விதவைஉணர்வு ஒட்டியிருக்க;
வயதோ மிச்சமிருக்க;
கட்டியக் கணவன்
காலாவதியாக;
இறுதிச் சொட்டுக்
கண்ணீரும் அமைதியாக;
அழுதுப்புலம்பி
ஆண்டுகள் ஓடினாலும்;
இன்னும் நான் விதவை;
இழுத்து மூடிக்கொண்டதுச்
சமுதாயம் கதவை!

ஆறுதல் சொல்லி
அணைக்கக் கரம் வந்தாலும்;
நொந்துப்போன மனதிற்கு
வந்துப்போகும் உறவுகள்;
காயத்திற்கு மருந்திடும்;
தழும்புகள் மட்டும் நீங்காமல்;
பல இரவுகள் நான் தூங்காமல்!

உணர்வுகளை
வாட்டும் நரம்புகள்
போட்டிப்போட;
நரைவிழுந்து நான்
தரையில் வீழும்வரை
இப்படியே என
எண்ணுகையிலே;

மார்க்கம் வந்து
மனதை முட்டியது;
மறுமணம் எனக்
கதவைத் தட்டியது;
அதன் பெயர்
இஸ்லாம் என்றது;
எளிமையான முறையில்
செழுமை என்றது;
என் இதயத்தைக்
கொள்ளைக் கொண்டது!

ஒடுக்கி வைத்தச்
சமுதாயம் எனைத்
துர்சகுனம் என்றது;
இஸ்லாம் மட்டுமே
அதைத் தகனம் செய்தது!

ஒளிந்திருக்கும் உண்மைகள்
பல இதிலுண்டு;
அதில் ஒன்றுள்ளது;
பெண்ணுரிமை என்றுள்ளது!


உணர்வு ஒட்டியிருக்க;
வயதோ மிச்சமிருக்க;
கட்டியக் கணவன்
காலாவதியாக;
இறுதிச் சொட்டுக்
கண்ணீரும் அமைதியாக;
அழுதுப்புலம்பி
ஆண்டுகள் ஓடினாலும்;
இன்னும் நான் விதவை;
இழுத்து மூடிக்கொண்டதுச்
சமுதாயம் கதவை!

ஆறுதல் சொல்லி
அணைக்கக் கரம் வந்தாலும்;
நொந்துப்போன மனதிற்கு
வந்துப்போகும் உறவுகள்;
காயத்திற்கு மருந்திடும்;
தழும்புகள் மட்டும் நீங்காமல்;
பல இரவுகள் நான் தூங்காமல்!

உணர்வுகளை
வாட்டும் நரம்புகள்
போட்டிப்போட;
நரைவிழுந்து நான்
தரையில் வீழும்வரை
இப்படியே என
எண்ணுகையிலே;

மார்க்கம் வந்து
மனதை முட்டியது;
மறுமணம் எனக்
கதவைத் தட்டியது;
அதன் பெயர்
இஸ்லாம் என்றது;
எளிமையான முறையில்
செழுமை என்றது;
என் இதயத்தைக்
கொள்ளைக் கொண்டது!

ஒடுக்கி வைத்தச்
சமுதாயம் எனைத்
துர்சகுனம் என்றது;
இஸ்லாம் மட்டுமே
அதைத் தகனம் செய்தது!

ஒளிந்திருக்கும் உண்மைகள்
பல இதிலுண்டு;
அதில் ஒன்றுள்ளது;
பெண்ணுரிமை என்றுள்ளது!

6 comments:

 1. விதவை மறுமணம் அவசியமான ஒன்று சகோதரரே

  ReplyDelete
 2. அருமையான பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.
  நம்ம தளத்தில்:
  "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

  ReplyDelete
 3. ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பே "பெண்ணுரிமை " பற்றி அல்லாஹ் குர்ரானில் கூறியுள்ளான்...
  பகிர்ந்தமைக்கு நன்றி....

  ReplyDelete
 4. திருமதி பிஎஸ் ஸ்ரீதர் அவர்களே. நீங்கள் சொன்னக் கருத்தைதான் நானும் கவிதையில் சொல்லியிருக்கிறேன், பிருந்துக்கொண்டு பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 5. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 6. உங்களின் மென்மையான கருத்திற்கு மிக்க நன்றி mums அவர்களே.

  ReplyDelete