சுவனத்தின் சுவடிக்காக


நாவுப் பிறண்டு;
சகோதரனைக் காவு வாங்கிய
வார்த்தைக்கு வருந்திவிட்டு;
விழி நிரம்பக்
கண்ணீரோடுக் கையேந்துகிறேன்
என் இறைவா!

இமைத் திறந்து;
விழியின் மொழியால்;
விபச்சாரத்தை அணைத்த
மனம் செய்தத் தவறை;
மனம் நொந்துக் கரைகிறேன்
என் இறைவா!

விளங்கிக்கொள்ளும் மூளையை;
கலங்கக்கடிக்கும்
கடைசிக் கட்ட வேதனைக்கும்;
கதிகலங்கி நிற்கிறேன்
என் இறைவா!

மனம் குளிரும் – என்
முகம் மலரும்;
சுவனத்தின் சுவடிக்காக;
ஏங்குகிறேன்
என் இறைவா!

நாவுப் பிறண்டு;
சகோதரனைக் காவு வாங்கிய
வார்த்தைக்கு வருந்திவிட்டு;
விழி நிரம்பக்
கண்ணீரோடுக் கையேந்துகிறேன்
என் இறைவா!

இமைத் திறந்து;
விழியின் மொழியால்;
விபச்சாரத்தை அணைத்த
மனம் செய்தத் தவறை;
மனம் நொந்துக் கரைகிறேன்
என் இறைவா!

விளங்கிக்கொள்ளும் மூளையை;
கலங்கக்கடிக்கும்
கடைசிக் கட்ட வேதனைக்கும்;
கதிகலங்கி நிற்கிறேன்
என் இறைவா!

மனம் குளிரும் – என்
முகம் மலரும்;
சுவனத்தின் சுவடிக்காக;
ஏங்குகிறேன்
என் இறைவா!

2 comments:

  1. உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

    Press Meet Gallery

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர் சரவணனுக்கு நன்றி.

    ReplyDelete