முக்கும் முதுமை


வறுமைக்கு அடிப்பட்டு
வளைகுடாவிற்கு
வாக்கப்பட்டு;
கரம் பிடித்த உன்னை
கண்ணீரோடு விட்டுவிட்டு;
தலையணைக்குத் துணையாய்;
தனிமைக்கு இணையாய்;
நான் இங்கே!

வருடத்திற்கு ஒரு முறை
வந்துப்போய்;
வந்துப்போகும் மாதத்தில்
உன் மனதைக் கொண்டுபோய்;
உண்டான உனக்கு
அறிவுறைகள் அழகாய்
கைப்பேசியில்!

புதுமணத் தம்பதிக் காலத்தில்
கடல் கடந்து வரும்
உன் கடிதத்திற்கு
இமையோடுச் சேர்ந்து என்
இதயமும் காத்திருக்கும்!

காலங்கள் ஓடியப்பின்னே;
இளைமை வறண்டப்பின்னே;
உன் மடலோடு
மருந்துக்காகக் காத்திருக்கும்
என் ஆரோக்கியம்!

ஓடி ஆடும் வயதில்
ஒதுக்குப்புறமாய்
நீயும் நானும்;
ஆடி அடங்கும் வயதில்
வந்திருக்கிறேன் உன் அருகில்;
வளைகுடாவிற்கு
வயது ஒத்துழைக்காததால்!

வறுமைக்கு அடிப்பட்டு
வளைகுடாவிற்கு
வாக்கப்பட்டு;
கரம் பிடித்த உன்னை
கண்ணீரோடு விட்டுவிட்டு;
தலையணைக்குத் துணையாய்;
தனிமைக்கு இணையாய்;
நான் இங்கே!

வருடத்திற்கு ஒரு முறை
வந்துப்போய்;
வந்துப்போகும் மாதத்தில்
உன் மனதைக் கொண்டுபோய்;
உண்டான உனக்கு
அறிவுறைகள் அழகாய்
கைப்பேசியில்!

புதுமணத் தம்பதிக் காலத்தில்
கடல் கடந்து வரும்
உன் கடிதத்திற்கு
இமையோடுச் சேர்ந்து என்
இதயமும் காத்திருக்கும்!

காலங்கள் ஓடியப்பின்னே;
இளைமை வறண்டப்பின்னே;
உன் மடலோடு
மருந்துக்காகக் காத்திருக்கும்
என் ஆரோக்கியம்!

ஓடி ஆடும் வயதில்
ஒதுக்குப்புறமாய்
நீயும் நானும்;
ஆடி அடங்கும் வயதில்
வந்திருக்கிறேன் உன் அருகில்;
வளைகுடாவிற்கு
வயது ஒத்துழைக்காததால்!

5 comments:

  1. ஓடி ஆடும் வயதில்
    ஒதுக்குப்புறமாய்
    நீயும் நானும்;
    ஆடி அடங்கும் வயதில்
    வந்திருக்கிறேன் உன் அருகில்;
    வளைகுடாவிற்கு
    வயது ஒத்துழைக்காததால்!//nice

    ReplyDelete
  2. என்னை போன்று பலர் இந்த கவிதைக்கு சொந்தக்காரர்கள். இளமையை வெளி நாட்டில் கழித்து முதுமையை உள் நாட்டில் கழிக்க காத்திருக்கிறோம்.

    அருமையான பதிவு.

    ReplyDelete
  3. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. பலரின் வலி கசிகிறது வார்த்தைகளில் .

    ReplyDelete
  5. கருத்து தெரிவித்த பனித்துளி சங்கர் அவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete