நல்ல நண்பன்


தடுமாறும் போது
இடம் கொடுக்க வேண்டும்;
தடம்மாறும் போது;
தலையில் தட்டவேண்டும்;
கசப்பானாலும்
மெய் உரைக்கவேண்டும்;
இனிக்கும் என்றாலும்
பொய் தவிர்க்கவேண்டும்;
வழுக்கும் போது
கரம் கொடுக்கவேண்டும்;
உள்ளம் அழுக்காகும் போது
காரம் காட்டவேண்டும்!

தடுமாறும் போது
இடம் கொடுக்க வேண்டும்;
தடம்மாறும் போது;
தலையில் தட்டவேண்டும்;
கசப்பானாலும்
மெய் உரைக்கவேண்டும்;
இனிக்கும் என்றாலும்
பொய் தவிர்க்கவேண்டும்;
வழுக்கும் போது
கரம் கொடுக்கவேண்டும்;
உள்ளம் அழுக்காகும் போது
காரம் காட்டவேண்டும்!

8 comments:

  1. நண்பரே, இப்படியெல்லாம் செய்து என் நண்பர்களையெல்லாம் இழந்தேன்.

    உண்மை சுடுகிறது. பொய் இனிக்கின்றது. இதை யாரிடம் போய்ச் சொல்லுவேன்?

    ReplyDelete
  2. நண்பன் என்றால்
    இப்படித்தான் இருக்க வேண்டும்...

    அழகாகச் சொன்னீர்கள் நண்பரே.

    ReplyDelete
  3. கருத்துத் தெரிவித்த கந்தசாமி அவர்களுக்கு மிக்க நன்றி; நீங்கள் செய்த நல்ல விசயங்களுக்கு பயந்து உங்கள் நண்பர்கள் உங்களை விட்டுப் பிரிந்துச் சென்றால் அதற்காக நீங்கள் சந்தோசமே படலாம். நீங்கள் தப்பித்துவிட்டீர்கள் என்ற மன நிறைவோடு

    ReplyDelete
  4. நண்பர் மகேந்திரன் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

    ReplyDelete
  5. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்-இது பழைய மொழி...
    நல்ல நண்பன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் -இது புது மொழி ...
    உண்மை கவிதை சகோ..

    ReplyDelete
  6. அனைத்திற்கும் இறைவனின் அருள் வேண்டும் Mum.

    ReplyDelete
  7. சிறப்பான வரிகள் .
    பலரிடம் பழகு சிலரிடம் நெருங்கிப் பழகு

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் அலி அண்ணன் அவர்களே

      Delete