ஊனம்உறுப்புகள் அழகாகி;
உள்ளம் கோணலான
உறவுகள் உரைக்கும்
எனை ஊனம் என்று!

உற்சாகத்தை
விற்பனைச் செய்து;
உதாசீனத்தை
உதடுகளால் முத்தமிடும்
உறவுகள் உரைக்கும்
ஊனம் நான் என்று!

நன்மைச் செய்யக்
கரம் இருந்தும்;
அன்பைப் பொழியும்
விழி இருந்தும்
ஊமையான உள்ளம்
உரைக்கும்
ஊனம் நான்தான் என்று!

விளக்கியப் பின்னும்;
விளங்காத உள்ளங்கள்
உரைக்கும் என்னை
உடல் நலம் குன்றியவர் என;
உள்ளுக்குள்ளே
உரைத்துக்கொள்வேன்;
பாவம் அவர்;
மனநலம் குன்றியவர் என!


உறுப்புகள் அழகாகி;
உள்ளம் கோணலான
உறவுகள் உரைக்கும்
எனை ஊனம் என்று!

உற்சாகத்தை
விற்பனைச் செய்து;
உதாசீனத்தை
உதடுகளால் முத்தமிடும்
உறவுகள் உரைக்கும்
ஊனம் நான் என்று!

நன்மைச் செய்யக்
கரம் இருந்தும்;
அன்பைப் பொழியும்
விழி இருந்தும்
ஊமையான உள்ளம்
உரைக்கும்
ஊனம் நான்தான் என்று!

விளக்கியப் பின்னும்;
விளங்காத உள்ளங்கள்
உரைக்கும் என்னை
உடல் நலம் குன்றியவர் என;
உள்ளுக்குள்ளே
உரைத்துக்கொள்வேன்;
பாவம் அவர்;
மனநலம் குன்றியவர் என!

4 comments:

 1. தன்னம்பிக்கை வரிகள்.....

  ReplyDelete
 2. வழக்கமான உங்கள் வருகையும் தவறாமல் நீங்கள் தரும் கருத்தும் என்னை உற்சாகப்படுத்தக் கூடியதாக உள்ளது Mums.

  ReplyDelete
 3. அருமை... அருமை... மனத்தில் ஊனம் உள்ளவர்கள் தான் உண்மையான ஊனம் உள்ளவர்கள்.
  நம்ம தளத்தில்:
  "இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

  பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 4. மனமார்ந்த நன்றி தனபாலன் அவர்களே.

  ReplyDelete