அம்மாஒத்தச் சொல்லில்
உனை அழைத்தாலும்;
மொத்தச் சொல்லும்
பத்தாதம்மா;
பொத்தி வைத்து
அடைக்காத்து;
எனை உன்
பத்துவிரலுக்குள்
கட்டி வைத்தாயம்மா!

முள் குத்தி;
நான் முனகும் முன்னே;
முந்திக்கொண்டு நீ
அழுவாயம்மா;
பள்ளி முடிந்து
படியேறுமுன்னே;
பாய்ந்து எனை
அணைப்பாயம்மா!

வம்பு இழுத்து
வாசலில் நின்றாலும்;
கொம்புடன் வந்து
என் தலைக்கோதும்
உன் அன்பு;
புரியாமல் உனைப்
பிரியாமல்;
பிதிங்கி நிற்பேனம்மா!

அழுக்கு ஆடையுடன்
எனக்காக நீ
சமைக்கும் போதும்;
மணக்கும் உன் அன்பிற்காக;
முந்தாணையில்
முகம் பொதிப்பேனம்மா!


ஒத்தச் சொல்லில்
உனை அழைத்தாலும்;
மொத்தச் சொல்லும்
பத்தாதம்மா;
பொத்தி வைத்து
அடைக்காத்து;
எனை உன்
பத்துவிரலுக்குள்
கட்டி வைத்தாயம்மா!

முள் குத்தி;
நான் முனகும் முன்னே;
முந்திக்கொண்டு நீ
அழுவாயம்மா;
பள்ளி முடிந்து
படியேறுமுன்னே;
பாய்ந்து எனை
அணைப்பாயம்மா!

வம்பு இழுத்து
வாசலில் நின்றாலும்;
கொம்புடன் வந்து
என் தலைக்கோதும்
உன் அன்பு;
புரியாமல் உனைப்
பிரியாமல்;
பிதிங்கி நிற்பேனம்மா!

அழுக்கு ஆடையுடன்
எனக்காக நீ
சமைக்கும் போதும்;
மணக்கும் உன் அன்பிற்காக;
முந்தாணையில்
முகம் பொதிப்பேனம்மா!

3 comments:

 1. இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ்கண்ட முகவரியில் வந்து பார்க்கவும்.
  http://blogintamil.blogspot.com/2011/10/4102011.html

  ReplyDelete
 2. இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ்கண்ட முகவரியில் வந்து பார்க்கவும்.
  http://blogintamil.blogspot.com/2011/10/4102011.html

  ReplyDelete
 3. இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ்கண்ட முகவரியில் வந்து பார்க்கவும்
  http://blogintamil.blogspot.com/2011/10/4102011.html

  ReplyDelete