அழுக்குச் சட்டையும்
எண்ணைக் காணா
என் சிகையும்;
என்னைக் காணா
முகக் கண்ணாடியும்;
காலணிகள் என்றுக்
காதில் மட்டுமே விழுந்து;
தள்ளமுடியா வயதில்
தள்ளுவண்டியைத்
தள்ளிக்கொண்டு;
படிக்காத மேதைகளில்
நானும் ஒருவனாய்;
குழந்தைத் தொழிலாளர்
பட்டம் பெற்று;
என்னைப் படம் பிடித்து;
பக்கங்கள் நிரப்பி;
பாராட்டுப் பெறும்
புகைப்படக்காரன்;
தன்னை அறியாமலே
என்னைத் தொழில் ஈடுபடுத்தி;
தலைப்பு மட்டும்
ஒழிப்போம்
குழந்தைத் தொழிலாளர்களை!
படிக்காத மேதைகளில்
ReplyDeleteநானும் ஒருவனாய்;
குழந்தைத் தொழிலாளர்
பட்டம் பெற்று;
சாட்டையடி...
இந்த சட்டம் பெயர் அளவில் தான் உள்ளது...
நன்றி... அவர்களின் சார்பில்..
அவர்களின் சார்பில் நன்றி என்று என்னைத் தனித்து விடாதீர்கள் நானும் உங்கள் பக்கம்தான் Mums.
ReplyDeleteகுழந்தைகளை வேலைக்கு அனுப்பி பெற்றோர்கள் உண்ணும் ஒரே உயிரினம் மனிதன் தான் என்று ஒரு கவிதை படித்தேன்...
ReplyDeleteதாங்களின் எத்தனையோ கவிதைகள் இருக்க என்னோமோ இந்த கவிதை படித்தபோது என் கண்களில் நீர் ...
ReplyDeleteசத்தானக் கருத்துக்களை வித்துக்கலாகத் தூவும் சூர்யா ஜீவா அவர்களுக்கும், கண்கலங்கியதன் மூலம் என் கவிதை வெற்றிப் பெற்றதை தெரிந்துக் கொள்ள உதவியாக இருந்த அப்துல்லாஹ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteஅருமை!
ReplyDeleteபகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"
மனமார்ந்த நன்றி தனபாலன் அவர்களே
ReplyDelete