கரு சுத்தகரிப்பு


பொத்தி வைத்த எனைப்
பெட்டை எனத் தெரிந்து
வெட்டி எடுக்க துணிந்தாயோ!

மலர்கொடிப் போன்ற உன்
கருக்கொடியில்;
சுகமாய் உன் சுவாசத்தைப்
பங்கீட்டுக் கொண்ட
என் அங்கத்தைப்
பங்கு வைக்க வந்தாயோ!

பிஞ்சி விரலால் கொஞ்சி;
மேனியை சிலிர்க்க செய்ய
நான் உனக்கு வேண்டாமா!

என் உயிர் உடைக்க
உன் கருவறுக்க
வேண்டாமம்மா - பின்
உருக்குலைந்த உன்
கரு வீட்டில் தம்பி
ஊனமாய் விழிப்பான் அம்மா!

பொத்தி வைத்த எனைப்
பெட்டை எனத் தெரிந்து
வெட்டி எடுக்க துணிந்தாயோ!

மலர்கொடிப் போன்ற உன்
கருக்கொடியில்;
சுகமாய் உன் சுவாசத்தைப்
பங்கீட்டுக் கொண்ட
என் அங்கத்தைப்
பங்கு வைக்க வந்தாயோ!

பிஞ்சி விரலால் கொஞ்சி;
மேனியை சிலிர்க்க செய்ய
நான் உனக்கு வேண்டாமா!

என் உயிர் உடைக்க
உன் கருவறுக்க
வேண்டாமம்மா - பின்
உருக்குலைந்த உன்
கரு வீட்டில் தம்பி
ஊனமாய் விழிப்பான் அம்மா!

6 comments:

  1. அடுத்த கருவுக்கு ஆபத்து என்று ஆதங்கப்படும் தற்போது அழியபேர்கும் கரு...

    ReplyDelete
  2. தற்ப்போது பெண் சிசு கொலை குறைந்து வருகிறது.. அது அறவே ஒழிய வேண்டும்..

    பாலினத்தில் என்ன இருக்கிறது அன்பை காட்ட....

    ReplyDelete
  3. சிலிர்க்க வைத்த கவிதை நண்பா. பெண் சிசு கொலையையும் அதனால் அடுத்த குழந்தைக்கு வரவிருக்கும் ஆபத்தையும் அருமையா சொல்லியிருக்கீங்க நண்பா. தொடரட்டும் தங்கள் கவிதைப்பயணம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நண்பர் காந்தி பனங்கூர் அவர்களுக்கு மிக்க நன்றி; வழமையாக கவிதைக்கு கருத்துத் தெரிவிப்பதில் மிக்க நன்றி.

    ReplyDelete
  5. கருத்து தெரிவித்த பாத்திமா அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete