கறை நல்லது


கின்னியிலுள்ள 
சுடும் குழம்பு
உன் கரம் சுட;
தடுமாறி என் சட்டையில்
தடம் பதிக்க;
அச்சத்தோடு மிச்சப்பார்வையை
என் மீது நீ செலுத்த;
பரவாயில்லை என்று
புன்னகையை உனக்குப்
போர்வையாக்க;
புதைந்துக்கிடந்த நம்
அன்பு  இடம்மாறுவதற்கு   
சூழலை தந்த
கறை நல்லது!
 
கொஞ்சலோடு  விளையாடும்
நம் பிள்ளை என் ஆடையை
சூடாக நனைக்க;
சுற்றியுள்ள சொந்தங்கள் 
கேலியோடு என்னை 
குதுகலப்படுத்தும் 
கறை நல்லது!

கின்னியிலுள்ள 
சுடும் குழம்பு
உன் கரம் சுட;
தடுமாறி என் சட்டையில்
தடம் பதிக்க;
அச்சத்தோடு மிச்சப்பார்வையை
என் மீது நீ செலுத்த;
பரவாயில்லை என்று
புன்னகையை உனக்குப்
போர்வையாக்க;
புதைந்துக்கிடந்த நம்
அன்பு  இடம்மாறுவதற்கு   
சூழலை தந்த
கறை நல்லது!
 
கொஞ்சலோடு  விளையாடும்
நம் பிள்ளை என் ஆடையை
சூடாக நனைக்க;
சுற்றியுள்ள சொந்தங்கள் 
கேலியோடு என்னை 
குதுகலப்படுத்தும் 
கறை நல்லது!

1 comment:

 1. //கொஞ்சலோடு விளையாடும்
  நம் பிள்ளை என் ஆடையை
  சூடாக நனைக்க;
  சுற்றியுள்ள சொந்தங்கள்
  கேலியோடு என்னை
  குதுகலப்படுத்தும்
  கறை நல்லது!//

  குழம்பு கறையை விட இந்த சூடான கறை இதமா இருக்கும். அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
  www.panangoor.blogspot.com

  ReplyDelete