குமட்டலில்
குடும்பமே
குதுகலிப்பில்;
கரு எனும் அறையில்
உன்னுடை அரவணைப்பில்;
முகம் காட்டுவதற்கு முன்னே
அகத்திற்கு அறுசுவை
உணவு பங்கீடு!
தோல்களினால் ஆன
கருவறை;
இதைவிட பாதுகாப்பன
இடம் வேறில்லை!
உதைத்தாலும் அணைக்கிறாய்;
குமட்டவைத்தாலும் சிரிக்கிறாய்;
தொட்டுப்பார்த்துப் பூரிப்படைகிறாய்,
அத்தாவை தொடச்சொல்லி
வம்பு பண்ணுகிறாய்!
உள்ளே
நீரிலே கிடந்தாலும்;
நீ இருப்பதால்
சுகமாக;
வலி கொடுத்து
வெளியே வர
வழி தேடுவதெல்லாம்;
நான் அழுது உன்
சிரிப்பைக் காண!
வணக்கம்
ReplyDeleteஅருமையாக கவிதையில் சொன்னிர்கள் நான் அழுது வெளியில் வந்து உன் சிரிப்பைக் காண
வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதைக்கான உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி தோழர் ரூபன் அவர்களே!
Deleteரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?
ReplyDeleteமொய் வைக்கக்கூடிய கல்யாண மண்டபத்தை சொன்னால் வைக்க தோதுவாக இருக்கும் :)
Deleteஅருமையான கவிதை...
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்....
நன்றி தோழர் கவிதை வீதி செளந்தர் அவர்களே! :)
Delete