கொஞ்சம் சாப்பிடுங்கவெதும்பிய உள்ளத்தால் 
விழிகள் தளும்பும்;
உன் நினைவுகளிலே 
நெஞ்சம் மூழ்கும்;
ஒரு பிடி உண்டாலும் 
உன் நினைவுகளால் 
தொண்டைத் திக்கும்!

கொஞ்சம் சாப்பிடுங்க எனக் 
கெஞ்சலாய் நீ 
கொஞ்சும் போதெல்லாம்
முடியாது என 
முறைத்தத் தருணம்
இன்று முட்டித் தள்ளுகிறது;
நெஞ்சைக் கனக்கச் செய்கிறது!


வெதும்பிய உள்ளத்தால் 
விழிகள் தளும்பும்;
உன் நினைவுகளிலே 
நெஞ்சம் மூழ்கும்;
ஒரு பிடி உண்டாலும் 
உன் நினைவுகளால் 
தொண்டைத் திக்கும்!

கொஞ்சம் சாப்பிடுங்க எனக் 
கெஞ்சலாய் நீ 
கொஞ்சும் போதெல்லாம்
முடியாது என 
முறைத்தத் தருணம்
இன்று முட்டித் தள்ளுகிறது;
நெஞ்சைக் கனக்கச் செய்கிறது!