உணர்ச்சிகளின் சுரணையும்
அவ்வபோது செத்துப் போக;
இணையத்தில் நம்மை
இணைக்கக் கைப்பேசி அலற!
எல்லோரிடம் பேச
பாசமாகக் கைப்பேசியைக்
கொடு என்றாலும்;
விளங்காதக் குரலுக்கு
விளங்கியதுப்போல் ”ம்ம்” போட;
உனையன்றி யாருக்கும்
விளங்காத என் மொழி;
உறவினர்கள் எல்லாம்
முகம் சுளித்து – மீண்டும்
உன் கரம் திணித்து;
பேச்சு புரியவில்லை என்பர்;
VOIP என்று
பெயரிட்டாலும்
VOICE க்கு மட்டுமே
வாய்ப்பு;
மனதிற்கு என்றுமே
தீ வைப்பு!
சரியான கதைதான்...
ReplyDelete//எல்லோரிடம் பேச
ReplyDeleteபாசமாகக் கைப்பேசியைக்
கொடு என்றாலும்;
விளங்காதக் குரலுக்கு
விளங்கியதுப்போல் ”ம்ம்” போட;//
சில நேரங்களில் எல்லோருக்கும் நடப்பதுண்டு. அருமையான கவிதை. www.panangoor.blogspot.com