வயதாகிவிட்ட வயது



ஒட்டியிருக்கும் காலத்தில்
உன் புகைப்படத்தைக்
கட்டிபிடித்துக்
கடல் கடந்து நான்;
மணம் முடித்து
மனதை மயானமாக்கி;
ஈரமான உன் 
விழிப்பட்ட ஈரம்
என் விரல்களில் இன்னும்;
கண்முன்னே!

வெட்ட
வெளிச்சமானச் செல்வம்
ஒளிந்திருப்பதாக எண்ணி;
தேடி வந்தேன் பாலைக்கு;
நாளைக்கு நாளைக்கு என்று
வருடமும் ஓடிவிட்டது;
வயதிற்கும் வயதாகிவிட்டது!

முறுக்கேறிய நரம்புகள்
அசந்துப்போய்;
உண்ர்ச்சிகள் அநாதையாகி;
உன் அருகில் நான்;
உண்டாக்கியக் காயங்கள்
நம் இதயத்தை
துண்டாக்கியதால்
மன்னிப்புக் கோருகிறேன்
கண்ணீருடன்;காதலுடன்!


ஒட்டியிருக்கும் காலத்தில்
உன் புகைப்படத்தைக்
கட்டிபிடித்துக்
கடல் கடந்து நான்;
மணம் முடித்து
மனதை மயானமாக்கி;
ஈரமான உன் 
விழிப்பட்ட ஈரம்
என் விரல்களில் இன்னும்;
கண்முன்னே!

வெட்ட
வெளிச்சமானச் செல்வம்
ஒளிந்திருப்பதாக எண்ணி;
தேடி வந்தேன் பாலைக்கு;
நாளைக்கு நாளைக்கு என்று
வருடமும் ஓடிவிட்டது;
வயதிற்கும் வயதாகிவிட்டது!

முறுக்கேறிய நரம்புகள்
அசந்துப்போய்;
உண்ர்ச்சிகள் அநாதையாகி;
உன் அருகில் நான்;
உண்டாக்கியக் காயங்கள்
நம் இதயத்தை
துண்டாக்கியதால்
மன்னிப்புக் கோருகிறேன்
கண்ணீருடன்;காதலுடன்!

4 comments:

  1. மன்னிப்புக் கோருகிறேன்
    கண்ணீருடன்;காதலுடன்! //

    இறுதி வரிகள் மனம் கனக்கச் செய்து போகிறது
    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  2. ரமணி அவர்களுக்கு, நீண்டான் நாளைக்கிற்குப் பிறகு உங்கள் கருத்தைக் காண்பதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. இந்த நிலைமையில் இருக்கும் யாரும் மறுக்க முடியாத வரிகள்.....

    ReplyDelete
  4. உங்கள் கருத்துக்கள் உற்சாகம் ஊட்டக்கூடியதாக உள்ளது mums அவர்களே.

    ReplyDelete