கைத்தொழில்


வளரும் முதுகெலும்பை
வளைத்து;
முளைக்கும் வயதிலேப்
பாடச்சுமைக் கொழுத்து;
தள்ளாடும் பிஞ்சுகள்
வருங்காலக் குடிமகன்!

ஆடி அசைந்து;
அலுத்துப் போனதால்;
அன்னையின் உதவிக்கு
உதடுகள் கொஞ்சும்;
வீட்டுப்பாடங்கள்
விழிகளைக் கெஞ்சும்!

பாடத் திட்டத்தோடு
பிள்ளைகளின்
தொழில் திட்டத்தையும்
அரங்கேற்றும்
கல்வித் தொழில்;
எதிர்கால இந்தியாவிற்குக்
கற்றுக்கொடுக்கும் புதுக்
கைத்தொழில்!

வளரும் முதுகெலும்பை
வளைத்து;
முளைக்கும் வயதிலேப்
பாடச்சுமைக் கொழுத்து;
தள்ளாடும் பிஞ்சுகள்
வருங்காலக் குடிமகன்!

ஆடி அசைந்து;
அலுத்துப் போனதால்;
அன்னையின் உதவிக்கு
உதடுகள் கொஞ்சும்;
வீட்டுப்பாடங்கள்
விழிகளைக் கெஞ்சும்!

பாடத் திட்டத்தோடு
பிள்ளைகளின்
தொழில் திட்டத்தையும்
அரங்கேற்றும்
கல்வித் தொழில்;
எதிர்கால இந்தியாவிற்குக்
கற்றுக்கொடுக்கும் புதுக்
கைத்தொழில்!

No comments:

Post a Comment