சலூன்காரர்


முடி திருத்தம் - என்
முடியோடுச் சேர்த்து
விழியையும்
மொட்டையாக்கியது;
நீர் இல்லாமல்!

கத்தி என் தலையில்
விளையாட;
நான் கத்திக் கதற;
உறவினர்கள் ஆறுதல்
சொல்லி சிரிக்க!

முடி வளர்ந்தாலும்
மழிக்கச் சொல்லி;
வளராவிடுனும்
பழித்துக் காட்ட நண்பர்கள்!
வெறுப்பானது எனக்கு;
அழ வைக்கும்
அட்டவணையில்
ஆசிரியருக்கு
அடுத்தப்படியாக;
சலூன்காரர்!

முடி திருத்தம் - என்
முடியோடுச் சேர்த்து
விழியையும்
மொட்டையாக்கியது;
நீர் இல்லாமல்!

கத்தி என் தலையில்
விளையாட;
நான் கத்திக் கதற;
உறவினர்கள் ஆறுதல்
சொல்லி சிரிக்க!

முடி வளர்ந்தாலும்
மழிக்கச் சொல்லி;
வளராவிடுனும்
பழித்துக் காட்ட நண்பர்கள்!
வெறுப்பானது எனக்கு;
அழ வைக்கும்
அட்டவணையில்
ஆசிரியருக்கு
அடுத்தப்படியாக;
சலூன்காரர்!

எவ்வளவோ மேல்


காலி புட்டிகள்
காலணியாக;
வெப்பத்திற்குப் பயந்து;
ஒப்புக்காக;
பார்ப்பவர்கள் நகைத்தாலும்
நகர்த்த மாட்டேன்
பாதத்தைவிட்டு;
மெல்லமாய் சிரித்து
நன்றி உரைப்பேன்
இறைவனுக்கு;
கால் இல்லாமல் இருப்பதற்கு
காலணி இல்லாமல்
இருப்பது எவ்வளவோ மேல்!

காலி புட்டிகள்
காலணியாக;
வெப்பத்திற்குப் பயந்து;
ஒப்புக்காக;
பார்ப்பவர்கள் நகைத்தாலும்
நகர்த்த மாட்டேன்
பாதத்தைவிட்டு;
மெல்லமாய் சிரித்து
நன்றி உரைப்பேன்
இறைவனுக்கு;
கால் இல்லாமல் இருப்பதற்கு
காலணி இல்லாமல்
இருப்பது எவ்வளவோ மேல்!

அன்றே உரைத்திருக்கலாம்


சிரத்தை எடுத்து;
கரத்தை நீட்டி;
மருதாணிக் காயும் வரை
அசையாமல் அசையும்
உனைக் கண்டு நகைப்பேன்;
இது ஒரு ஆசையா என!

சின்னதாய் புன்னகைத்து;
கண்சிமிட்டிக் கதைப்பாய்
கலைத்தப்பின்னேப் பார் என!
சிவந்திருந்த வண்ணம்;
ஒளிந்திருந்து உரைக்கும்
உனக்காகத்தான் என!

நெருக்கத்தில் உள்ளப்போது
சுருக்கமாய் தெரிந்த
உன் மருதாணி அழகு;
இன்று தூரமானதும்;
மனம் பாரமாய் ஆனது;
ச்ச்சே!
அன்றே உரைத்திருக்கலாம்
அப்படி ஒர் அழகு என!

சிரத்தை எடுத்து;
கரத்தை நீட்டி;
மருதாணிக் காயும் வரை
அசையாமல் அசையும்
உனைக் கண்டு நகைப்பேன்;
இது ஒரு ஆசையா என!

சின்னதாய் புன்னகைத்து;
கண்சிமிட்டிக் கதைப்பாய்
கலைத்தப்பின்னேப் பார் என!
சிவந்திருந்த வண்ணம்;
ஒளிந்திருந்து உரைக்கும்
உனக்காகத்தான் என!

நெருக்கத்தில் உள்ளப்போது
சுருக்கமாய் தெரிந்த
உன் மருதாணி அழகு;
இன்று தூரமானதும்;
மனம் பாரமாய் ஆனது;
ச்ச்சே!
அன்றே உரைத்திருக்கலாம்
அப்படி ஒர் அழகு என!

எங்கே என் பாதம்


மகிழ்ச்சியிற்குத் திரைக்கண்டு;
நெகிழ்ச்சியிற்குக் கடல் கண்டு;
கும்மாளமிட்டுக்
குதித்துக்காட்டும் பாதம்;
கூனிக் குறுகியது!

வெயில் கண்டு ஓடி;
மழைக்கண்டு நனைந்தப்
பாதம் வெட்கப்பட்டு
வெறித்தது!

ஒரு நாளும்
இதுப்போன்றக் கூட்டத்தோடு
உறவாடவில்லையே;
உறவாட எண்ணும்போது
நான் உயிரோடு இல்லையே!

இறந்துப்போனக் காலங்கள்
இனியும் வருமா;
ஆத்மா பறந்துப்போனப் பின்னே
அழுதால் பயன் தருமா!

மகிழ்ச்சியிற்குத் திரைக்கண்டு;
நெகிழ்ச்சியிற்குக் கடல் கண்டு;
கும்மாளமிட்டுக்
குதித்துக்காட்டும் பாதம்;
கூனிக் குறுகியது!

வெயில் கண்டு ஓடி;
மழைக்கண்டு நனைந்தப்
பாதம் வெட்கப்பட்டு
வெறித்தது!

ஒரு நாளும்
இதுப்போன்றக் கூட்டத்தோடு
உறவாடவில்லையே;
உறவாட எண்ணும்போது
நான் உயிரோடு இல்லையே!

இறந்துப்போனக் காலங்கள்
இனியும் வருமா;
ஆத்மா பறந்துப்போனப் பின்னே
அழுதால் பயன் தருமா!

நல்ல நண்பன்


தடுமாறும் போது
இடம் கொடுக்க வேண்டும்;
தடம்மாறும் போது;
தலையில் தட்டவேண்டும்;
கசப்பானாலும்
மெய் உரைக்கவேண்டும்;
இனிக்கும் என்றாலும்
பொய் தவிர்க்கவேண்டும்;
வழுக்கும் போது
கரம் கொடுக்கவேண்டும்;
உள்ளம் அழுக்காகும் போது
காரம் காட்டவேண்டும்!

தடுமாறும் போது
இடம் கொடுக்க வேண்டும்;
தடம்மாறும் போது;
தலையில் தட்டவேண்டும்;
கசப்பானாலும்
மெய் உரைக்கவேண்டும்;
இனிக்கும் என்றாலும்
பொய் தவிர்க்கவேண்டும்;
வழுக்கும் போது
கரம் கொடுக்கவேண்டும்;
உள்ளம் அழுக்காகும் போது
காரம் காட்டவேண்டும்!

துவைத்து எடுக்க


அடுப்பூதும் பெண்களுக்குப்
படிப்பெதற்குக் காலம் போய்;
அடுப்பூதுவதற்கேப்
படிப்பு இருக்கும்
காலம் வந்து;
சுதந்திரம் என்றத்
தந்திரமானத்
தத்துவத்தால்;
போதையேறிப்
பாதை மாறியிருக்கும்
பேதைகளாய் பாவைகள்!
ஒழுக்கமானப்
பெண்களுக்கு மத்தியில்;
இழுக்குக் கொடுக்கும்;
இவர்களைத்
துவைத்து எடுக்க;
இரும்புக் கரம் வேண்டும்
அதற்கு இஸ்லாம்
மட்டும் போதும்!


அடுப்பூதும் பெண்களுக்குப்
படிப்பெதற்குக் காலம் போய்;
அடுப்பூதுவதற்கேப்
படிப்பு இருக்கும்
காலம் வந்து;
சுதந்திரம் என்றத்
தந்திரமானத்
தத்துவத்தால்;
போதையேறிப்
பாதை மாறியிருக்கும்
பேதைகளாய் பாவைகள்!
ஒழுக்கமானப்
பெண்களுக்கு மத்தியில்;
இழுக்குக் கொடுக்கும்;
இவர்களைத்
துவைத்து எடுக்க;
இரும்புக் கரம் வேண்டும்
அதற்கு இஸ்லாம்
மட்டும் போதும்!

அழகு ரசம்


எரித்துவிடும் பார்வையுடன்;
புகைத்து நிற்கும் காதுகளுடன்;
உனை முறைத்து நிற்பேன்;
எனக்குப் பிடிக்காத ரசத்தை
நீ பிடித்துக் கொண்டிருக்கையில்!

தேசம் விட்டு; மாற்று
வாசம் கொண்டு - பாசமில்லா
உணவுகளின் பங்காளியாக;
ருசித் தேடி;
பசிக்கொண்டு - உணவு விடுதியின்
படியேறினாலும் ;
பார்க்கமுடியவில்லை உன்
பக்குவமானப் பருப்பு ரசம்!

அழுது உண்ட
மிளகு ரசம் - இன்றுச்
சுவையாய் தெரிந்தது;
ஆனால் உறவுகள்
தூரமாய் இருந்தது!

வெறுப்பான ரசம்;
உவப்பாய் போனது;
உன் கரத்தால்
நீர் அருந்தினாலும் - இனி
மனம் நீர்த்துப்போகாது!

எரித்துவிடும் பார்வையுடன்;
புகைத்து நிற்கும் காதுகளுடன்;
உனை முறைத்து நிற்பேன்;
எனக்குப் பிடிக்காத ரசத்தை
நீ பிடித்துக் கொண்டிருக்கையில்!

தேசம் விட்டு; மாற்று
வாசம் கொண்டு - பாசமில்லா
உணவுகளின் பங்காளியாக;
ருசித் தேடி;
பசிக்கொண்டு - உணவு விடுதியின்
படியேறினாலும் ;
பார்க்கமுடியவில்லை உன்
பக்குவமானப் பருப்பு ரசம்!

அழுது உண்ட
மிளகு ரசம் - இன்றுச்
சுவையாய் தெரிந்தது;
ஆனால் உறவுகள்
தூரமாய் இருந்தது!

வெறுப்பான ரசம்;
உவப்பாய் போனது;
உன் கரத்தால்
நீர் அருந்தினாலும் - இனி
மனம் நீர்த்துப்போகாது!

குரங்கிலிருந்து மனிதன்


விலங்கினம் என
உரைப்பதில் உனக்குப்
பெருமையா;
வளர்ந்தக் காலத்தோடு
வால் குறைந்துவிட்டது
என்பது மகிமையா!

இரத்த அணுக்கள்
ஒத்து இருந்தால்
ஒட்டிக் கொள்வாயா
என்னோடு;
பரிணாமம் எனில்
இன்று நான் வேறு;
நீ வேறாய் இருப்பது
எப்படி என்றுக்
கேட்டுப்பார் உன்
மூளையோடு!

என்னில் இருந்து வந்தவன்
எனச் சொல்வது
பரிணாம வளர்ச்சியா;
மொத்தப் படைப்புகளில்
மெத்தத் தகுதியுள்ள
உனைக் குரங்கு
என உரைப்பதற்குப் பெயர்
ஆராய்ச்சியா!

விலங்கினம் என
உரைப்பதில் உனக்குப்
பெருமையா;
வளர்ந்தக் காலத்தோடு
வால் குறைந்துவிட்டது
என்பது மகிமையா!

இரத்த அணுக்கள்
ஒத்து இருந்தால்
ஒட்டிக் கொள்வாயா
என்னோடு;
பரிணாமம் எனில்
இன்று நான் வேறு;
நீ வேறாய் இருப்பது
எப்படி என்றுக்
கேட்டுப்பார் உன்
மூளையோடு!

என்னில் இருந்து வந்தவன்
எனச் சொல்வது
பரிணாம வளர்ச்சியா;
மொத்தப் படைப்புகளில்
மெத்தத் தகுதியுள்ள
உனைக் குரங்கு
என உரைப்பதற்குப் பெயர்
ஆராய்ச்சியா!

போதை மாநிலம்


ஏறியப் போதையில்
மாறியது
ஆறாவது அறிவு!

தள்ளாடும் குடிமகன்களுக்கு
மனைவியா; மகளா;
ஒருமித்தமாய் தோன்றும்
போதையால் பேதையாய்!

ஊற்றிக்கொடுக்கும்
தமிழக அரசியல்;
பேட்டிக்கொடுக்கும்;
முந்தியது இன்றைய
வருட வருவாய்!

வந்தாரை வாழவைக்கும்
தமிழகம் - இனி கொஞ்சம்
ஆடவும் வைக்கும்!

ஏறியப் போதையில்
மாறியது
ஆறாவது அறிவு!

தள்ளாடும் குடிமகன்களுக்கு
மனைவியா; மகளா;
ஒருமித்தமாய் தோன்றும்
போதையால் பேதையாய்!

ஊற்றிக்கொடுக்கும்
தமிழக அரசியல்;
பேட்டிக்கொடுக்கும்;
முந்தியது இன்றைய
வருட வருவாய்!

வந்தாரை வாழவைக்கும்
தமிழகம் - இனி கொஞ்சம்
ஆடவும் வைக்கும்!

வெளிநாட்டுக் கணவனின் சமையல்


அட்டவணைப் படி
அடுப்படிக்கு;
அடிப்படை உரிமையில்
முதன்மையாக இன்று நான்;

சமையலில்
அரைக்குறை அறிவுடன்;
VOIP கொடுக்கும் நிமிடத்துடன்;
நீ இருக்கும் பலத்துடன்
அடுப்படியில்!

சமையலில்;
புரியாத உன்
கைப்பக்குவத்தில்
புருவம் இரண்டும்
புரியாமல் தவிக்கும்;

தெரியாதச் சூத்திரத்தைப்
பக்குவமாக அலைப்பேசியில்
நீ பாடம் எடுக்க;
சிரித்துக்கொண்டேச்
சளைக்காமல்;
சலித்து எடுக்கும் உன் குறிப்பு!

செவியோடு;
உன்னோடு ஓட்டியிருக்கும்
எனைக் கண்டு;
நண்பர்கள் கிச்சுக் கிச்சுக் காட்ட;
கண் சிமிட்டியப்படி
காய்கறிகள் குதிக்கும்
குழம்பில்;
எனைப் போல!

அட்டவணைப் படி
அடுப்படிக்கு;
அடிப்படை உரிமையில்
முதன்மையாக இன்று நான்;

சமையலில்
அரைக்குறை அறிவுடன்;
VOIP கொடுக்கும் நிமிடத்துடன்;
நீ இருக்கும் பலத்துடன்
அடுப்படியில்!

சமையலில்;
புரியாத உன்
கைப்பக்குவத்தில்
புருவம் இரண்டும்
புரியாமல் தவிக்கும்;

தெரியாதச் சூத்திரத்தைப்
பக்குவமாக அலைப்பேசியில்
நீ பாடம் எடுக்க;
சிரித்துக்கொண்டேச்
சளைக்காமல்;
சலித்து எடுக்கும் உன் குறிப்பு!

செவியோடு;
உன்னோடு ஓட்டியிருக்கும்
எனைக் கண்டு;
நண்பர்கள் கிச்சுக் கிச்சுக் காட்ட;
கண் சிமிட்டியப்படி
காய்கறிகள் குதிக்கும்
குழம்பில்;
எனைப் போல!

எனது பாஷை


தாய் மொழியில் இன்னும்
பரீட்சயம் இல்லா
மழலையாக;
பசி எனதுப் பாஷையாக;
அழுகை எனதுத் தேசமாக!

தாங்கிக்கொள்ளக்
கரமின்றி;
ஏங்கித்தவிக்கும்
விழிகளுடன்;
கண்டுக்கொள்பவர்
எவருமுண்டா என;
கொஞ்சம்
கல் நெஞ்சம்
கொண்டவர் கூட்டத்தோடு!

மிச்சமுள்ள எச்சிலைக்கு
எதிர்பார்த்து ஏக்கத்தோடு;
வீட்டில் வளர்க்கும்
நாய் பூனைக்கு
நாங்கள் மேலல்லவா!



தாய் மொழியில் இன்னும்
பரீட்சயம் இல்லா
மழலையாக;
பசி எனதுப் பாஷையாக;
அழுகை எனதுத் தேசமாக!

தாங்கிக்கொள்ளக்
கரமின்றி;
ஏங்கித்தவிக்கும்
விழிகளுடன்;
கண்டுக்கொள்பவர்
எவருமுண்டா என;
கொஞ்சம்
கல் நெஞ்சம்
கொண்டவர் கூட்டத்தோடு!

மிச்சமுள்ள எச்சிலைக்கு
எதிர்பார்த்து ஏக்கத்தோடு;
வீட்டில் வளர்க்கும்
நாய் பூனைக்கு
நாங்கள் மேலல்லவா!


கறிவேப்பில்லை


எனக்குள்
எல்லாம் மருத்துவமாய்;
எத்தனை மகத்துவமாய்;
தூக்கி எறியத் தத்துவமாய்!

மணக்க மணக்க;
நான் உணவில் நின்றாலும்;
ஒதுக்கி வைத்து
முறைத்துப் பார்ப்பர்;
எனக்குப் பிடிக்காதுப்பா என!

குடலுக்கு இதமாய்;
செரிமாணத்திற்குப் பதமாய்;
முடி உதிர்வதற்குப் பகையாய்!
சுருக்கமாய் எனை
நெருக்கமாய் கொண்டால்;
அணைத்துக்கொள்வாய்
நண்பனாய்  - பகைத்து;
கொல்வாய் நோயினை!

எனக்குள்
எல்லாம் மருத்துவமாய்;
எத்தனை மகத்துவமாய்;
தூக்கி எறியத் தத்துவமாய்!

மணக்க மணக்க;
நான் உணவில் நின்றாலும்;
ஒதுக்கி வைத்து
முறைத்துப் பார்ப்பர்;
எனக்குப் பிடிக்காதுப்பா என!

குடலுக்கு இதமாய்;
செரிமாணத்திற்குப் பதமாய்;
முடி உதிர்வதற்குப் பகையாய்!
சுருக்கமாய் எனை
நெருக்கமாய் கொண்டால்;
அணைத்துக்கொள்வாய்
நண்பனாய்  - பகைத்து;
கொல்வாய் நோயினை!

வாத்தியாருக்கு எப்படி


முட்டை நல்லது என
வீட்டில் சொல்லி வளர்க்க;
படிப்பில் முட்டைப் போட்டு
எல்லோரும் எனைக்
கண்டு நகைக்க!

மாட்டுத் தொழில்
சிறந்தது என
நண்பர்கள் கதைக்க;
மாடு மேய்க்கக் கூட
லாயிக்கில்லை என
வாத்தியார் உரைக்க!

ஆட்டுப் பண்ணை
பணம் கொழிக்கும்
என அனுபவஸ்தன் சொல்ல;
ஆட்டு மந்தைக்
கூட்டம் என
ஆசிரியர் கொப்பளிக்க!

குழம்பிப்போன நானோ;
புரியாமல் விழித்தேன்;
சத்துள்ள விசயங்களெல்லாம்
எப்படி என் வாத்தியாருக்கு
சொத்தையாகப் போனது என்று!

முட்டை நல்லது என
வீட்டில் சொல்லி வளர்க்க;
படிப்பில் முட்டைப் போட்டு
எல்லோரும் எனைக்
கண்டு நகைக்க!

மாட்டுத் தொழில்
சிறந்தது என
நண்பர்கள் கதைக்க;
மாடு மேய்க்கக் கூட
லாயிக்கில்லை என
வாத்தியார் உரைக்க!

ஆட்டுப் பண்ணை
பணம் கொழிக்கும்
என அனுபவஸ்தன் சொல்ல;
ஆட்டு மந்தைக்
கூட்டம் என
ஆசிரியர் கொப்பளிக்க!

குழம்பிப்போன நானோ;
புரியாமல் விழித்தேன்;
சத்துள்ள விசயங்களெல்லாம்
எப்படி என் வாத்தியாருக்கு
சொத்தையாகப் போனது என்று!

மரக் கட்டை



செல்கள் சிலிர்த்து;
நரம்புகள் அழுது;
விழியோரம் நனைந்து;
கூடவேத் தலையணையும்!

உறக்கத்திற்கு முன்
உன் குரல் கேட்டு;
என் உள்ளம் உன்
முகம் கேட்டு;
தினமும் ஏக்கமாய்;
உன் நினைவுகளால்
மனம் வாட்டமாய்!

சிரித்து சிரித்துப் பேசுவோம்;
வழிந்தோடும்
சூடானக் கண்ணீரை
விழியிலே;
வழியிலே மறித்து;
எப்போதோ
எழுதியக் உன் கடிதத்தை;
எப்போதுமேப் படிப்பேன்;
முடிவுரையில்
முகத்தை போர்த்த;
கைக்குட்டையாய்;
உள்ளம் தனிமையில்
மரக் கட்டையாய்!


செல்கள் சிலிர்த்து;
நரம்புகள் அழுது;
விழியோரம் நனைந்து;
கூடவேத் தலையணையும்!

உறக்கத்திற்கு முன்
உன் குரல் கேட்டு;
என் உள்ளம் உன்
முகம் கேட்டு;
தினமும் ஏக்கமாய்;
உன் நினைவுகளால்
மனம் வாட்டமாய்!

சிரித்து சிரித்துப் பேசுவோம்;
வழிந்தோடும்
சூடானக் கண்ணீரை
விழியிலே;
வழியிலே மறித்து;
எப்போதோ
எழுதியக் உன் கடிதத்தை;
எப்போதுமேப் படிப்பேன்;
முடிவுரையில்
முகத்தை போர்த்த;
கைக்குட்டையாய்;
உள்ளம் தனிமையில்
மரக் கட்டையாய்!

தபால் பெட்டி


உன்னைத் தொட்டுப்பார்த்து
மகிழ்ந்தக் காலங்கள்
மலையேறி;
உன் இரைப்பைக்குத்
தீனியாய் கடிதங்கள்
போட்டுவிட்டு;
உன் வாயில்
கரம்விட்டுப் பார்த்து;
எட்டாத உயரத்திலும்
எட்டிப்பார்ப்பேன்!

போட்டக் கடிதங்கள்
விழுந்ததா எனச்
செல்லமாய் தட்டிப்பார்ப்பேன்
உன் இடுப்பை!

கழிந்தக் காலங்கள்
கனவாக;
மலிந்துப்போனாலும்
இன்னும் மவுசாக
அராசங்க அலுவலுக்கு;
காதுக்கொடுத்துக் கேட்காத
அலுவலருக்கு நீதான்
எங்களுக்கு ஆறுதல்!

உன்னைத் தொட்டுப்பார்த்து
மகிழ்ந்தக் காலங்கள்
மலையேறி;
உன் இரைப்பைக்குத்
தீனியாய் கடிதங்கள்
போட்டுவிட்டு;
உன் வாயில்
கரம்விட்டுப் பார்த்து;
எட்டாத உயரத்திலும்
எட்டிப்பார்ப்பேன்!

போட்டக் கடிதங்கள்
விழுந்ததா எனச்
செல்லமாய் தட்டிப்பார்ப்பேன்
உன் இடுப்பை!

கழிந்தக் காலங்கள்
கனவாக;
மலிந்துப்போனாலும்
இன்னும் மவுசாக
அராசங்க அலுவலுக்கு;
காதுக்கொடுத்துக் கேட்காத
அலுவலருக்கு நீதான்
எங்களுக்கு ஆறுதல்!

பூச்சி மருந்து


நீரை உறிஞ்ச;
நம் மண்ணின்
அடிவயிற்றில்
அடியையும் தாண்டி;
குழாய் விட்டுக் குடைய;
புத்தம் புதுப் பொலிவுடன்
பூச்சிமருந்து;

உன்னையும் என்னையும்
தாகமாக்கி;
தாகம் தீர்க்கவந்தப்
பானம் என்று
விளம்பரத்தை விபச்சாரமாக்கி;
அரைகுறை ஆடையுடன்
அழகிகள்!

நீரை உறிஞ்ச;
நம் மண்ணின்
அடிவயிற்றில்
அடியையும் தாண்டி;
குழாய் விட்டுக் குடைய;
புத்தம் புதுப் பொலிவுடன்
பூச்சிமருந்து;

உன்னையும் என்னையும்
தாகமாக்கி;
தாகம் தீர்க்கவந்தப்
பானம் என்று
விளம்பரத்தை விபச்சாரமாக்கி;
அரைகுறை ஆடையுடன்
அழகிகள்!

பாகற்காய்


உண்ணும்போது
உதடுகள் இரண்டும்
மூக்கிற்கும்;
இமைகள இரண்டும்
புருவத்திற்கும்
புதுப் பயணம் செல்லும்;

விழுங்கும் போதே;
எனக்கு வெட்கப்பட்டு
நாவும்;
ஒதுங்கிச் செல்லும்
தொண்டையும்;
கருத்துள்ள மருத்துவம்
என்றாலும் இன்றுவரை
நான் கசாயமாக மட்டும்!

ஒராயிரம் பலன் கொண்டாலும்
ஒவ்வாமையாக எனை
ஒதுக்கித்தள்ளும் மக்கள்;
சலிப்பு வந்தாலும்
சிரித்துவிட்டுச் செல்வேன்
உண்மை கசக்கதான் செய்யும் என!

உண்ணும்போது
உதடுகள் இரண்டும்
மூக்கிற்கும்;
இமைகள இரண்டும்
புருவத்திற்கும்
புதுப் பயணம் செல்லும்;

விழுங்கும் போதே;
எனக்கு வெட்கப்பட்டு
நாவும்;
ஒதுங்கிச் செல்லும்
தொண்டையும்;
கருத்துள்ள மருத்துவம்
என்றாலும் இன்றுவரை
நான் கசாயமாக மட்டும்!

ஒராயிரம் பலன் கொண்டாலும்
ஒவ்வாமையாக எனை
ஒதுக்கித்தள்ளும் மக்கள்;
சலிப்பு வந்தாலும்
சிரித்துவிட்டுச் செல்வேன்
உண்மை கசக்கதான் செய்யும் என!

படிக்காத மேதை


அழுக்குச் சட்டையும்
எண்ணைக் காணா
என் சிகையும்;
என்னைக் காணா
முகக் கண்ணாடியும்;
காலணிகள் என்றுக்
காதில் மட்டுமே விழுந்து;
தள்ளமுடியா வயதில்
தள்ளுவண்டியைத்
தள்ளிக்கொண்டு;

படிக்காத மேதைகளில்
நானும் ஒருவனாய்;
குழந்தைத் தொழிலாளர்
பட்டம் பெற்று;

என்னைப் படம் பிடித்து;
பக்கங்கள் நிரப்பி;
பாராட்டுப் பெறும்
புகைப்படக்காரன்;
தன்னை அறியாமலே
என்னைத் தொழில் ஈடுபடுத்தி;
தலைப்பு மட்டும்
ஒழிப்போம்
குழந்தைத் தொழிலாளர்களை!

அழுக்குச் சட்டையும்
எண்ணைக் காணா
என் சிகையும்;
என்னைக் காணா
முகக் கண்ணாடியும்;
காலணிகள் என்றுக்
காதில் மட்டுமே விழுந்து;
தள்ளமுடியா வயதில்
தள்ளுவண்டியைத்
தள்ளிக்கொண்டு;

படிக்காத மேதைகளில்
நானும் ஒருவனாய்;
குழந்தைத் தொழிலாளர்
பட்டம் பெற்று;

என்னைப் படம் பிடித்து;
பக்கங்கள் நிரப்பி;
பாராட்டுப் பெறும்
புகைப்படக்காரன்;
தன்னை அறியாமலே
என்னைத் தொழில் ஈடுபடுத்தி;
தலைப்பு மட்டும்
ஒழிப்போம்
குழந்தைத் தொழிலாளர்களை!

விலையேதுமில்லை



கறுத்த முடிகள்
களைத்து;
நரைத்தாலும்
இன்னும் மழலையாக;
உன் மடியில்
நான் வீழ்ந்தால்!

காய்ந்துப் போன
உணவும் உன்
பாசத்தில் ஊறி;
என் தொண்டையில்
உருகும் நீ
ஊட்டுவதாய் இருந்தால்!

தலை உருளும்
கவலை வந்தாலும்;
தவிடுப் பொடியாகும்;
உன் விரல்
என் தலையில்
தாலாட்டுப் பாடினால்!

வற்றாத உன் அன்பிற்கு
விலையேதுமில்லை;
வறண்ட உன் கைரேகை
என் முகத்தைக் கீறீனாலும்
அந்த மட்டற்ற
மகிழ்ச்சியிற்கு ஈடேதுமில்லை!


கறுத்த முடிகள்
களைத்து;
நரைத்தாலும்
இன்னும் மழலையாக;
உன் மடியில்
நான் வீழ்ந்தால்!

காய்ந்துப் போன
உணவும் உன்
பாசத்தில் ஊறி;
என் தொண்டையில்
உருகும் நீ
ஊட்டுவதாய் இருந்தால்!

தலை உருளும்
கவலை வந்தாலும்;
தவிடுப் பொடியாகும்;
உன் விரல்
என் தலையில்
தாலாட்டுப் பாடினால்!

வற்றாத உன் அன்பிற்கு
விலையேதுமில்லை;
வறண்ட உன் கைரேகை
என் முகத்தைக் கீறீனாலும்
அந்த மட்டற்ற
மகிழ்ச்சியிற்கு ஈடேதுமில்லை!

நியாயமில்லை



அன்னையின் கருவில்
உருவெடுக்கும் போது
நீ எனைக்கண்டிருக்க
நியாயமில்லை;

சுவாசத்தைச் சுவைக்க
என் மனைவியைக்
கதறவைத்து;
கருவீட்டில் இருந்து
நீ எட்டிப்பார்க்கும் போது
நீ எனைக்கண்டிருக்க
நியாயமில்லை;

எல்லோரும் உன்
அருகில் நின்று
அழகை ரசிக்க;
நான் பெயரைத்
தேர்வுச் செய்து;
களைத்துப்போன உன்
அன்னையுடன் கைப்பேசியில்
கதைக்கும் போது;
நீ எனைக்கண்டிருக்க
நியாயமில்லை!

உன் அம்மாச்
சொல்லச் சொல்ல;
எச்சில் சொட்ட அத்தா
என அழைக்கும் போது;
நான் கண்ட மகிழ்ச்சியை
நீ கண்டிருக்க
நியாயமில்லை!

உனக்கு முகம் தெரிந்து;
நான் முன்னே
நிற்கும் போது
எனை மாமா என்று
அழைத்ததுக் கொஞ்சம் கூட
நியாயமில்லை!


அன்னையின் கருவில்
உருவெடுக்கும் போது
நீ எனைக்கண்டிருக்க
நியாயமில்லை;

சுவாசத்தைச் சுவைக்க
என் மனைவியைக்
கதறவைத்து;
கருவீட்டில் இருந்து
நீ எட்டிப்பார்க்கும் போது
நீ எனைக்கண்டிருக்க
நியாயமில்லை;

எல்லோரும் உன்
அருகில் நின்று
அழகை ரசிக்க;
நான் பெயரைத்
தேர்வுச் செய்து;
களைத்துப்போன உன்
அன்னையுடன் கைப்பேசியில்
கதைக்கும் போது;
நீ எனைக்கண்டிருக்க
நியாயமில்லை!

உன் அம்மாச்
சொல்லச் சொல்ல;
எச்சில் சொட்ட அத்தா
என அழைக்கும் போது;
நான் கண்ட மகிழ்ச்சியை
நீ கண்டிருக்க
நியாயமில்லை!

உனக்கு முகம் தெரிந்து;
நான் முன்னே
நிற்கும் போது
எனை மாமா என்று
அழைத்ததுக் கொஞ்சம் கூட
நியாயமில்லை!

ஓட்டுப் போடலையா!



நித்திரையைத் தொலைத்து
முத்திரைப் பதிக்க;
சுருங்கிய மூளையைச்
சிலிர்க்கவைத்து;
உள்ளம் உருகி;
மெல்லமாய் அழுது;
எழுத்துப்பிழைகளைக்
களையெடுத்து;
கருத்துப்பிழைகளை
அறுவடைச்செய்து;
என் பக்கத்தை நிரப்பினால்;
படித்துவிட்டு
பறந்துச்செல்லும்
பருந்துகளாய் வாசகர்கள்;
கவிதைக்குத் தீனியிடாமல்!
ஓட்டுப்பெட்டியை
ஒருமுறைக்கூடத்
தீண்டாமல்!





நித்திரையைத் தொலைத்து
முத்திரைப் பதிக்க;
சுருங்கிய மூளையைச்
சிலிர்க்கவைத்து;
உள்ளம் உருகி;
மெல்லமாய் அழுது;
எழுத்துப்பிழைகளைக்
களையெடுத்து;
கருத்துப்பிழைகளை
அறுவடைச்செய்து;
என் பக்கத்தை நிரப்பினால்;
படித்துவிட்டு
பறந்துச்செல்லும்
பருந்துகளாய் வாசகர்கள்;
கவிதைக்குத் தீனியிடாமல்!
ஓட்டுப்பெட்டியை
ஒருமுறைக்கூடத்
தீண்டாமல்!



இணையம் ஜாக்கிரதை



ஒத்த அறையில்
மெத்தையில் வீழ்ந்து;
புத்தகத்தைத் திருப்பினாலும்
புத்தி என்னவோ;
ஒரமாய் நின்று;
ஓரக்கண்ணால்
கண் சிமிட்டும்
என் பக்கம்;
வயதோ தனிமையிற்கு;
மனமோச் சந்தர்ப்பத்திற்குக்
கட்டுப்பட்டு!

உறவுகளோப்
புத்தகப் புழு என
உனை எண்ண;
புழுவாய் நீ
நெளிந்துக் கொண்டிருக்கிறாய்
என்னோடு!

நம்பிக்கை எனும்
மொத்தப் போர்வையால்;
குடும்பம் உனைப் போர்த்த;
நீயோப் புகுந்துகொண்டு;
இணையத்தில் போர் செய்ய!

வழிக் கொடுக்கும்
உறவுகள் உன்
விழிகளை ஒருமுறைக்
கண்டித்துத் தண்டித்திருந்தால்
தடம்மாறி இருக்கமாட்டாய்;
குணம் மாறியிருக்கமாட்டாய்!


ஒத்த அறையில்
மெத்தையில் வீழ்ந்து;
புத்தகத்தைத் திருப்பினாலும்
புத்தி என்னவோ;
ஒரமாய் நின்று;
ஓரக்கண்ணால்
கண் சிமிட்டும்
என் பக்கம்;
வயதோ தனிமையிற்கு;
மனமோச் சந்தர்ப்பத்திற்குக்
கட்டுப்பட்டு!

உறவுகளோப்
புத்தகப் புழு என
உனை எண்ண;
புழுவாய் நீ
நெளிந்துக் கொண்டிருக்கிறாய்
என்னோடு!

நம்பிக்கை எனும்
மொத்தப் போர்வையால்;
குடும்பம் உனைப் போர்த்த;
நீயோப் புகுந்துகொண்டு;
இணையத்தில் போர் செய்ய!

வழிக் கொடுக்கும்
உறவுகள் உன்
விழிகளை ஒருமுறைக்
கண்டித்துத் தண்டித்திருந்தால்
தடம்மாறி இருக்கமாட்டாய்;
குணம் மாறியிருக்கமாட்டாய்!

அணை 999



உரிமை உண்டு
என உரைக்கும்
வரலாறு;
உடைப்போம் என
அரசியல் செய்யும்
தகராறு;
அணை என்பதை
மறந்துவிட்டு;
கட்டிப்புரளும் உணர்வுகள்!

விரிசல் என அங்கே
முழக்கம்;
உடைத்தால் உறவுகளில்
விரிசல் என இங்கே
முழக்கம்;
சுற்றியிருக்கும் புராணச்
சொந்தங்கள் நீர் தர மறுக்கும்!

பஸ் உடைப்பு;
ஆள் எரிப்பு – சேதங்கள்
மனிதநேயத்திற்க்கு;
வழக்கமான அரசியலால்;
பழக்கமான பட்டியலில்
அணைத்துக்கொண்டோம்;
அணை உன்னை!


உரிமை உண்டு
என உரைக்கும்
வரலாறு;
உடைப்போம் என
அரசியல் செய்யும்
தகராறு;
அணை என்பதை
மறந்துவிட்டு;
கட்டிப்புரளும் உணர்வுகள்!

விரிசல் என அங்கே
முழக்கம்;
உடைத்தால் உறவுகளில்
விரிசல் என இங்கே
முழக்கம்;
சுற்றியிருக்கும் புராணச்
சொந்தங்கள் நீர் தர மறுக்கும்!

பஸ் உடைப்பு;
ஆள் எரிப்பு – சேதங்கள்
மனிதநேயத்திற்க்கு;
வழக்கமான அரசியலால்;
பழக்கமான பட்டியலில்
அணைத்துக்கொண்டோம்;
அணை உன்னை!

தினமலர்


மை நன்று;
காகிதமும் நன்று;
எழுதப்பிடித்தக் கரத்தில்;
காவி எங்கோ
ஒட்டியிருப்பதால்;
ஒட்டியிருக்கும் செய்தி
எங்களை உரசிப்பார்க்கும்!

இல்லாதச் செய்திகள்
எங்களை வர்ணித்து;
வர்ணம் பூசி;
கர்ணம் அடிக்கும்
பத்திரிக்கைத் தர்மம்!

தொட்டியில் உள்ள
மழலையைச்
சீண்டி விட்டு - பின்
சிரித்து விட்டு;
விற்பனையில்
முத்திரைப் பதிக்க அவ்வப்போது
முகத்திரையை விலக்கும் உனை;
விலக்குவோம் - மக்களுக்கு
உனைப்பற்றி விளக்குவோம்!
பின் ஒதுக்குவோம்!

மை நன்று;
காகிதமும் நன்று;
எழுதப்பிடித்தக் கரத்தில்;
காவி எங்கோ
ஒட்டியிருப்பதால்;
ஒட்டியிருக்கும் செய்தி
எங்களை உரசிப்பார்க்கும்!

இல்லாதச் செய்திகள்
எங்களை வர்ணித்து;
வர்ணம் பூசி;
கர்ணம் அடிக்கும்
பத்திரிக்கைத் தர்மம்!

தொட்டியில் உள்ள
மழலையைச்
சீண்டி விட்டு - பின்
சிரித்து விட்டு;
விற்பனையில்
முத்திரைப் பதிக்க அவ்வப்போது
முகத்திரையை விலக்கும் உனை;
விலக்குவோம் - மக்களுக்கு
உனைப்பற்றி விளக்குவோம்!
பின் ஒதுக்குவோம்!

ஒரு முறைக் கூட


என்ன வேண்டும்
என்றதும்;
கொட்டித்தீர்த்தாய்;
உதைத்துப் பிரளப் பந்து;
அடித்து விளையாட
மட்டை;
அணைத்துக் கொள்ளப்
பொம்மை;
இழுத்துச் செல்லச்
சிறுவண்டி;
ருசித்துக் கொள்ள
மிட்டாய்;
பசியை வெல்ல ரொட்டி;
வரிசைப்படுத்தும்
சொல்லழகைக் கேட்டும்;
விழியின் தாழ்ப்பாளை
உடைத்துக் கண்ணீர்
கரைப் புறண்டது;
ஒரு முறைக் கூட
நான் வேண்டும் என;
நீ உரைக்காததைக் கண்டு!

என்ன வேண்டும்
என்றதும்;
கொட்டித்தீர்த்தாய்;
உதைத்துப் பிரளப் பந்து;
அடித்து விளையாட
மட்டை;
அணைத்துக் கொள்ளப்
பொம்மை;
இழுத்துச் செல்லச்
சிறுவண்டி;
ருசித்துக் கொள்ள
மிட்டாய்;
பசியை வெல்ல ரொட்டி;
வரிசைப்படுத்தும்
சொல்லழகைக் கேட்டும்;
விழியின் தாழ்ப்பாளை
உடைத்துக் கண்ணீர்
கரைப் புறண்டது;
ஒரு முறைக் கூட
நான் வேண்டும் என;
நீ உரைக்காததைக் கண்டு!

ஊனம்



உறுப்புகள் அழகாகி;
உள்ளம் கோணலான
உறவுகள் உரைக்கும்
எனை ஊனம் என்று!

உற்சாகத்தை
விற்பனைச் செய்து;
உதாசீனத்தை
உதடுகளால் முத்தமிடும்
உறவுகள் உரைக்கும்
ஊனம் நான் என்று!

நன்மைச் செய்யக்
கரம் இருந்தும்;
அன்பைப் பொழியும்
விழி இருந்தும்
ஊமையான உள்ளம்
உரைக்கும்
ஊனம் நான்தான் என்று!

விளக்கியப் பின்னும்;
விளங்காத உள்ளங்கள்
உரைக்கும் என்னை
உடல் நலம் குன்றியவர் என;
உள்ளுக்குள்ளே
உரைத்துக்கொள்வேன்;
பாவம் அவர்;
மனநலம் குன்றியவர் என!


உறுப்புகள் அழகாகி;
உள்ளம் கோணலான
உறவுகள் உரைக்கும்
எனை ஊனம் என்று!

உற்சாகத்தை
விற்பனைச் செய்து;
உதாசீனத்தை
உதடுகளால் முத்தமிடும்
உறவுகள் உரைக்கும்
ஊனம் நான் என்று!

நன்மைச் செய்யக்
கரம் இருந்தும்;
அன்பைப் பொழியும்
விழி இருந்தும்
ஊமையான உள்ளம்
உரைக்கும்
ஊனம் நான்தான் என்று!

விளக்கியப் பின்னும்;
விளங்காத உள்ளங்கள்
உரைக்கும் என்னை
உடல் நலம் குன்றியவர் என;
உள்ளுக்குள்ளே
உரைத்துக்கொள்வேன்;
பாவம் அவர்;
மனநலம் குன்றியவர் என!

வாய்வு தொல்லை



குழப்பம் கொண்டக்
குடலால்;
குடைந்து எடுக்கும் காற்று;
வயிறு இரைச்சலால்
எரிச்சல் கொடுத்து;
தொண்டைக்குள்
சுற்றி வளையமிட்டு;
வருமா வராதா
என எதிர்ப்பார்த்தால்;
ஏமாற்றி செல்லும்
ஏப்பம்!

செரிமாணக் கோளாறு
என எண்ணி;
வாயு ஒழிக்க;
வாயு நிரம்பிய
குளிர்பானத்தை 
வாயில் விட்டால்;
குமுறிகொண்டிருக்கும்
குடல்களைப் பதம்பார்த்துப்
பாடம் செய்ய;
நான் கற்றுக்கொண்ட
இன்னொருப் பாடம்! 


குழப்பம் கொண்டக்
குடலால்;
குடைந்து எடுக்கும் காற்று;
வயிறு இரைச்சலால்
எரிச்சல் கொடுத்து;
தொண்டைக்குள்
சுற்றி வளையமிட்டு;
வருமா வராதா
என எதிர்ப்பார்த்தால்;
ஏமாற்றி செல்லும்
ஏப்பம்!

செரிமாணக் கோளாறு
என எண்ணி;
வாயு ஒழிக்க;
வாயு நிரம்பிய
குளிர்பானத்தை 
வாயில் விட்டால்;
குமுறிகொண்டிருக்கும்
குடல்களைப் பதம்பார்த்துப்
பாடம் செய்ய;
நான் கற்றுக்கொண்ட
இன்னொருப் பாடம்! 

புரோட்டா



நீ இல்லாத
விருந்துகளும் குறைவு;
உனை ரசித்து
தொடர்ந்து உண்டுவந்தால்
ஆயுளும் குறைவு!

குடல்வலிமையை நீ
புரட்டி எடுக்க;
புரட்டி எடுத்த உனை
நாங்கள் மென்று ரசித்துப்
பழித்தீர்க்க;
கோபித்துக்கொண்ட நீயோ
செரிமாணம் கொள்ளாமல்;

எங்களைக்
கொல்லாமல் கொல்ல;
புதுப் புது வியாதிகளை
நாங்கள் அள்ள!

புரியாத பாஷையில்
உனக்கு யார் வைத்தாரோ
பெயர் புரோட்டா;
கடை எழுத்துக்கள் மட்டும்
கண் முன்னே;
தின்றுக்கொழுத்தால்
நீ காட்டப்போவது எங்கள்
வாழ்விற்கு டா டா என்று!


தலைப்புத் தந்தவர்:
ஆரீஸ் முகம்மது - வடகரை (மாயவரம்) 


நீ இல்லாத
விருந்துகளும் குறைவு;
உனை ரசித்து
தொடர்ந்து உண்டுவந்தால்
ஆயுளும் குறைவு!

குடல்வலிமையை நீ
புரட்டி எடுக்க;
புரட்டி எடுத்த உனை
நாங்கள் மென்று ரசித்துப்
பழித்தீர்க்க;
கோபித்துக்கொண்ட நீயோ
செரிமாணம் கொள்ளாமல்;

எங்களைக்
கொல்லாமல் கொல்ல;
புதுப் புது வியாதிகளை
நாங்கள் அள்ள!

புரியாத பாஷையில்
உனக்கு யார் வைத்தாரோ
பெயர் புரோட்டா;
கடை எழுத்துக்கள் மட்டும்
கண் முன்னே;
தின்றுக்கொழுத்தால்
நீ காட்டப்போவது எங்கள்
வாழ்விற்கு டா டா என்று!


தலைப்புத் தந்தவர்:
ஆரீஸ் முகம்மது - வடகரை (மாயவரம்) 

மல்லிகைப் பூ



என்னை
நெருங்கும்போதே
மூக்கோடுச் சேர்ந்து
முகத்தையும்
சிரிக்கச் செய்வேன்!

மழைப் பெய்தாலும்;
வெயில் வென்றாலும்
விலையேற்றி ரசிப்பார்;
விலை உயர்ந்தப்
பொன்னைகையும்
மங்கையர் சிறிது
நேரம் மறப்பார்!

மென்மையான வண்ணம்
கொண்ட எனக்கு;
வன்மையான
விலை வந்தாலும்;
விழி விரியச் செய்வேன்;
மணம் கமழ
மனிதர் மனம் கவிழ்ப்பேன்!


என்னை
நெருங்கும்போதே
மூக்கோடுச் சேர்ந்து
முகத்தையும்
சிரிக்கச் செய்வேன்!

மழைப் பெய்தாலும்;
வெயில் வென்றாலும்
விலையேற்றி ரசிப்பார்;
விலை உயர்ந்தப்
பொன்னைகையும்
மங்கையர் சிறிது
நேரம் மறப்பார்!

மென்மையான வண்ணம்
கொண்ட எனக்கு;
வன்மையான
விலை வந்தாலும்;
விழி விரியச் செய்வேன்;
மணம் கமழ
மனிதர் மனம் கவிழ்ப்பேன்!

விதவை



உணர்வு ஒட்டியிருக்க;
வயதோ மிச்சமிருக்க;
கட்டியக் கணவன்
காலாவதியாக;
இறுதிச் சொட்டுக்
கண்ணீரும் அமைதியாக;
அழுதுப்புலம்பி
ஆண்டுகள் ஓடினாலும்;
இன்னும் நான் விதவை;
இழுத்து மூடிக்கொண்டதுச்
சமுதாயம் கதவை!

ஆறுதல் சொல்லி
அணைக்கக் கரம் வந்தாலும்;
நொந்துப்போன மனதிற்கு
வந்துப்போகும் உறவுகள்;
காயத்திற்கு மருந்திடும்;
தழும்புகள் மட்டும் நீங்காமல்;
பல இரவுகள் நான் தூங்காமல்!

உணர்வுகளை
வாட்டும் நரம்புகள்
போட்டிப்போட;
நரைவிழுந்து நான்
தரையில் வீழும்வரை
இப்படியே என
எண்ணுகையிலே;

மார்க்கம் வந்து
மனதை முட்டியது;
மறுமணம் எனக்
கதவைத் தட்டியது;
அதன் பெயர்
இஸ்லாம் என்றது;
எளிமையான முறையில்
செழுமை என்றது;
என் இதயத்தைக்
கொள்ளைக் கொண்டது!

ஒடுக்கி வைத்தச்
சமுதாயம் எனைத்
துர்சகுனம் என்றது;
இஸ்லாம் மட்டுமே
அதைத் தகனம் செய்தது!

ஒளிந்திருக்கும் உண்மைகள்
பல இதிலுண்டு;
அதில் ஒன்றுள்ளது;
பெண்ணுரிமை என்றுள்ளது!


உணர்வு ஒட்டியிருக்க;
வயதோ மிச்சமிருக்க;
கட்டியக் கணவன்
காலாவதியாக;
இறுதிச் சொட்டுக்
கண்ணீரும் அமைதியாக;
அழுதுப்புலம்பி
ஆண்டுகள் ஓடினாலும்;
இன்னும் நான் விதவை;
இழுத்து மூடிக்கொண்டதுச்
சமுதாயம் கதவை!

ஆறுதல் சொல்லி
அணைக்கக் கரம் வந்தாலும்;
நொந்துப்போன மனதிற்கு
வந்துப்போகும் உறவுகள்;
காயத்திற்கு மருந்திடும்;
தழும்புகள் மட்டும் நீங்காமல்;
பல இரவுகள் நான் தூங்காமல்!

உணர்வுகளை
வாட்டும் நரம்புகள்
போட்டிப்போட;
நரைவிழுந்து நான்
தரையில் வீழும்வரை
இப்படியே என
எண்ணுகையிலே;

மார்க்கம் வந்து
மனதை முட்டியது;
மறுமணம் எனக்
கதவைத் தட்டியது;
அதன் பெயர்
இஸ்லாம் என்றது;
எளிமையான முறையில்
செழுமை என்றது;
என் இதயத்தைக்
கொள்ளைக் கொண்டது!

ஒடுக்கி வைத்தச்
சமுதாயம் எனைத்
துர்சகுனம் என்றது;
இஸ்லாம் மட்டுமே
அதைத் தகனம் செய்தது!

ஒளிந்திருக்கும் உண்மைகள்
பல இதிலுண்டு;
அதில் ஒன்றுள்ளது;
பெண்ணுரிமை என்றுள்ளது!

உன் விரல் படாமல்



சிவக்காத
மருதாணியைக் காண்பித்து;
சிரித்துக்கொண்டே
நீ கேட்கும்போது;
சிவந்திருக்கு எனும்போதே;
சிவக்கும் உன் கன்னம்
சிரிப்பிலே!

நகை வாங்கத்
தொகையில்லை எனும்போது;
கண்ணாடி வளையல்களால்
கண் சிமிட்டிச் சொல்வாய்
இது போதும் இப்போது என்று!

முதல் பொத்தானில் இருந்து
இறுதி பொத்தான் வரை
என் சட்டை உன் விரல்
இடுக்கில் படும்பாடு;
இனிமேல் உன் விரல்
படாமல் என் மனம்
படாதப்பாடு!

இப்போதுத் தூரமாய்;
இதயம் பாரமாய்;
ஏங்கித் தவிக்கும் விழியும்;
தூக்கத்தைக் கெடுக்கும்
மன வலியும்;
மவுனமாய்!


சிவக்காத
மருதாணியைக் காண்பித்து;
சிரித்துக்கொண்டே
நீ கேட்கும்போது;
சிவந்திருக்கு எனும்போதே;
சிவக்கும் உன் கன்னம்
சிரிப்பிலே!

நகை வாங்கத்
தொகையில்லை எனும்போது;
கண்ணாடி வளையல்களால்
கண் சிமிட்டிச் சொல்வாய்
இது போதும் இப்போது என்று!

முதல் பொத்தானில் இருந்து
இறுதி பொத்தான் வரை
என் சட்டை உன் விரல்
இடுக்கில் படும்பாடு;
இனிமேல் உன் விரல்
படாமல் என் மனம்
படாதப்பாடு!

இப்போதுத் தூரமாய்;
இதயம் பாரமாய்;
ஏங்கித் தவிக்கும் விழியும்;
தூக்கத்தைக் கெடுக்கும்
மன வலியும்;
மவுனமாய்!

நிரந்தர வீடு



ஓடியப் பாதம்
ஓய்ந்துக் கிடக்க;
விழிகள் இரண்டும்
மிரண்டு நிற்க;
கொண்டாடிய மூச்சு
இப்போது மேனிக்குள்
அல்லாட;
சுற்றித் தவிக்கும்
உறவுகளின் அழுகை;
கொஞ்சம் கொஞ்சமாகத்
தொலைவிற்குச் செல்ல;
இறுதி நிமிடம்
எனை விட்டு
நீங்கத் தயாராக!

விடைப்பெறும் நேரத்தில்
விழிகள் ஏதோக்
கண்ணீரால் கதைக்க;
வாடகைக் கூட்டை
ஜடமாக்கி – ஆவி
நிரந்தர வீட்டை நோக்கி!


ஓடியப் பாதம்
ஓய்ந்துக் கிடக்க;
விழிகள் இரண்டும்
மிரண்டு நிற்க;
கொண்டாடிய மூச்சு
இப்போது மேனிக்குள்
அல்லாட;
சுற்றித் தவிக்கும்
உறவுகளின் அழுகை;
கொஞ்சம் கொஞ்சமாகத்
தொலைவிற்குச் செல்ல;
இறுதி நிமிடம்
எனை விட்டு
நீங்கத் தயாராக!

விடைப்பெறும் நேரத்தில்
விழிகள் ஏதோக்
கண்ணீரால் கதைக்க;
வாடகைக் கூட்டை
ஜடமாக்கி – ஆவி
நிரந்தர வீட்டை நோக்கி!