குரங்கிலிருந்து மனிதன்


விலங்கினம் என
உரைப்பதில் உனக்குப்
பெருமையா;
வளர்ந்தக் காலத்தோடு
வால் குறைந்துவிட்டது
என்பது மகிமையா!

இரத்த அணுக்கள்
ஒத்து இருந்தால்
ஒட்டிக் கொள்வாயா
என்னோடு;
பரிணாமம் எனில்
இன்று நான் வேறு;
நீ வேறாய் இருப்பது
எப்படி என்றுக்
கேட்டுப்பார் உன்
மூளையோடு!

என்னில் இருந்து வந்தவன்
எனச் சொல்வது
பரிணாம வளர்ச்சியா;
மொத்தப் படைப்புகளில்
மெத்தத் தகுதியுள்ள
உனைக் குரங்கு
என உரைப்பதற்குப் பெயர்
ஆராய்ச்சியா!

விலங்கினம் என
உரைப்பதில் உனக்குப்
பெருமையா;
வளர்ந்தக் காலத்தோடு
வால் குறைந்துவிட்டது
என்பது மகிமையா!

இரத்த அணுக்கள்
ஒத்து இருந்தால்
ஒட்டிக் கொள்வாயா
என்னோடு;
பரிணாமம் எனில்
இன்று நான் வேறு;
நீ வேறாய் இருப்பது
எப்படி என்றுக்
கேட்டுப்பார் உன்
மூளையோடு!

என்னில் இருந்து வந்தவன்
எனச் சொல்வது
பரிணாம வளர்ச்சியா;
மொத்தப் படைப்புகளில்
மெத்தத் தகுதியுள்ள
உனைக் குரங்கு
என உரைப்பதற்குப் பெயர்
ஆராய்ச்சியா!

No comments:

Post a Comment