந்துப்போய்!

கணிணிக்குக் கண்கள்
அர்ப்பணமாய்;
உடல்கள் சுற்றும்
நாற்காலிக்கு
மெத்தனமாய்!

உறவுகள்
கடலுக்கு அப்பால்;
மாதா மாதம்
பணம் மட்டும்
பயணம் செல்லும்;


பழைய நினைவுகள்
தூசுப்படிந்துக்;
காசுக்காக தேசம் கடந்துப்;
பள்ளி நண்பர்களும்;
கல்லூரி தோழர்களும்;
அலைவரிசையில்
அலையடிக்கும்;
எப்போதாவது
உள்ளத்திற்கு மகிழ்ச்சியாய்
குளிர் அடிக்கும்!

வெயிலும் பனியும்
நம் சருமத்திடம்
சரணடைந்து;
பெற்றோரின் விரலுக்கு
நம் காதுச் சமர்ப்பணமாய்;
திருகி விளையாட!

குளியலுக்காக
வாய்க்காலையும்;
வரப்புகளையும்
வலைவீசித் தேடி;
ஓடியப் பாதங்கள்;
ஓய்வாக இன்று!

என் வியர்வைகள்
குளிர்சாதனப்பெட்டிற்கு
வெட்கப்பட்டு;
மேனியில்
மறைந்துப்போய்;
வியர்வை என்பதே
மறந்துப்போய்!

கணிணிக்குக் கண்கள்
அர்ப்பணமாய்;
உடல்கள் சுற்றும்
நாற்காலிக்கு
மெத்தனமாய்!

உறவுகள்
கடலுக்கு அப்பால்;
மாதா மாதம்
பணம் மட்டும்
பயணம் செல்லும்;

சிறையென்றுமில்லை


பெண்ணும் பேனாவும்
ஓன்றோ;
மை இல்லையென்றால்
மதிப்பில்லை அன்றோ!

பால் சுரக்கும்
மார்பும்;
கணவன் காணும்
இடையும்;
காட்சிப்பொருளா என்ன?

குறுக்குறுக்கும் கவர்ச்சியும்;
தூண்டிவிடும் கிளர்ச்சியும்
ஆடவனுக்கு உண்டா?

விரசத்தோடு விழியும்;
உரச நினைக்கும் விரலும்;
ஆண்மகனுக்கு நீ விருந்தா;
நடைப்பாதையில் கடைப்போடும்
ஆண்மைவிருத்திக்கான மருந்தா?

அவமானம் ஏதுமில்லை;
அவள் மானம் பெரிது;
வெகுமானம் கண்டு;
பிறர் கண்ணை உறுத்தாதத்
தன்மானம் உண்டு!

சிறையென்றுமில்லை;
குறை இன்று வரையில்லை;
வளர்ச்சிக்குத் தடையேதுமில்லை;
முன்னேற்றத்தில்
முடமாகவில்லை!


பெண்ணும் பேனாவும்
ஓன்றோ;
மை இல்லையென்றால்
மதிப்பில்லை அன்றோ!

பால் சுரக்கும்
மார்பும்;
கணவன் காணும்
இடையும்;
காட்சிப்பொருளா என்ன?

குறுக்குறுக்கும் கவர்ச்சியும்;
தூண்டிவிடும் கிளர்ச்சியும்
ஆடவனுக்கு உண்டா?

விரசத்தோடு விழியும்;
உரச நினைக்கும் விரலும்;
ஆண்மகனுக்கு நீ விருந்தா;
நடைப்பாதையில் கடைப்போடும்
ஆண்மைவிருத்திக்கான மருந்தா?

அவமானம் ஏதுமில்லை;
அவள் மானம் பெரிது;
வெகுமானம் கண்டு;
பிறர் கண்ணை உறுத்தாதத்
தன்மானம் உண்டு!

சிறையென்றுமில்லை;
குறை இன்று வரையில்லை;
வளர்ச்சிக்குத் தடையேதுமில்லை;
முன்னேற்றத்தில்
முடமாகவில்லை!

ஊழல்..


கடமைகளைக்
கருவறுக்க;
கறுப்புப் பணம்
உருவெடுக்க;
பாமரன் கண்ணீர் வடிக்க!

ஆகாதக் காரியங்களை
ஆட்டிப்படைக்க;
ஆடாதத் தலையும்
அசைந்தாடுமே;
ஊழல்கள் கூத்தாடுமே!

வளரும் தேசத்தை
முடமாக்கும்;
அதிகாரம் வர்க்கம்
இசைந்தாடும்;
பொதுமக்கள்
வசைப்பாடும்!

பண முதலைகள்
பிரகாசிக்க;
ஊழல் பெருச்சாளிகள்
பெருத்து நிற்க;
பாவப்பட்ட விலங்கினங்கள்
பலிக்கடாவாய்;
சொல்லிக்காட்ட உதாரணமாய்!

கடமைகளைக்
கருவறுக்க;
கறுப்புப் பணம்
உருவெடுக்க;
பாமரன் கண்ணீர் வடிக்க!

ஆகாதக் காரியங்களை
ஆட்டிப்படைக்க;
ஆடாதத் தலையும்
அசைந்தாடுமே;
ஊழல்கள் கூத்தாடுமே!

வளரும் தேசத்தை
முடமாக்கும்;
அதிகாரம் வர்க்கம்
இசைந்தாடும்;
பொதுமக்கள்
வசைப்பாடும்!

பண முதலைகள்
பிரகாசிக்க;
ஊழல் பெருச்சாளிகள்
பெருத்து நிற்க;
பாவப்பட்ட விலங்கினங்கள்
பலிக்கடாவாய்;
சொல்லிக்காட்ட உதாரணமாய்!

மாமியார் வீடு


விழியில்
நிரம்பிய நீரை
வெளியேற்றும் இமைகள்;
விரல் பிடித்தப் பேனாவும்;
சோகங்களைக் கக்க!

பரிட்சயம் ஆகாத
உன் குடும்பத்துடன்;
நான் பலப்பரீட்சையில்
தனிமையாக;
தனிமையோடு உறவாட!

மாதத்தில்
வளைகுடா நீ சென்று விட;
என்னை
வளைத்து வைத்துத்
துளைத்து எடுக்கும்
உறவுகளின் வினாவினால்
விக்கித்து நிற்க;
பதில் அளிக்க நான்
வக்கற்றுப்போக!

அழுதுவிட்டு
அயர்ந்துத் தூங்கவே
நடு நிசியை எட்டிவிட;
விழித்துப்பார்த்து;
உன் உறவுகளின்
முகத்தில் விழிக்க
என் கால்கள் நடுங்கும்!

வார்த்தைச்
செவியில் விழுந்துச்;
செவில்களில்
அறைந்துவிடுமோ;
இது அம்மா வீடல்ல என்று!

விழியில்
நிரம்பிய நீரை
வெளியேற்றும் இமைகள்;
விரல் பிடித்தப் பேனாவும்;
சோகங்களைக் கக்க!

பரிட்சயம் ஆகாத
உன் குடும்பத்துடன்;
நான் பலப்பரீட்சையில்
தனிமையாக;
தனிமையோடு உறவாட!

மாதத்தில்
வளைகுடா நீ சென்று விட;
என்னை
வளைத்து வைத்துத்
துளைத்து எடுக்கும்
உறவுகளின் வினாவினால்
விக்கித்து நிற்க;
பதில் அளிக்க நான்
வக்கற்றுப்போக!

அழுதுவிட்டு
அயர்ந்துத் தூங்கவே
நடு நிசியை எட்டிவிட;
விழித்துப்பார்த்து;
உன் உறவுகளின்
முகத்தில் விழிக்க
என் கால்கள் நடுங்கும்!

வார்த்தைச்
செவியில் விழுந்துச்;
செவில்களில்
அறைந்துவிடுமோ;
இது அம்மா வீடல்ல என்று!

பெட்ரோல்..


பனிப்போரை
எரியவிட்டுச்
சாதனைக்கண்டு;
உலக நாடுகளை;
போர்கொடி ஏந்தச்செய்தப்
பெருமைப் பெற்ற
பெட்ரோல்!

வாகனங்களின்
வயிற்றுக்கு உணவாக;
சாமானியனின்
வருமானத்திற்குப்
பொடிவைத்துப்
புகையவைக்கும்
போர் ஆயுதம்!

புரியாதப்
புள்ளி விவரங்கள்
புருவத்தை பிரிக்க;
எரிப்பொருள் விலை
தீயாய் பற்றி எரிய;
மக்களின் வயிறும்
சேர்ந்துக்கொண்டு!

பனிப்போரை
எரியவிட்டுச்
சாதனைக்கண்டு;
உலக நாடுகளை;
போர்கொடி ஏந்தச்செய்தப்
பெருமைப் பெற்ற
பெட்ரோல்!

வாகனங்களின்
வயிற்றுக்கு உணவாக;
சாமானியனின்
வருமானத்திற்குப்
பொடிவைத்துப்
புகையவைக்கும்
போர் ஆயுதம்!

புரியாதப்
புள்ளி விவரங்கள்
புருவத்தை பிரிக்க;
எரிப்பொருள் விலை
தீயாய் பற்றி எரிய;
மக்களின் வயிறும்
சேர்ந்துக்கொண்டு!

விவசாயி..


கையைக் கடிக்கும் செலவைத்;
திருப்பிக் கடித்து;
விளைச்சல் கண்டப்பின்;
பயிரிட மீண்டும்;
செலவிற்குக் கையைக்
கொடுக்க!

எருவுகளை மண்ணின்
கருவுக்குச் செலுத்த;
மாநிலங்கள்
நிலங்களுக்கான நீரை ஏமாற்ற;
கருச்சிதைவுகள்
கண்ணிற்குத் தெரியாமல்!

பசுமை நீர்த்துப்போய்;
கட்டிட மனைக்குப்
பலியாகிப்போய்;
விதைத் தூவிய இடங்கள்;
மலடாகி;
கல்லுக்கும் ஜல்லிக்கும்
வாக்கப்பட்டு;
வீடாக!

கையைக் கடிக்கும் செலவைத்;
திருப்பிக் கடித்து;
விளைச்சல் கண்டப்பின்;
பயிரிட மீண்டும்;
செலவிற்குக் கையைக்
கொடுக்க!

எருவுகளை மண்ணின்
கருவுக்குச் செலுத்த;
மாநிலங்கள்
நிலங்களுக்கான நீரை ஏமாற்ற;
கருச்சிதைவுகள்
கண்ணிற்குத் தெரியாமல்!

பசுமை நீர்த்துப்போய்;
கட்டிட மனைக்குப்
பலியாகிப்போய்;
விதைத் தூவிய இடங்கள்;
மலடாகி;
கல்லுக்கும் ஜல்லிக்கும்
வாக்கப்பட்டு;
வீடாக!

அமைதி


இறுகிப்போன
இதயமும் இளகி நிற்கும்;
இஸ்லாத்தை அறிந்தப்பின்னே
உருகி நிற்கும்;

வழிந்தோடும்
விழியின் நீரும்;
செவியின் ஓரம்
சிலிர்க்கச் செய்யும்;
நாவு உரக்கச் சொல்லும்;
ஓரிறையை அழுத்திச்சொல்லும்!

அடக்கியாளும்
சினத்திற்கு;
வீரன் என்றப் பட்டம் கிட்டும்;
கோழை என்றெண்ணி;
சீண்டிப்பார்க்கும் தலையில்
கொட்டச் சொல்லும்!

அழகுப்படுத்த ஆடையை
ஒழுங்குப்படுத்தக் கற்றுத்தரும்;
இறை நம்பிக்கையோடு
இறந்துப்போனால் சுவர்க்கத்தைப்
பெற்றுத்தரும்!

முற்றும் துறந்த
முனி வேஷத்திற்குத் தடையுண்டு;
உறவினரோடு ஒன்றிவாழ்ந்தால்
கனக்கும் தராசில் எடையுண்டு!

இறுகிப்போன
இதயமும் இளகி நிற்கும்;
இஸ்லாத்தை அறிந்தப்பின்னே
உருகி நிற்கும்;

வழிந்தோடும்
விழியின் நீரும்;
செவியின் ஓரம்
சிலிர்க்கச் செய்யும்;
நாவு உரக்கச் சொல்லும்;
ஓரிறையை அழுத்திச்சொல்லும்!

அடக்கியாளும்
சினத்திற்கு;
வீரன் என்றப் பட்டம் கிட்டும்;
கோழை என்றெண்ணி;
சீண்டிப்பார்க்கும் தலையில்
கொட்டச் சொல்லும்!

அழகுப்படுத்த ஆடையை
ஒழுங்குப்படுத்தக் கற்றுத்தரும்;
இறை நம்பிக்கையோடு
இறந்துப்போனால் சுவர்க்கத்தைப்
பெற்றுத்தரும்!

முற்றும் துறந்த
முனி வேஷத்திற்குத் தடையுண்டு;
உறவினரோடு ஒன்றிவாழ்ந்தால்
கனக்கும் தராசில் எடையுண்டு!

ஒதுங்கி நிற்கும் நீ..


வருடத்திற்கு ஒரு முறை
என் வரவு என்பதால்;
மிரண்டுப் போய் நீ!

மறந்துவிட்டாய்
என அறிந்தும்;
அழைத்துப் பார்ப்பேன்-உன்
அன்னை அதட்டிப் பார்ப்பாள்!

இனிப்புகள் கொடுத்து
கரம் நீட்டினாலும்;
அன்னையின் இடுக்கில்
நின்று கரம் நீட்டுவாய்
இனிப்பிற்காக மட்டும்!

கண்டிக்கும் பிழை
நீ செய்தாலும்;
உன்னைத் தண்டிக்க
மனம் வராது;
ஒதுங்கி நிற்கும் நீ
என்னை ஒதுக்கிவிடுவாயோ
என்றெண்ணி!

வருடத்திற்கு ஒரு முறை
என் வரவு என்பதால்;
மிரண்டுப் போய் நீ!

மறந்துவிட்டாய்
என அறிந்தும்;
அழைத்துப் பார்ப்பேன்-உன்
அன்னை அதட்டிப் பார்ப்பாள்!

இனிப்புகள் கொடுத்து
கரம் நீட்டினாலும்;
அன்னையின் இடுக்கில்
நின்று கரம் நீட்டுவாய்
இனிப்பிற்காக மட்டும்!

கண்டிக்கும் பிழை
நீ செய்தாலும்;
உன்னைத் தண்டிக்க
மனம் வராது;
ஒதுங்கி நிற்கும் நீ
என்னை ஒதுக்கிவிடுவாயோ
என்றெண்ணி!

விற்பனைக்கு அல்ல


ஆண் மகனின்
பட்டங்கள் கிரயமாக;
எனக்காக நடக்கும்
கருத்துக்கணிப்பு!

வித்தியாசமான விலைகளில்
இளங்காளைகள்
முதுகலையும்
இளங்கலையுமாக!

ஏற்றம் இறக்கும்
கொண்ட ஏலத்தில்
உள்நாடு வெளிநாடு
மாபிள்ளைக் கிராக்கிகள்!

நல்லப் பெண்ணா என்று;
நகையைக் கொண்டு
என்னை எடைப்போடும்;
மதிப்புள்ள நகைக்கு முன்னே;
என் புன்னைகைப்
புண்ணாகிப்போக;
வரவுகள் வாசலைக் கண்டு
நடைப்போடும்!

மென்மையானப்
பெண்மையைச்
சீண்டிப்பார்க்கும் கொடுமை;
தட்சணை என்ற வன்மை!

செலவோடுச் செலவாக;
இனி தொங்கவிடவேண்டும்
கதவுகளில் - நான்
விற்பனைக்கு அல்ல!

ஆண் மகனின்
பட்டங்கள் கிரயமாக;
எனக்காக நடக்கும்
கருத்துக்கணிப்பு!

வித்தியாசமான விலைகளில்
இளங்காளைகள்
முதுகலையும்
இளங்கலையுமாக!

ஏற்றம் இறக்கும்
கொண்ட ஏலத்தில்
உள்நாடு வெளிநாடு
மாபிள்ளைக் கிராக்கிகள்!

நல்லப் பெண்ணா என்று;
நகையைக் கொண்டு
என்னை எடைப்போடும்;
மதிப்புள்ள நகைக்கு முன்னே;
என் புன்னைகைப்
புண்ணாகிப்போக;
வரவுகள் வாசலைக் கண்டு
நடைப்போடும்!

மென்மையானப்
பெண்மையைச்
சீண்டிப்பார்க்கும் கொடுமை;
தட்சணை என்ற வன்மை!

செலவோடுச் செலவாக;
இனி தொங்கவிடவேண்டும்
கதவுகளில் - நான்
விற்பனைக்கு அல்ல!

வீடியோப் போஸ்..


வெட்கத்தைப்
படம்பிடித்துக் காட்ட;
பெண்கள் கூட்டத்தில்
வெளிச்சம் போட்டுச்
சிரித்துக்கொண்டே
வீடியோக்காரன்!

வெட்கிக்கொண்டே;
வெட்கத்தை
வெளியேற்றிக் கொண்டே;
முகம் காட்டும்
அகம் கறுத்த மங்கைகள்!

மலறும் முகம்
மணவாளனுக்காக;
வாசம் வீசுவதற்கு முன்னே;
ரசித்து எடுக்க
வீடியோக்காரன்
மணவாளியின் அறையில்;
குடும்ப அனுமதியுடன்!

தவறிவிழும் தாவணியும்;
ஒதுங்கிக் கிடக்கும்
முந்தாணியும் தப்பாமல்
ஓரக்கண்ணின்
ஓலி ஓளி நாடாவில்!

விட்டுப்பிரிந்த உறவுகளை
விழிகளில் அடைக்க;
திருமண வீடியோக்கள்;
வளைகுடா அறைகளில்!

அறிந்தவன் அறியாதவன்;
அனைவரும் கண்டுக்களிக்க;
அடுத்தவன் விழிகளுக்கு
விருந்துக் கொடுக்க;
வெட்கம் கெட்டுப்போன
சமாச்சாரங்களுக்காகச்
சமபந்திப் போஜனம்;

வெட்கத்தைப்
படம்பிடித்துக் காட்ட;
பெண்கள் கூட்டத்தில்
வெளிச்சம் போட்டுச்
சிரித்துக்கொண்டே
வீடியோக்காரன்!

வெட்கிக்கொண்டே;
வெட்கத்தை
வெளியேற்றிக் கொண்டே;
முகம் காட்டும்
அகம் கறுத்த மங்கைகள்!

மலறும் முகம்
மணவாளனுக்காக;
வாசம் வீசுவதற்கு முன்னே;
ரசித்து எடுக்க
வீடியோக்காரன்
மணவாளியின் அறையில்;
குடும்ப அனுமதியுடன்!

தவறிவிழும் தாவணியும்;
ஒதுங்கிக் கிடக்கும்
முந்தாணியும் தப்பாமல்
ஓரக்கண்ணின்
ஓலி ஓளி நாடாவில்!

விட்டுப்பிரிந்த உறவுகளை
விழிகளில் அடைக்க;
திருமண வீடியோக்கள்;
வளைகுடா அறைகளில்!

அறிந்தவன் அறியாதவன்;
அனைவரும் கண்டுக்களிக்க;
அடுத்தவன் விழிகளுக்கு
விருந்துக் கொடுக்க;
வெட்கம் கெட்டுப்போன
சமாச்சாரங்களுக்காகச்
சமபந்திப் போஜனம்;

பட்டினி...


ஏங்கிப்போன
விழிகளும்;
தூங்க மறுக்கும்
வயிறும்;
பேசிக்கொள்ளும் மொழி;
பசி!

அடிவயிறு அலற;
முதுகுத்தண்டு
நிமிர மறுக்க;
மென்றுத் திண்ணும்;
குடல்களும்
கூப்பாடுப்போடும்;
சாப்பாடுப்போட
ஆளில்லாததால்!

ஏங்கிப்போன
விழிகளும்;
தூங்க மறுக்கும்
வயிறும்;
பேசிக்கொள்ளும் மொழி;
பசி!

அடிவயிறு அலற;
முதுகுத்தண்டு
நிமிர மறுக்க;
மென்றுத் திண்ணும்;
குடல்களும்
கூப்பாடுப்போடும்;
சாப்பாடுப்போட
ஆளில்லாததால்!

குழிக் கண்டச் சாலை


சுரண்டும் ஊழலால்;
குழிவிழுந்தச் சாலை;
பயணத்தின் போதேப்
உடற்பயிற்சிக் கொடுக்கும்
அரசின் தந்திரம்!

ஒழிக்க வேண்டியக்
கலப்படங்கள் உணவிலே;
சேர்க்க வேண்டியக்
கலப்படங்கள் சாலைகளில்
ஒதுக்கப்பட்டதால்;
மலுங்கிப்போன பாதைகளில்
நாங்கள் குலுங்கி குலுங்கி!

தேங்கி நிற்கும் குழிகளில்;
வாகங்களின் சக்கரத்தில்
நசுக்கப்பட்ட நீர்;
சில நேரங்களில்
எங்கள் சட்டைகளிலும்!

இளமையிலேப்
பொக்கை விழுந்த;
நோய் கொண்டச் சாலை!

சுரண்டும் ஊழலால்;
குழிவிழுந்தச் சாலை;
பயணத்தின் போதேப்
உடற்பயிற்சிக் கொடுக்கும்
அரசின் தந்திரம்!

ஒழிக்க வேண்டியக்
கலப்படங்கள் உணவிலே;
சேர்க்க வேண்டியக்
கலப்படங்கள் சாலைகளில்
ஒதுக்கப்பட்டதால்;
மலுங்கிப்போன பாதைகளில்
நாங்கள் குலுங்கி குலுங்கி!

தேங்கி நிற்கும் குழிகளில்;
வாகங்களின் சக்கரத்தில்
நசுக்கப்பட்ட நீர்;
சில நேரங்களில்
எங்கள் சட்டைகளிலும்!

இளமையிலேப்
பொக்கை விழுந்த;
நோய் கொண்டச் சாலை!

நவீனக் கட்டணக்..


தேகத்தைக் கெடுக்கும்
மூச்சுப்பயிற்சிக் கூடம்;
முகத்தோடுச் சேர்த்து
மூக்கையும் சுளிக்கச் செய்யும்!

முகப்பின் வர்ணங்களால்
விழிகளை ஏமாற்றி;
நவீனம் என்ற ஒர்
வரியில் விலை
மட்டும் ஏற்றம்;
ஒன்றில் இருந்து இரண்டு!

கைக்குட்டைக்
கைக் கொடுக்க;
முகம் மூடி;
கொள்ளையர்கள் போல்!

தேகத்தைக் கெடுக்கும்
மூச்சுப்பயிற்சிக் கூடம்;
முகத்தோடுச் சேர்த்து
மூக்கையும் சுளிக்கச் செய்யும்!

முகப்பின் வர்ணங்களால்
விழிகளை ஏமாற்றி;
நவீனம் என்ற ஒர்
வரியில் விலை
மட்டும் ஏற்றம்;
ஒன்றில் இருந்து இரண்டு!

கைக்குட்டைக்
கைக் கொடுக்க;
முகம் மூடி;
கொள்ளையர்கள் போல்!

வெங்காயம்..


ஏறிப்போன விலையால்
மாறி நிற்கும் விழிகள்;
அழ வைக்கும்
தோல்களுக்கு;
அழுதுபுலம்பும் குழம்பு!

உயர்ந்துப்போனப்
பொன்னகையால்;
மக்களுக்கு மறந்துப்போனப்
புன்னகை;
காரம் வீசும் காய்கறியால்
கண்களைக் கசக்கும்
இந்த நிலை!

பூட்டிவைக்கும் பொருட்களில்
இதுவும் ஒன்று என்றாயிற்று;
ஒன்றுமில்லை வார்த்தைக்கு;
வெங்காயம் அருகதை
இழந்து நாளாயிற்று!

ஏறிப்போன விலையால்
மாறி நிற்கும் விழிகள்;
அழ வைக்கும்
தோல்களுக்கு;
அழுதுபுலம்பும் குழம்பு!

உயர்ந்துப்போனப்
பொன்னகையால்;
மக்களுக்கு மறந்துப்போனப்
புன்னகை;
காரம் வீசும் காய்கறியால்
கண்களைக் கசக்கும்
இந்த நிலை!

பூட்டிவைக்கும் பொருட்களில்
இதுவும் ஒன்று என்றாயிற்று;
ஒன்றுமில்லை வார்த்தைக்கு;
வெங்காயம் அருகதை
இழந்து நாளாயிற்று!

இறக்கும் வரை...


வெட்டி நிற்கும்
உறவுகளையும்;
தோளோடுக் கட்டிச்
சேர்க்கும் தொழுகை;
கறைப்படிந்த
உள்ளத்தைக் கழுவ;
இறவனிடம் மன்றாடும்
அழுகை!

ஏற்றுக்கொண்டு வந்தப்பின்பு;
ஏற்றத்தாழ்வு இல்லை இங்கு!
தரையைத் தொட்டு
நிற்கும் நெற்றியும்;
பாதம் சேர்த்து
நிற்கும் நேர்த்தியும்;
விழிகளை விரிக்கச்செய்யும்;
புருவங்களை உயர்த்தச்செய்யும்!

இறக்கும்வரை
இலக்கு இதற்கேதுமில்லை;
தொழுகை விட்டவன் எவனும்
உம்மத்தில் ஒருவனாய்
இருப்பதில்லை!

வெட்டி நிற்கும்
உறவுகளையும்;
தோளோடுக் கட்டிச்
சேர்க்கும் தொழுகை;
கறைப்படிந்த
உள்ளத்தைக் கழுவ;
இறவனிடம் மன்றாடும்
அழுகை!

ஏற்றுக்கொண்டு வந்தப்பின்பு;
ஏற்றத்தாழ்வு இல்லை இங்கு!
தரையைத் தொட்டு
நிற்கும் நெற்றியும்;
பாதம் சேர்த்து
நிற்கும் நேர்த்தியும்;
விழிகளை விரிக்கச்செய்யும்;
புருவங்களை உயர்த்தச்செய்யும்!

இறக்கும்வரை
இலக்கு இதற்கேதுமில்லை;
தொழுகை விட்டவன் எவனும்
உம்மத்தில் ஒருவனாய்
இருப்பதில்லை!

அவள் அப்படித்தான்


இடுப்பைக் காட்டிச்
சேலைக் கட்டி;
இமைகள் வண்டுகளாய்
ஊறும்போது;
இழுத்துச் சொருகிக்
கொள்ளும் பாவை!

மார்பை மறைக்கும்
துப்பாட்டாக்கள் ;
கழுத்தை மட்டும்
சுற்றிக்கொள்ள;
விட்டில் பூச்சிக்
களவுக் கண்கள்
உளவுக்குச் செல்ல;
அனைத்தும் தெரிந்து;
அன்ன நடைப்போடும்
பெண்மை!

இறுக்கப்பிடிக்கும்
ஆடைகளில்;
இறுகிப்போய்;
சலசலக்கும் துணிகளில்;
உறுப்புகளை
பார்வையின் விற்பனைக்குத்
தந்துச் செல்லும் பேதை!

உள்ளுக்குள் உறுத்தல்
இருந்தால்
விழிகள் விகாரமாகத்தான்
காட்சித்தரும் என்று;
ஆண்மையைப்
பதம் பார்க்கும்;
பெண்மைச்
சிரித்துக்கொண்டேச் செல்லும்!

இடுப்பைக் காட்டிச்
சேலைக் கட்டி;
இமைகள் வண்டுகளாய்
ஊறும்போது;
இழுத்துச் சொருகிக்
கொள்ளும் பாவை!

மார்பை மறைக்கும்
துப்பாட்டாக்கள் ;
கழுத்தை மட்டும்
சுற்றிக்கொள்ள;
விட்டில் பூச்சிக்
களவுக் கண்கள்
உளவுக்குச் செல்ல;
அனைத்தும் தெரிந்து;
அன்ன நடைப்போடும்
பெண்மை!

இறுக்கப்பிடிக்கும்
ஆடைகளில்;
இறுகிப்போய்;
சலசலக்கும் துணிகளில்;
உறுப்புகளை
பார்வையின் விற்பனைக்குத்
தந்துச் செல்லும் பேதை!

உள்ளுக்குள் உறுத்தல்
இருந்தால்
விழிகள் விகாரமாகத்தான்
காட்சித்தரும் என்று;
ஆண்மையைப்
பதம் பார்க்கும்;
பெண்மைச்
சிரித்துக்கொண்டேச் செல்லும்!

பாரமாய் நான்..


உனக்கு விவரம்
தெரியா வயதில்;
அள்ளி அணைத்து;
முகர்ந்துப்பார்த்து
மூச்சுவிடுவேன்!

மெத்தை முழுதும் உன்
வித்தை நனைத்தாலும்;
சிரித்துக்கொண்டே
வாரியணைப்பேன்!

என் தோள்கள்
உனக்கு நாற்காலியாகவும்;
விரல்கள் உனக்கு
வழித்துணையாகவும்!
உன் கல்விற்குக்
கடல்கடந்து;
நீயோ என் முகம் மறந்து;
கடிதங்களில் உன் கிறுக்கல்கள்;
மலைப்பாக எனக்கு!

ஒய்வுப்பெற்று
ஓரமாய் நான் இன்று;
என் அறிவுறைகளை
உன் செவிகளின் சவ்வுகளும்
கதவைச் சாத்திக்கொள்ள;

கனத்தாலும் என்
தோள்கள் இறக்கிவிடாது
உன்னை அன்று;
ஒரமாய் இருந்தாலும்
பாரமாய் இன்று நான்;
உனக்கும் உன்
மனைவிற்கும்!

உனக்கு விவரம்
தெரியா வயதில்;
அள்ளி அணைத்து;
முகர்ந்துப்பார்த்து
மூச்சுவிடுவேன்!

மெத்தை முழுதும் உன்
வித்தை நனைத்தாலும்;
சிரித்துக்கொண்டே
வாரியணைப்பேன்!

என் தோள்கள்
உனக்கு நாற்காலியாகவும்;
விரல்கள் உனக்கு
வழித்துணையாகவும்!
உன் கல்விற்குக்
கடல்கடந்து;
நீயோ என் முகம் மறந்து;
கடிதங்களில் உன் கிறுக்கல்கள்;
மலைப்பாக எனக்கு!

ஒய்வுப்பெற்று
ஓரமாய் நான் இன்று;
என் அறிவுறைகளை
உன் செவிகளின் சவ்வுகளும்
கதவைச் சாத்திக்கொள்ள;

கனத்தாலும் என்
தோள்கள் இறக்கிவிடாது
உன்னை அன்று;
ஒரமாய் இருந்தாலும்
பாரமாய் இன்று நான்;
உனக்கும் உன்
மனைவிற்கும்!

என் கவிதை


எரிச்சல் கொண்ட
உள்ளத்திற்கு
எரிச்சல் கொடுக்கும்
வரிகளாய் தோன்றும்!

மூடிக்கிடக்கும் சோகங்களைத்
தோண்டிப் பார்க்கும்
அர்த்தம்!

வருத்தம் காணும்
விழிகளுக்குப்
பொருத்தமாய்
நீர் துளிகள்!

வலிகள் உணர்ந்துப்;
பலியாகி இருக்கும்
ஊமைக் காயங்களுக்குப்;
பிரிந்துவாழும் இதயங்களுக்குப்
பரிந்துபேசும் வரிகள்!

விமர்சனங்கள்;
சில நேரங்களில்
விமர்சினமாய்;
ரணமாய் வந்தாலும்;
குணமாக்கும் சிலருக்கு
என்பதால்
வரிகள் அழுவதை
நிறுத்த இயலவில்லை!

எரிச்சல் கொண்ட
உள்ளத்திற்கு
எரிச்சல் கொடுக்கும்
வரிகளாய் தோன்றும்!

மூடிக்கிடக்கும் சோகங்களைத்
தோண்டிப் பார்க்கும்
அர்த்தம்!

வருத்தம் காணும்
விழிகளுக்குப்
பொருத்தமாய்
நீர் துளிகள்!

வலிகள் உணர்ந்துப்;
பலியாகி இருக்கும்
ஊமைக் காயங்களுக்குப்;
பிரிந்துவாழும் இதயங்களுக்குப்
பரிந்துபேசும் வரிகள்!

விமர்சனங்கள்;
சில நேரங்களில்
விமர்சினமாய்;
ரணமாய் வந்தாலும்;
குணமாக்கும் சிலருக்கு
என்பதால்
வரிகள் அழுவதை
நிறுத்த இயலவில்லை!

தியாகத்தின் நிறம் பச்சைஅடிமைப்பட்ட உரிமையை
மீட்டெடுக்கக் 
கொண்ட மோகம்;
தேகங்களில் சுதந்திரத்தாகம்!

அனல் பறக்கக்;
கனல் கொண்டக்
கரத்தில் எதிரிகளைச்
சல்லடையாக்கச்
சில்லறைக்கு மயங்காத வீரம்!

தியாகத்திற்குப்
பச்சை நிறமிட்டு;
எச்சங்களைத் துச்சமாக்கிச்;
சொர்க்கத்திற்கு நுழைவாயிலான
விடுதலை வேட்கை!

எங்கள் தியாகங்கள்;
துரோகமானக் சோகக்கதை;
அந்நியனை விரட்டிய
நாங்கள் அந்நியமாய்;
கழுத்தறுக்கப்பட்டு;
ஓதுக்கப்பட்ட
ஓரவஞ்சனையின் ஓலம்!

முழக்கங்கள்
முடக்கப்பட்டு;
சரித்திரங்கள் மறைக்கப்பட்ட;
ஓரத்திலிருந்து;
ஓதுக்கப்பட்ட ஓர்
இஸ்லாமியனின் அடிக்குரல்!


அடிமைப்பட்ட உரிமையை
மீட்டெடுக்கக் 
கொண்ட மோகம்;
தேகங்களில் சுதந்திரத்தாகம்!

அனல் பறக்கக்;
கனல் கொண்டக்
கரத்தில் எதிரிகளைச்
சல்லடையாக்கச்
சில்லறைக்கு மயங்காத வீரம்!

தியாகத்திற்குப்
பச்சை நிறமிட்டு;
எச்சங்களைத் துச்சமாக்கிச்;
சொர்க்கத்திற்கு நுழைவாயிலான
விடுதலை வேட்கை!

எங்கள் தியாகங்கள்;
துரோகமானக் சோகக்கதை;
அந்நியனை விரட்டிய
நாங்கள் அந்நியமாய்;
கழுத்தறுக்கப்பட்டு;
ஓதுக்கப்பட்ட
ஓரவஞ்சனையின் ஓலம்!

முழக்கங்கள்
முடக்கப்பட்டு;
சரித்திரங்கள் மறைக்கப்பட்ட;
ஓரத்திலிருந்து;
ஓதுக்கப்பட்ட ஓர்
இஸ்லாமியனின் அடிக்குரல்!

என் ஈரக்குலை


வெடிச் சத்தம் மட்டும்
தினம் துணையாய்;
பிணங்களால் இடம்
நெருக்கடியாய்;
ஓலம் மட்டும்
முதல் மொழியாய்;
உலக நாடுகள்
இதற்கு உறுதுணையாய்;
அப்பாவிகள் நாங்கள்
பாலஸ்தீனியர்களாய்!

விழிகளுக்குத் திரையிட்டு
வழிகளை அடைத்துக்கொண்டு;
பிணந்திண்ணி நாடுகள்
பறைச்சாற்றும்;
எங்களின் மீதே
குற்றம் சாட்டும்!

விதைகள்
வேர் விடுவதற்கு முன்னே;
விழுந்துவிடும்;
நிலங்கள் குருதிகளால்;
குளித்துவிடும்!

தட்டிக்கேட்க யாருமில்லை;
தடுத்து நிறுத்த மனமில்லை;
குரல்கொடுக்க எவருமில்லை;
கொடுக்கும் எவருக்கும்
மண்ணில் இடமில்லை!

வெடிச் சத்தம் மட்டும்
தினம் துணையாய்;
பிணங்களால் இடம்
நெருக்கடியாய்;
ஓலம் மட்டும்
முதல் மொழியாய்;
உலக நாடுகள்
இதற்கு உறுதுணையாய்;
அப்பாவிகள் நாங்கள்
பாலஸ்தீனியர்களாய்!

விழிகளுக்குத் திரையிட்டு
வழிகளை அடைத்துக்கொண்டு;
பிணந்திண்ணி நாடுகள்
பறைச்சாற்றும்;
எங்களின் மீதே
குற்றம் சாட்டும்!

விதைகள்
வேர் விடுவதற்கு முன்னே;
விழுந்துவிடும்;
நிலங்கள் குருதிகளால்;
குளித்துவிடும்!

தட்டிக்கேட்க யாருமில்லை;
தடுத்து நிறுத்த மனமில்லை;
குரல்கொடுக்க எவருமில்லை;
கொடுக்கும் எவருக்கும்
மண்ணில் இடமில்லை!

எரிச்சல்...


புருவம் இரண்டும்
புடைத்து நிற்க;
பற்கள் அனைத்தும்
ஒட்டிக்கிடக்க;
கண்கள் மட்டும்
சிவந்துக்கிடக்க!

முட்டி நிற்கும்
கோபமும்;
ஈரம் பூத்த
விரல்களும்;
இதயத்துடிப்பை
இழுத்துச்செல்லும்!

உதடுகள்
முணங்கிக்கொண்டே
மெல்லத்திறக்க;
நாவு மட்டும்
நளினமாய் சுழலும்;
எதிரே நிற்பவரின்
முகம் சுருங்கும்!

எரித்தப் பின்னேக்
கரியாய் போகும்;
வாசம் மட்டும்
வாசலில் நிற்கும்;
ஒட்டி வாழும்
உறவுகள் தோற்கும்;
உளச்சலை ஊட்டும்
எரிச்சல் வேண்டாம்!

புருவம் இரண்டும்
புடைத்து நிற்க;
பற்கள் அனைத்தும்
ஒட்டிக்கிடக்க;
கண்கள் மட்டும்
சிவந்துக்கிடக்க!

முட்டி நிற்கும்
கோபமும்;
ஈரம் பூத்த
விரல்களும்;
இதயத்துடிப்பை
இழுத்துச்செல்லும்!

உதடுகள்
முணங்கிக்கொண்டே
மெல்லத்திறக்க;
நாவு மட்டும்
நளினமாய் சுழலும்;
எதிரே நிற்பவரின்
முகம் சுருங்கும்!

எரித்தப் பின்னேக்
கரியாய் போகும்;
வாசம் மட்டும்
வாசலில் நிற்கும்;
ஒட்டி வாழும்
உறவுகள் தோற்கும்;
உளச்சலை ஊட்டும்
எரிச்சல் வேண்டாம்!

மருதாணி..


நிறம் மாறா
வண்ணமும்;
நிலைக் குலைந்த என்
எண்ணமும்;
மணம் வீசும்
மருதாணியாக;
மலர்ந்த என் கரத்தில்!

அலங்கரித்துக் காண்பிக்க
வேண்டிய ஆடைகள்
இன்னும் மிச்சமிருந்து
அடம்பிடிக்க;
நீ இல்லாமல் போனதால்;
என் அலமாரியில்
இடம் பிடிக்க!

புதுப்பெண் என
எல்லோரும் என்
தாடையை இடிக்க;
சொட்டுச் சொட்டாய்
விழி நீர் என் கரம் நனைக்க;
வழிந்தும் அழியா
என் மருதாணி!

நிறம் மாறா
வண்ணமும்;
நிலைக் குலைந்த என்
எண்ணமும்;
மணம் வீசும்
மருதாணியாக;
மலர்ந்த என் கரத்தில்!

அலங்கரித்துக் காண்பிக்க
வேண்டிய ஆடைகள்
இன்னும் மிச்சமிருந்து
அடம்பிடிக்க;
நீ இல்லாமல் போனதால்;
என் அலமாரியில்
இடம் பிடிக்க!

புதுப்பெண் என
எல்லோரும் என்
தாடையை இடிக்க;
சொட்டுச் சொட்டாய்
விழி நீர் என் கரம் நனைக்க;
வழிந்தும் அழியா
என் மருதாணி!

அருள் மறை..


ஒளி வீசும்
அருள் கொண்டு;
இருள் விலகும்
வெட்கிக்கொண்டு!

பொதிந்திருக்கும்
உண்மைக் கண்டு;
புருவம் உயர்த்தும்
உலகம் இன்று!

மெய்யை மட்டும்
சுமந்துக்கொண்டு;
பொய்யை தகர்க்கும்
வரியைக் கொண்டு!

சுவனம் காண
இதயம் துடிக்கும்;
எடுத்துப் படித்தால்
உள்ளம் சிரிக்கும்;
மணக்கும் ஈமான்
மலர்ந்து நிற்கும்;
மறையோனின்
வல்லமைக் கண்டு;
இமைகள் நனைந்துக் கிடக்கும்!

ஒளி வீசும்
அருள் கொண்டு;
இருள் விலகும்
வெட்கிக்கொண்டு!

பொதிந்திருக்கும்
உண்மைக் கண்டு;
புருவம் உயர்த்தும்
உலகம் இன்று!

மெய்யை மட்டும்
சுமந்துக்கொண்டு;
பொய்யை தகர்க்கும்
வரியைக் கொண்டு!

சுவனம் காண
இதயம் துடிக்கும்;
எடுத்துப் படித்தால்
உள்ளம் சிரிக்கும்;
மணக்கும் ஈமான்
மலர்ந்து நிற்கும்;
மறையோனின்
வல்லமைக் கண்டு;
இமைகள் நனைந்துக் கிடக்கும்!

அவன் அப்படித்தான்..


போர்த்தியிருக்கும்
ஆடையைக் கண்டு;
புருவம் சுளிக்கும்;

இடையில் தெரியும்
இடையைக் கண்டு;
இமைச் சிமிட்டும்!

சேலையை விலக்கும்
காற்றைக் கண்டு;
உதடுகள் போகும்;
செவியின் பக்கம்!

எச்சம் கொண்ட
விழிகள் இரண்டும்;
வலை வீசும்
மகளிர் கண்டு!

அக்காள் தங்கைக்குச்
சிறையாய் இருந்து;
அன்னைக்கு அரணாய் இருந்து;
மனைவிற்கு உறையாய் இருந்து;
அடுத்தப் பெண்டிற்கு மட்டும்
அவலாசைக் கொள்ளும்
ஆண் மகன்!

போர்த்தியிருக்கும்
ஆடையைக் கண்டு;
புருவம் சுளிக்கும்;

இடையில் தெரியும்
இடையைக் கண்டு;
இமைச் சிமிட்டும்!

சேலையை விலக்கும்
காற்றைக் கண்டு;
உதடுகள் போகும்;
செவியின் பக்கம்!

எச்சம் கொண்ட
விழிகள் இரண்டும்;
வலை வீசும்
மகளிர் கண்டு!

அக்காள் தங்கைக்குச்
சிறையாய் இருந்து;
அன்னைக்கு அரணாய் இருந்து;
மனைவிற்கு உறையாய் இருந்து;
அடுத்தப் பெண்டிற்கு மட்டும்
அவலாசைக் கொள்ளும்
ஆண் மகன்!

ஒதுக்கப்பட்ட..


ஓட்டமெடுக்கும்
உலகத்தின் வேகத்தில்;
ஓட்டை விழுந்த
மனிதனின் பலம்!

சுருங்கிப்போன நேரத்தால்
பல்கிவிட்ட
அவசர உணவு;
ஒவ்வாமை வந்தாலும்
ஓரத்தில்தான் பழம்!

நோயாளிகளின்
உணவு என
முத்திரையிடப்பட்டச்
சத்துக்கள் செறிந்த
ஆகாரம்!

ஓட்டமெடுக்கும்
உலகத்தின் வேகத்தில்;
ஓட்டை விழுந்த
மனிதனின் பலம்!

சுருங்கிப்போன நேரத்தால்
பல்கிவிட்ட
அவசர உணவு;
ஒவ்வாமை வந்தாலும்
ஓரத்தில்தான் பழம்!

நோயாளிகளின்
உணவு என
முத்திரையிடப்பட்டச்
சத்துக்கள் செறிந்த
ஆகாரம்!