பணம் மட்டுமே


அலையும் 
மானிடத்தின்
காகித தேவைகள்;
மானுடத்தையே 
அலையவிட்ட 
காகிதம்!

பிறப்பிலிருந்து
இறப்புவரை
இறுக்கிப்பிடித்தவாறு
காகிதம்;
சில காகிதங்களுக்கு
காணமல் போகும்
மானுடத்தின் மாண்புகள்!

காகிதம் விழுந்த
குப்பைத்தொட்டிகளும்
மதிப்பு மிகுந்து;
குப்பைகளாக மாற்றும்
மானிடத்தை
காகித தேவை!

அடிப்படை தேவைகளும்
காகிதத்தின் அடியில்
சிக்குண்டதால்;
சிக்கிதான் தவிக்கிறது
மானிடத்தின்
அடிப்படை அன்புகளும்
அரவணைப்புகளும்!

இறந்த தலைவர்கள்
புன்னைகையோடு
பூரித்தாலும் காகிதத்தில்;
புன்னகைக்காக
மானுடம்
காகிதங்களை தேடி!

பெரிதல்ல காகிதமென
காது கிழிய
கத்தினாலும் – தினம்
காகிதத்திற்காக
குற்றுயிரும்
கொலையுருமாக
மானுடம்!

உறவுகள்
முகம் பார்த்து
பூரிப்பதும்;
முகம் உடைத்து
முறிப்பதும்
முழு காரணியுமாக
முணகலுடன் காகிதம்!

பெற்றோரும்; உற்றாரும்
உற்று நோக்கும் காகிதம்;
பெயருக்குதான்
மூன்றெழுத்தில் பணம்;
செல்லாத இடங்களிலும்
செல்லுபடியாகும்
இவைதான் நிர்ணயிக்கின்றன
மானுடத்தின் மனதில்
புன்னகையா; பூகம்பமா என!

சொந்தங்களின் சோதனை;
இரத்தப்பந்துக்களின்
தோரணை;
உடல் நிலையில் வேதனை;
எடை குறைந்த
காகிதங்களால்;
எடை மிகுந்துபோய்
மனவேதனையில்
மானுடம்!அலையும் 
மானிடத்தின்
காகித தேவைகள்;
மானுடத்தையே 
அலையவிட்ட 
காகிதம்!

பிறப்பிலிருந்து
இறப்புவரை
இறுக்கிப்பிடித்தவாறு
காகிதம்;
சில காகிதங்களுக்கு
காணமல் போகும்
மானுடத்தின் மாண்புகள்!

காகிதம் விழுந்த
குப்பைத்தொட்டிகளும்
மதிப்பு மிகுந்து;
குப்பைகளாக மாற்றும்
மானிடத்தை
காகித தேவை!

அடிப்படை தேவைகளும்
காகிதத்தின் அடியில்
சிக்குண்டதால்;
சிக்கிதான் தவிக்கிறது
மானிடத்தின்
அடிப்படை அன்புகளும்
அரவணைப்புகளும்!

இறந்த தலைவர்கள்
புன்னைகையோடு
பூரித்தாலும் காகிதத்தில்;
புன்னகைக்காக
மானுடம்
காகிதங்களை தேடி!

பெரிதல்ல காகிதமென
காது கிழிய
கத்தினாலும் – தினம்
காகிதத்திற்காக
குற்றுயிரும்
கொலையுருமாக
மானுடம்!

உறவுகள்
முகம் பார்த்து
பூரிப்பதும்;
முகம் உடைத்து
முறிப்பதும்
முழு காரணியுமாக
முணகலுடன் காகிதம்!

பெற்றோரும்; உற்றாரும்
உற்று நோக்கும் காகிதம்;
பெயருக்குதான்
மூன்றெழுத்தில் பணம்;
செல்லாத இடங்களிலும்
செல்லுபடியாகும்
இவைதான் நிர்ணயிக்கின்றன
மானுடத்தின் மனதில்
புன்னகையா; பூகம்பமா என!

சொந்தங்களின் சோதனை;
இரத்தப்பந்துக்களின்
தோரணை;
உடல் நிலையில் வேதனை;
எடை குறைந்த
காகிதங்களால்;
எடை மிகுந்துபோய்
மனவேதனையில்
மானுடம்!


வண்ணப்படத்திற்கு வாஅழுக்கு ஆடையும்
எண்ணை வழிந்த முகமும்;
சீவாத சிகையும்
சிரிப்பை உதிக்காத உதடும்;
குடிலில் குடும்பத்தோடு
கணவனும் மனைவியும்!

புறம் செல்ல விருந்தோ;
உறவினரைக் காண
புறமோ சென்றால்;
அழுது வடியும் முகமும்
நெடியேற்றும்
வாசனைத் திரவியமும்;
புத்தம் புது ஆடைகளோடு
பூப்பறிக்கும்!

உடையவருக்கு
காட்ட வேண்டிய
அழகை ஊருக்கும்;
ஊருக்கு காட்டக்கூடாத
தோரணையை உடையவருக்கும்!

எடுத்துச் சொல்ல
எவருமில்லை;
சொல்லிக் கொடுத்தாலும்
புரிவதில்லை;
அடுத்தென்ன நடக்குமென்று
அய்யகோ
உங்களுக்கு விளங்கவில்லை!

வலிமையிழந்த மானுடமே
வழிக்கெட்டுப் போகும்;
விழித் தடுமாறி நோக்கும்;
குரங்காய் இருந்தாலும்
மனம் கும்மாளம் போடும்;

அவனோ அவளோ;
ஆளுக்கொருவர்
ஆடையாய் இருங்கள்;
கந்தலாகிப் போனால்
கரித் துணியாக
கடைசியில்!!
அழுக்கு ஆடையும்
எண்ணை வழிந்த முகமும்;
சீவாத சிகையும்
சிரிப்பை உதிக்காத உதடும்;
குடிலில் குடும்பத்தோடு
கணவனும் மனைவியும்!

புறம் செல்ல விருந்தோ;
உறவினரைக் காண
புறமோ சென்றால்;
அழுது வடியும் முகமும்
நெடியேற்றும்
வாசனைத் திரவியமும்;
புத்தம் புது ஆடைகளோடு
பூப்பறிக்கும்!

உடையவருக்கு
காட்ட வேண்டிய
அழகை ஊருக்கும்;
ஊருக்கு காட்டக்கூடாத
தோரணையை உடையவருக்கும்!

எடுத்துச் சொல்ல
எவருமில்லை;
சொல்லிக் கொடுத்தாலும்
புரிவதில்லை;
அடுத்தென்ன நடக்குமென்று
அய்யகோ
உங்களுக்கு விளங்கவில்லை!

வலிமையிழந்த மானுடமே
வழிக்கெட்டுப் போகும்;
விழித் தடுமாறி நோக்கும்;
குரங்காய் இருந்தாலும்
மனம் கும்மாளம் போடும்;

அவனோ அவளோ;
ஆளுக்கொருவர்
ஆடையாய் இருங்கள்;
கந்தலாகிப் போனால்
கரித் துணியாக
கடைசியில்!!


புதுக்கவிதைகுறளடி, சிந்தடி,
அளவடி, நெடிலடி
கழிநெடிலடி;
மூளைக்கு செலுத்துகையிலே
முகமும் வியர்க்கும்!

சந்தப்பா சிந்துப்பா
இசைப்பா வகைகளால்;
அப்பப்பா – எழுதவே
விரல்கள் நகராமல்;
எழுத்துக்களும்
தர்ணா போராட்டம்!

எதுகை மோனை
சீர், தளை,
அடி, தொடை – என
அங்குலம் அங்குலமாய்
அங்குசமாய்!

ஏக்கமாய் கலக்கமாய்
நோக்கையிலே;
பிறந்தது புதுக்கவிதை;
வரைமுறை இல்லை;
வரையும் முறையும்
தேவையில்லை!

பத்து வரிக்கும் மிகாமல்
கவிதை முழுமையடையாது
கட்டுப்பாட்டை உடைத்து;
விழுந்தது புதுக்கவிதை!
  
சொற்களில் புதைந்த
கவிதையை;
கருத்தில் புதைத்து;
புடைத்தது புதுக்கவிதை!!குறளடி, சிந்தடி,
அளவடி, நெடிலடி
கழிநெடிலடி;
மூளைக்கு செலுத்துகையிலே
முகமும் வியர்க்கும்!

சந்தப்பா சிந்துப்பா
இசைப்பா வகைகளால்;
அப்பப்பா – எழுதவே
விரல்கள் நகராமல்;
எழுத்துக்களும்
தர்ணா போராட்டம்!

எதுகை மோனை
சீர், தளை,
அடி, தொடை – என
அங்குலம் அங்குலமாய்
அங்குசமாய்!

ஏக்கமாய் கலக்கமாய்
நோக்கையிலே;
பிறந்தது புதுக்கவிதை;
வரைமுறை இல்லை;
வரையும் முறையும்
தேவையில்லை!

பத்து வரிக்கும் மிகாமல்
கவிதை முழுமையடையாது
கட்டுப்பாட்டை உடைத்து;
விழுந்தது புதுக்கவிதை!
  
சொற்களில் புதைந்த
கவிதையை;
கருத்தில் புதைத்து;
புடைத்தது புதுக்கவிதை!!

பள்ளி பருவத்தில்


விடா மழை;
அம்மா சிணுங்குவார்;
அழுக்கு துணி என்னாவது;
எரிச்சலுடன் அத்தா
கடைக்கு செல்வதைப் பற்றி;
அக்காவும் நானும்
அழகாய் ஒரமாய்;
புன்னகையால் உதடுகளுக்கு
திறப்புவிழா வைப்போம்
பள்ளிக்கு விடுமுறை
நிச்சயமென்று!

தலைவர்கள் இறந்தால்
எல்லோரும் ஆளுக்கொரு
திணுசாய் கருத்துக்கள்
முளைக்கும்;
எங்களுக்கு மட்டும்
பள்ளிக்கூட நுழைவாயில்
எப்போது மூடும்
என்றே நினைப்பே கூடும்!

சின்னதாய் காயம்
இருந்தாலும்;
வன்மையாய் துடிப்போம்;
மேனிக்கு மெல்லிய சூடானாலும்
போர்வைக்குள்ளே கிடப்போம்!

மாறிய காலங்களால்
மாற்றமும் மனதில்;
இன்று!
என் பிள்ளை
அதே செய்தால்
சிரிக்க முடியாமல்
விரட்டுகிறேன்
போ.. போ.. பள்ளிக்கூடத்திற்கு!!


விடா மழை;
அம்மா சிணுங்குவார்;
அழுக்கு துணி என்னாவது;
எரிச்சலுடன் அத்தா
கடைக்கு செல்வதைப் பற்றி;
அக்காவும் நானும்
அழகாய் ஒரமாய்;
புன்னகையால் உதடுகளுக்கு
திறப்புவிழா வைப்போம்
பள்ளிக்கு விடுமுறை
நிச்சயமென்று!

தலைவர்கள் இறந்தால்
எல்லோரும் ஆளுக்கொரு
திணுசாய் கருத்துக்கள்
முளைக்கும்;
எங்களுக்கு மட்டும்
பள்ளிக்கூட நுழைவாயில்
எப்போது மூடும்
என்றே நினைப்பே கூடும்!

சின்னதாய் காயம்
இருந்தாலும்;
வன்மையாய் துடிப்போம்;
மேனிக்கு மெல்லிய சூடானாலும்
போர்வைக்குள்ளே கிடப்போம்!

மாறிய காலங்களால்
மாற்றமும் மனதில்;
இன்று!
என் பிள்ளை
அதே செய்தால்
சிரிக்க முடியாமல்
விரட்டுகிறேன்
போ.. போ.. பள்ளிக்கூடத்திற்கு!!

சிஷேரியன்நம்பிவந்த 
எங்களை பணத்திற்கு 
பகடைக் காய்களாக்கி;
சுக பிரசவத்தை
தடுத்திட நினைத்தாயோ;
என் நரம்புகளெல்லாம்
அறுத்திட துடித்தாயோ!

அனஸ்தடிக் என்றாய்;
அறுத்தெடுக்க 
தனி கட்டணம் என மென்றாய்;
உயிர் பயம் காட்டி;
எங்கள் உள்ளத்தை வாட்டி;
உன் கட்டடத்தை உயர்த்துகிறாய்;
அதற்குதானா எங்கள் 
பணத்தை உருவுகிறாய்!

விழித்து - நான் 
துடித்து ஈன்றாலும்
இரு நாளில் கழிந்திருக்குமே;
இப்படி…
அறுத்தெடுத்து 
அடுத்தப் பிள்ளைக்கும் 
கத்தியுண்டென சப்தமில்லாமல் 
உணர்த்தினாயோ! 

கருத்தடைக்கு நாங்கள் 
கறுப்பு கொடிக் 
காட்டுவதாலோ - இப்படி 
கழுத்தறுக்கிறாய்;
இரண்டுக்கு மேல் இனியில்லை
என தகவல் கொடுக்கிறாய்!

வெள்ளை சட்டைக்குள்
ஒளிந்திருக்கும் 
அரசாங்க அனுமதிப்பெற்ற
முகமூடி கொள்ளையன் நீயோ;
வயிற்றில் கத்தி வைக்க;
பணத்திற்காக 
கழுற்றில் கத்தி வைக்கும்
படித்த திருடனும் நீயோ!

சிசுவென கூறி 
தசைகளை அறுத்தாய்;
என் நரம்புகள் 
ஆயிரக்கணக்கில் ஊனமாக்கி;
இறுதியாய் 
சிஷேரியன் தொகை என
சில ஆயிரங்களுக்கு 
உண்டியலையும் உனதாக்கி!

பணம் மட்டுமே பிரதானமா?
அதற்குதான் இந்த வருமானமா?
மருத்துவ தொழிலிலுக்கு
இது இல்லையா அவமானமா?
நம்பிவரும் என் இனத்திற்கு
இதுதான் வெகுமானமா?
நம்பிவந்த 
எங்களை பணத்திற்கு 
பகடைக் காய்களாக்கி;
சுக பிரசவத்தை
தடுத்திட நினைத்தாயோ;
என் நரம்புகளெல்லாம்
அறுத்திட துடித்தாயோ!

அனஸ்தடிக் என்றாய்;
அறுத்தெடுக்க 
தனி கட்டணம் என மென்றாய்;
உயிர் பயம் காட்டி;
எங்கள் உள்ளத்தை வாட்டி;
உன் கட்டடத்தை உயர்த்துகிறாய்;
அதற்குதானா எங்கள் 
பணத்தை உருவுகிறாய்!

விழித்து - நான் 
துடித்து ஈன்றாலும்
இரு நாளில் கழிந்திருக்குமே;
இப்படி…
அறுத்தெடுத்து 
அடுத்தப் பிள்ளைக்கும் 
கத்தியுண்டென சப்தமில்லாமல் 
உணர்த்தினாயோ! 

கருத்தடைக்கு நாங்கள் 
கறுப்பு கொடிக் 
காட்டுவதாலோ - இப்படி 
கழுத்தறுக்கிறாய்;
இரண்டுக்கு மேல் இனியில்லை
என தகவல் கொடுக்கிறாய்!

வெள்ளை சட்டைக்குள்
ஒளிந்திருக்கும் 
அரசாங்க அனுமதிப்பெற்ற
முகமூடி கொள்ளையன் நீயோ;
வயிற்றில் கத்தி வைக்க;
பணத்திற்காக 
கழுற்றில் கத்தி வைக்கும்
படித்த திருடனும் நீயோ!

சிசுவென கூறி 
தசைகளை அறுத்தாய்;
என் நரம்புகள் 
ஆயிரக்கணக்கில் ஊனமாக்கி;
இறுதியாய் 
சிஷேரியன் தொகை என
சில ஆயிரங்களுக்கு 
உண்டியலையும் உனதாக்கி!

பணம் மட்டுமே பிரதானமா?
அதற்குதான் இந்த வருமானமா?
மருத்துவ தொழிலிலுக்கு
இது இல்லையா அவமானமா?
நம்பிவரும் என் இனத்திற்கு
இதுதான் வெகுமானமா?


கருவின் கரு


குமட்டலில்
குடும்பமே
குதுகலிப்பில்;
கரு எனும் அறையில்
உன்னுடை அரவணைப்பில்;
முகம் காட்டுவதற்கு முன்னே
அகத்திற்கு அறுசுவை 
உணவு பங்கீடு!

தோல்களினால் ஆன
கருவறை;
இதைவிட பாதுகாப்பன 
இடம் வேறில்லை!

உதைத்தாலும் அணைக்கிறாய்;
குமட்டவைத்தாலும் சிரிக்கிறாய்;
தொட்டுப்பார்த்துப் பூரிப்படைகிறாய்,
அத்தாவை தொடச்சொல்லி
வம்பு பண்ணுகிறாய்!

உள்ளே
நீரிலே கிடந்தாலும்;
நீ இருப்பதால்
சுகமாக;
வலி கொடுத்து
வெளியே வர
வழி தேடுவதெல்லாம்;
நான் அழுது உன்

சிரிப்பைக் காண!
குமட்டலில்
குடும்பமே
குதுகலிப்பில்;
கரு எனும் அறையில்
உன்னுடை அரவணைப்பில்;
முகம் காட்டுவதற்கு முன்னே
அகத்திற்கு அறுசுவை 
உணவு பங்கீடு!

தோல்களினால் ஆன
கருவறை;
இதைவிட பாதுகாப்பன 
இடம் வேறில்லை!

உதைத்தாலும் அணைக்கிறாய்;
குமட்டவைத்தாலும் சிரிக்கிறாய்;
தொட்டுப்பார்த்துப் பூரிப்படைகிறாய்,
அத்தாவை தொடச்சொல்லி
வம்பு பண்ணுகிறாய்!

உள்ளே
நீரிலே கிடந்தாலும்;
நீ இருப்பதால்
சுகமாக;
வலி கொடுத்து
வெளியே வர
வழி தேடுவதெல்லாம்;
நான் அழுது உன்

சிரிப்பைக் காண!மகள் திருமணம்


உன் சிறுவயதில்
தாலாட்டுப் பாடும் - உன்
தத்தி தத்தி நடைக்கு
மயங்கி விழுந்திருக்கிறேன் பல முறை;

அருகில் இல்லா உன்
அன்னையை அழைக்க ;
உதடு பிதுக்கி; 
கண்கள் கசக்கி கரையும் நேரம்;
என் நெஞ்சைக் கசக்கிப் பிழியும் 
அத்தருணத்திற்கு
ஆறுதல் சொல்லச் 
சிரித்துப் பகடி காட்டுவேன்;
நீ பூரிக்க;

பள்ளிக்குச் செல்ல
முரண்டுப் பிடிக்கும்
உன் பாதத்தைத் தோள்களில்
சுமந்தப்படி சுற்றிக் காட்டுவேன்
பள்ளியை உனக்கு;
உன் அழுகை தீரும் வரை;

பத்தாம் வகுப்பு முடிக்கும் போதே
பத்திரமாய் எனைப்
பார்த்துக்கொண்டாய்
இன்னொருத் தாயாய்;

கல்லூரி முடிந்து;
கல்யாணம் உனக்கு;
விட்டுப்பிரிகிற நேரம்;
கனமானது; ரணமானது இதயம்;
சூடானக் கண்ணீரால்;
தேகமும் கொதிக்க;
முதல்முறையாக உன் 
அழுகையை அடக்க 
நான் சிரிக்க முடியாமல்
தவிக்கும் தருணம்; நிச்சயம் ரணம்!உன் சிறுவயதில்
தாலாட்டுப் பாடும் - உன்
தத்தி தத்தி நடைக்கு
மயங்கி விழுந்திருக்கிறேன் பல முறை;

அருகில் இல்லா உன்
அன்னையை அழைக்க ;
உதடு பிதுக்கி; 
கண்கள் கசக்கி கரையும் நேரம்;
என் நெஞ்சைக் கசக்கிப் பிழியும் 
அத்தருணத்திற்கு
ஆறுதல் சொல்லச் 
சிரித்துப் பகடி காட்டுவேன்;
நீ பூரிக்க;

பள்ளிக்குச் செல்ல
முரண்டுப் பிடிக்கும்
உன் பாதத்தைத் தோள்களில்
சுமந்தப்படி சுற்றிக் காட்டுவேன்
பள்ளியை உனக்கு;
உன் அழுகை தீரும் வரை;

பத்தாம் வகுப்பு முடிக்கும் போதே
பத்திரமாய் எனைப்
பார்த்துக்கொண்டாய்
இன்னொருத் தாயாய்;

கல்லூரி முடிந்து;
கல்யாணம் உனக்கு;
விட்டுப்பிரிகிற நேரம்;
கனமானது; ரணமானது இதயம்;
சூடானக் கண்ணீரால்;
தேகமும் கொதிக்க;
முதல்முறையாக உன் 
அழுகையை அடக்க 
நான் சிரிக்க முடியாமல்
தவிக்கும் தருணம்; நிச்சயம் ரணம்!


இன்றைய ஊடகம்...


கரு பையை
அகற்றியவருக்கும்
அழகான ஆண் குழந்தைத் தரும்;

நெருப்பில்லாமல்
புகையாது என
நெருப்பை மூட்டும்;

அடித்ததை
மறைத்துவிட்டு தடுத்ததிற்கு
எண்ணையிட்டு; திரியிட்டு;
திரித்தவிட்டு; ஒளியேற்றும்;

தட்டிக்கேட்பதை
அட்டைப் படமிட்டு
அநியாயம் என்று...
கொட்டிவிட்டுச் செல்வதை
குறுச்செய்தியாய் அதுவும்
குற்றுயிரும் கொலையுயிருமாய்;

மெய்யிற்குத் தார்பூசி
பொய்யிற்குப் பொட்டுவைத்து
அலங்காரம் செய்து
மேடையில் ஏற்றும்;
எங்கள் தார்மீக ஊகம்..
மன்னிக்கவும் ஊடகம்!!!

கரு பையை
அகற்றியவருக்கும்
அழகான ஆண் குழந்தைத் தரும்;

நெருப்பில்லாமல்
புகையாது என
நெருப்பை மூட்டும்;

அடித்ததை
மறைத்துவிட்டு தடுத்ததிற்கு
எண்ணையிட்டு; திரியிட்டு;
திரித்தவிட்டு; ஒளியேற்றும்;

தட்டிக்கேட்பதை
அட்டைப் படமிட்டு
அநியாயம் என்று...
கொட்டிவிட்டுச் செல்வதை
குறுச்செய்தியாய் அதுவும்
குற்றுயிரும் கொலையுயிருமாய்;

மெய்யிற்குத் தார்பூசி
பொய்யிற்குப் பொட்டுவைத்து
அலங்காரம் செய்து
மேடையில் ஏற்றும்;
எங்கள் தார்மீக ஊகம்..
மன்னிக்கவும் ஊடகம்!!!

கூட்டு மனசாட்சி..


மனித சட்டங்கள்
சல்லடைகளாக - பல நேரங்களில்
நல்லவர்கள் தேக்கமாக – தீயவர்கள்
வடிகால்களின் வழியாக
வெளியே ஒய்யாரமாய்!

குற்றத்திற்கு ஆதாரம் கேட்கப்பட்டு;
இல்லையெனில்..
கூட்டு மனசாட்சி என்ற வாசகத்தை இட்டு;
வம்படியாக…
மையிட்ட எழுதுக்கோல் பொய்யுரைக்கும்;

சட்டம் தன் கடமையைச் செய்யும்

என்று!

மனித சட்டங்கள்
சல்லடைகளாக - பல நேரங்களில்
நல்லவர்கள் தேக்கமாக – தீயவர்கள்
வடிகால்களின் வழியாக
வெளியே ஒய்யாரமாய்!

குற்றத்திற்கு ஆதாரம் கேட்கப்பட்டு;
இல்லையெனில்..
கூட்டு மனசாட்சி என்ற வாசகத்தை இட்டு;
வம்படியாக…
மையிட்ட எழுதுக்கோல் பொய்யுரைக்கும்;

சட்டம் தன் கடமையைச் செய்யும்

என்று!

பொது மக்கள்


சுருங்கிக் கொண்டிருக்கும்
குடலின் சீற்றத்தால்
பசி எங்களைப் பாடாய்படுத்த;
உழைப்பதற்குப் பிழைப்புத் தேடி நான்;
பரட்டைத்தலையும் பராரி ஆடையும்
எங்களுக்கு எதிரியாய் நிற்க;
முதலாளிக்கோ ஐயம் கொடுக்க;
பணியில்லாமல் பசி பிணியுடன்
நடைப்பயணம்..

புடைத்தெடுக்கும் பசியால்
பச்சிளங்குழந்தையுடன்
பிச்சையெடுக்கச் சென்றால்
”உழைத்தால் என்ன கேடு” என
வசைப்பாடும் பொதுமக்கள்!

இந்த பொதுமக்கள் இருக்கிறாங்களே….சுருங்கிக் கொண்டிருக்கும்
குடலின் சீற்றத்தால்
பசி எங்களைப் பாடாய்படுத்த;
உழைப்பதற்குப் பிழைப்புத் தேடி நான்;
பரட்டைத்தலையும் பராரி ஆடையும்
எங்களுக்கு எதிரியாய் நிற்க;
முதலாளிக்கோ ஐயம் கொடுக்க;
பணியில்லாமல் பசி பிணியுடன்
நடைப்பயணம்..

புடைத்தெடுக்கும் பசியால்
பச்சிளங்குழந்தையுடன்
பிச்சையெடுக்கச் சென்றால்
”உழைத்தால் என்ன கேடு” என
வசைப்பாடும் பொதுமக்கள்!

இந்த பொதுமக்கள் இருக்கிறாங்களே….


எங்கே நிழல்


நிழல் தேடி
அலையும் போதுதான்;
மனிதனின் மண்டையில் உறைக்கும்
ச்சே..

இங்கு ஒரு மரம்கூட இல்லையே என்று..நிழல் தேடி
அலையும் போதுதான்;
மனிதனின் மண்டையில் உறைக்கும்
ச்சே..

இங்கு ஒரு மரம்கூட இல்லையே என்று..


எதிர்பார்த்து


உன் சின்னச் சிறு சிரிப்பிற்காக
அழுது அழுது நடிப்போம்
நானும் உனது அன்னையும்;

நீ ஒங்கி ஒர் குத்துவிட்டால்
பாய்ந்துபோய் விழுவேன்;
எலும்புகள் திடகாத்திரமான போதே;
எல்லாம் உன் வெடிச்சிரிப்பிற்காக..

இளமையில் கல்
என்பதை உனக்கு நிறைவேற்ற;
நான் கல் சுமந்தேன் அயல்தேசத்தில்..

இன்றோ!
பார்த்து பார்த்து வளர்த்த எங்களை
பார்க்கவே மாட்டேன் என்கிறாய்;
வயதாகிவிட்டதால்; கிழடாகிவிட்டோம்;
எலும்புகளும் நரம்புகளும் ஒய்வுக்கேட்பதால்
பாராமாகிவிட்டோம் உனக்கு!

தற்போது
மெல்ல கனக்கிறது நெஞ்சம்;
என் பேரப்பிள்ளைக்காக
நீயும் பாய்ந்து விழுகிறாய்;

அவன் வெடிச்சிரிப்பை எதிர்பார்த்து…

உன் சின்னச் சிறு சிரிப்பிற்காக
அழுது அழுது நடிப்போம்
நானும் உனது அன்னையும்;

நீ ஒங்கி ஒர் குத்துவிட்டால்
பாய்ந்துபோய் விழுவேன்;
எலும்புகள் திடகாத்திரமான போதே;
எல்லாம் உன் வெடிச்சிரிப்பிற்காக..

இளமையில் கல்
என்பதை உனக்கு நிறைவேற்ற;
நான் கல் சுமந்தேன் அயல்தேசத்தில்..

இன்றோ!
பார்த்து பார்த்து வளர்த்த எங்களை
பார்க்கவே மாட்டேன் என்கிறாய்;
வயதாகிவிட்டதால்; கிழடாகிவிட்டோம்;
எலும்புகளும் நரம்புகளும் ஒய்வுக்கேட்பதால்
பாராமாகிவிட்டோம் உனக்கு!

தற்போது
மெல்ல கனக்கிறது நெஞ்சம்;
என் பேரப்பிள்ளைக்காக
நீயும் பாய்ந்து விழுகிறாய்;

அவன் வெடிச்சிரிப்பை எதிர்பார்த்து…

அன்று அறைந்தது


செவியோடு நின்றுப்போன
தங்கமான என் தகப்பனின்
அறிவுறைகள் அறைந்தார்போல்;
படிக்காவிடின் மாடுதான் மேய்ப்பாய்..

அன்று அறைந்தது;
இன்று வலிக்கிறது…

படித்துவிட்டு மாடும் மேய்த்திருக்கலாம்;

என் நாட்டிலேயாவது!!

செவியோடு நின்றுப்போன
தங்கமான என் தகப்பனின்
அறிவுறைகள் அறைந்தார்போல்;
படிக்காவிடின் மாடுதான் மேய்ப்பாய்..

அன்று அறைந்தது;
இன்று வலிக்கிறது…

படித்துவிட்டு மாடும் மேய்த்திருக்கலாம்;

என் நாட்டிலேயாவது!!

நீர் இல்லா தரணி


விரயமாக்குவதற்கு முன்னே
கிரயமாக்குங்கள்;
பின்னொரு நாளில் முட்டிக்கொண்டும்;
வெட்டிக்கொண்டும் தாகம் தீர்க்க;
தாகம் எடுக்க சண்டையிடுவதற்கு முன்

சேமியுங்கள் நீரை..

விரயமாக்குவதற்கு முன்னே
கிரயமாக்குங்கள்;
பின்னொரு நாளில் முட்டிக்கொண்டும்;
வெட்டிக்கொண்டும் தாகம் தீர்க்க;
தாகம் எடுக்க சண்டையிடுவதற்கு முன்

சேமியுங்கள் நீரை..

பொய்யென்று தெரிந்தும்


மணம் மங்கா
மணவறை ஆடை
அலமாரியில்;

இருட்டில் வாசம்பிடித்த
மருதாணி கோலம்
இன்னும் பளிச்சென்று;

நேருக்கு நேர்
என் முகம் காணா
உன் வெட்கப்பட்ட விழிகள்;

மாதத்திற்குள்ளே மணவாழ்க்கைக் கொண்டாடும்
விதி விலக்கில்லா வெளிநாட்டு மாப்பிள்ளைகளில்;
நானும் எண்ணை தேசத்திற்கு..

பொய்யென்று தெரிந்தும்;
அழுது வடியும்
உன் கண்களுக்கு
அழுதுக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்
இன்னும் கொஞ்ச நாள்தான்…மணம் மங்கா
மணவறை ஆடை
அலமாரியில்;

இருட்டில் வாசம்பிடித்த
மருதாணி கோலம்
இன்னும் பளிச்சென்று;

நேருக்கு நேர்
என் முகம் காணா
உன் வெட்கப்பட்ட விழிகள்;

மாதத்திற்குள்ளே மணவாழ்க்கைக் கொண்டாடும்
விதி விலக்கில்லா வெளிநாட்டு மாப்பிள்ளைகளில்;
நானும் எண்ணை தேசத்திற்கு..

பொய்யென்று தெரிந்தும்;
அழுது வடியும்
உன் கண்களுக்கு
அழுதுக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்
இன்னும் கொஞ்ச நாள்தான்…


உண்ணும் ஊண்


பொத்தி பொத்தி
பாதுகாத்த நிலத்தை;
கட்டாய மலடியாக்கி
சில லட்சங்களுக்கு பேரம் பேசி..
இன்று
பிளாக்குகளாகவும் பிளாட்டுகளாகவும்;
குளுகுளு அறையில் இருந்தாலும்

உண்ணும் ஊண் நிலத்தில்தானே!!  

பொத்தி பொத்தி
பாதுகாத்த நிலத்தை;
கட்டாய மலடியாக்கி
சில லட்சங்களுக்கு பேரம் பேசி..
இன்று
பிளாக்குகளாகவும் பிளாட்டுகளாகவும்;
குளுகுளு அறையில் இருந்தாலும்

உண்ணும் ஊண் நிலத்தில்தானே!!  

யுத்தம் செய்வீர்


நரம்புகளில் பீறிட்டக் குருதியால்
நிரம்பிய நம் வீர வரலாறுகளைக்
கொட்டமிட்டு; திட்டமிட்டு
மாயமாக்கியது எப்படி..
பாடத்திட்டத்தில் மாயமாகியது எப்படி..
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்!

என்னோடுப் படித்தவரில் முக்கால்வாசி
அரசாங்க அலுவலில் இருக்க;
நான் மட்டும் ஏன் அயல்நாட்டில் உழைக்க..
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்!

என்னை அடித்தவன் சிரிக்க;
எதிர்காலம் தரித்திரமாய்..
அலறிய என்னை மட்டும் ஏன் காவல் பிடிக்க;
அறிந்துகொள்ள யுத்தம் செய்வீர்!

வெடித்தகுண்டின் சப்தங்கள்
ஒடுங்குவதற்கு முன்னே
ஊடகத்தின் தர்மம் அலை அலையாய்
“இஸ்லாமியப் பயங்கரவாதம்”;
உள்நோக்கம்
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்!

வரலாற்றில் இடம் பிடிக்க முடியாது
வரலாறு அறியா சமூகம்;
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்;
அரிவாள்களால் அல்ல அறிவால்!!!


”சுதந்திர தின வாழ்த்துக்கள்”

நரம்புகளில் பீறிட்டக் குருதியால்
நிரம்பிய நம் வீர வரலாறுகளைக்
கொட்டமிட்டு; திட்டமிட்டு
மாயமாக்கியது எப்படி..
பாடத்திட்டத்தில் மாயமாகியது எப்படி..
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்!

என்னோடுப் படித்தவரில் முக்கால்வாசி
அரசாங்க அலுவலில் இருக்க;
நான் மட்டும் ஏன் அயல்நாட்டில் உழைக்க..
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்!

என்னை அடித்தவன் சிரிக்க;
எதிர்காலம் தரித்திரமாய்..
அலறிய என்னை மட்டும் ஏன் காவல் பிடிக்க;
அறிந்துகொள்ள யுத்தம் செய்வீர்!

வெடித்தகுண்டின் சப்தங்கள்
ஒடுங்குவதற்கு முன்னே
ஊடகத்தின் தர்மம் அலை அலையாய்
“இஸ்லாமியப் பயங்கரவாதம்”;
உள்நோக்கம்
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்!

வரலாற்றில் இடம் பிடிக்க முடியாது
வரலாறு அறியா சமூகம்;
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்;
அரிவாள்களால் அல்ல அறிவால்!!!


”சுதந்திர தின வாழ்த்துக்கள்”

தேவையில்லை தலைப்பு


ஓடி விளையாடும்
மழலைகளுக்கு மத்தியில்
மலர்கொத்தாய் நீ;
அம்மாணையோ; ஆபியமோ
ஆட முடியாது எல்லோரையும் போல்!

உயிருள்ள நாங்களோ
உயிரே உனக்காக உருக;
உயிரற்றப் பொருட்களிலே உன் கவனம்!

எக்காரணத்தைக் கொண்டும்
விட்டுவிட மாட்டோம் உனை;
அறிந்தே வைத்திருக்கிறோம்
எங்களுக்கான சுவர்கத்தின் சாவி நீயென்பதை!!!

ஓடி விளையாடும்
மழலைகளுக்கு மத்தியில்
மலர்கொத்தாய் நீ;
அம்மாணையோ; ஆபியமோ
ஆட முடியாது எல்லோரையும் போல்!

உயிருள்ள நாங்களோ
உயிரே உனக்காக உருக;
உயிரற்றப் பொருட்களிலே உன் கவனம்!

எக்காரணத்தைக் கொண்டும்
விட்டுவிட மாட்டோம் உனை;
அறிந்தே வைத்திருக்கிறோம்
எங்களுக்கான சுவர்கத்தின் சாவி நீயென்பதை!!!

பெருமையான நாள் பெருநாள்


நான் அனுப்பிய பணத்தில்
நீ எடுத்து அனுப்பும் பெருநாள் ஆடை;
உடலோடுச் சேர்ந்து உள்ளமும் பளிரென்று;
வெளிநாட்டு பணத்தின்
வியர்வை நாற்றத்தை
மாற்றி மணம் வீசுது..

அடுத்த முறையாவது உன்னுடன்
இருக்க மனம் ஏங்குது!!

நான் அனுப்பிய பணத்தில்
நீ எடுத்து அனுப்பும் பெருநாள் ஆடை;
உடலோடுச் சேர்ந்து உள்ளமும் பளிரென்று;
வெளிநாட்டு பணத்தின்
வியர்வை நாற்றத்தை
மாற்றி மணம் வீசுது..

அடுத்த முறையாவது உன்னுடன்
இருக்க மனம் ஏங்குது!!