நித்திரையைத் தொலைத்து
முத்திரைப் பதிக்க;
சுருங்கிய மூளையைச்
சிலிர்க்கவைத்து;
உள்ளம் உருகி;
மெல்லமாய் அழுது;
எழுத்துப்பிழைகளைக்
களையெடுத்து;
கருத்துப்பிழைகளை
அறுவடைச்செய்து;
என் பக்கத்தை நிரப்பினால்;
படித்துவிட்டு
பறந்துச்செல்லும்
பருந்துகளாய் வாசகர்கள்;
கவிதைக்குத் தீனியிடாமல்!
ஓட்டுப்பெட்டியை
ஒருமுறைக்கூடத்
தீண்டாமல்!
use give and take policy. you vote others and others vote you
ReplyDeleteHeh, cool yaar!
ReplyDeleteஇதை கூட கவிதையில் சொல்லியாச்ச... நான் ஓட்டு போட்டுட்டேன் பா...
ReplyDelete49 'O' போட்டு தான் பழக்கம்
ReplyDeleteMums ஒவ்வொருக் கவிதையிலும் உங்கள் ஒட்டு என்பக்கத்தில் கலக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ReplyDelete49 'O' தான் போடுவிங்களா. சூர்யாஜீவா அவர்களே 49 'O' போடவேண்டிய நேரத்தில் தப்பான ஆட்களை தேர்தெடுங்க என்ன மாதிரி அப்பாவிகள் கேட்கும் போது 49 'O' போடுங்க. நல்ல இருக்கு உங்க நியாயம்.
ReplyDeletesuryajeeva sir, போட வேண்டிய நேரத்தில் 49 'O' இதை போட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்...
ReplyDeleteஇந்த சட்டம் பற்றிய விழிப்புணர்வே இன்னும் மக்களிடம் போய் சேரவில்லை என்பதே பெரிய draw back...
கவலைப்பாதிங்க விழிப்புணர்வு வந்திடும்.
ReplyDelete