கோலிக் குண்டு



உச்சந்தலையைப் பிளக்கும் 
உச்சி வெயிலிலும்;
உற்சாகமாய் கோலிக் குண்டு!

வாகைச் சூடினால்;
பொல்லாதச் சிரிப்பும்;
தோற்றுப் போனால் 
அழுகையோடு 
அம்மாவின் முந்தாணையில்
வழக்காடும் மன்றமும்!

கோலிக் குண்டுக்கு 
முத்தமிட்டு;
எதிரியின் பளப்பளக்கும் 
குண்டுக்குக் குட்டுவைத்து;
குறிப் பார்க்கக் 
கற்றுக்கொடுத்தக்
கல்லூரியாக;
காலப்போக்கில் 
காலாவதியாகும் 
விளையாட்டுக்களில் ஒன்றாக!


உச்சந்தலையைப் பிளக்கும் 
உச்சி வெயிலிலும்;
உற்சாகமாய் கோலிக் குண்டு!

வாகைச் சூடினால்;
பொல்லாதச் சிரிப்பும்;
தோற்றுப் போனால் 
அழுகையோடு 
அம்மாவின் முந்தாணையில்
வழக்காடும் மன்றமும்!

கோலிக் குண்டுக்கு 
முத்தமிட்டு;
எதிரியின் பளப்பளக்கும் 
குண்டுக்குக் குட்டுவைத்து;
குறிப் பார்க்கக் 
கற்றுக்கொடுத்தக்
கல்லூரியாக;
காலப்போக்கில் 
காலாவதியாகும் 
விளையாட்டுக்களில் ஒன்றாக!

எதிர்கால இந்தியாவே



காய்ந்த விழிகளும் 
ஈரம் கக்கும்;
உறங்கிய ரோமங்களும் 
எழுந்து நிற்கும்;
அழுக்குச் சட்டையே 
அடையாளமாய்;
பரட்டைத் தலையே 
மகுடமாய்;
வறுமையே எம் தொட்டிலாய்;
பசியேத் தாலாட்டாய்!

வறுமைக் கோட்டிற்குக் 
கீழே என்று அறிக்கை உரைக்கும்;
எதிர்கால இந்தியாவே என
அரசியல்வாதியின் 
மேடை முழங்கும்!


காய்ந்த விழிகளும் 
ஈரம் கக்கும்;
உறங்கிய ரோமங்களும் 
எழுந்து நிற்கும்;
அழுக்குச் சட்டையே 
அடையாளமாய்;
பரட்டைத் தலையே 
மகுடமாய்;
வறுமையே எம் தொட்டிலாய்;
பசியேத் தாலாட்டாய்!

வறுமைக் கோட்டிற்குக் 
கீழே என்று அறிக்கை உரைக்கும்;
எதிர்கால இந்தியாவே என
அரசியல்வாதியின் 
மேடை முழங்கும்!

கிளி ஜோசியம்



சொச்ச அட்டைகளில் 
மொத்த மக்களுக்கும் 
எதிர்காலம் உரைத்து;
நிகழ்காலம் தள்ளும் 
என்னிடம்;
உள்ளங்கையைக் காட்டி ;
பைசாக்களை நீட்டும்
மக்களை நினைத்தால்
கொல்லென்றுச் சிரிப்புடன் நான்;
ஓர் நெல்லுக்கு வேலைச் செய்யும் 
என் கிளி பரவாயில்லை என்று! 


சொச்ச அட்டைகளில் 
மொத்த மக்களுக்கும் 
எதிர்காலம் உரைத்து;
நிகழ்காலம் தள்ளும் 
என்னிடம்;
உள்ளங்கையைக் காட்டி ;
பைசாக்களை நீட்டும்
மக்களை நினைத்தால்
கொல்லென்றுச் சிரிப்புடன் நான்;
ஓர் நெல்லுக்கு வேலைச் செய்யும் 
என் கிளி பரவாயில்லை என்று! 

தன்மானம்



ஒட்டியிருக்கும் பசியால்
முதுகு கூண் விழுந்தாலும் 
தன்மானம்; 
தலை நிமிர்ந்து நிற்கட்டும்;
இப்படித் தரையில்
கடையினைப்  போட்டாவது
முகம் சிரிக்கட்டும்;
நானே முதலாளி என 
உழைப்பிற்கு உயர்வால் 
கொடிக்கட்டிக் கொள்ளட்டும்!  


ஒட்டியிருக்கும் பசியால்
முதுகு கூண் விழுந்தாலும் 
தன்மானம்; 
தலை நிமிர்ந்து நிற்கட்டும்;
இப்படித் தரையில்
கடையினைப்  போட்டாவது
முகம் சிரிக்கட்டும்;
நானே முதலாளி என 
உழைப்பிற்கு உயர்வால் 
கொடிக்கட்டிக் கொள்ளட்டும்!  

வேண்டாம் நம் பிள்ளைக்கு



சேர்ந்து வாழும் காலத்தில்
சோர்ந்துப் போய்
தனிமையில் நீயும் நானும்;
அங்கலாய்க்கும் 
வயதின் கதறலை
வாய் மூடி விழிப்பிதிங்கி;
வழியனுப்புவிட்டேன்!   

படுத்து உருள
பஞ்சு மெத்தையும்;
உடுத்தி மகிழ
பட்டுப்புடவையும்;
வாழ்ந்து மகிழ
வசதியாய் வீடும் 
உனக்கு தந்து மகிழ்ந்தேன்!

தேவை எனும் தேடுதலுக்குப்
பாலையில் பலியாகி;
இப்போது;
கன்னம் குழியாகி;
முடியோ நரையாகி;
உன் முன்னே!

தேம்பி அழ 
தெம்பில்லாமல்;
சாய்ந்துக் கொள்கிறேன்
உன் மேனியில்;
சபதம் கொண்டேன்
இனியொரு புலம்பல்
வேண்டாம் நம் பிள்ளைக்கு!


சேர்ந்து வாழும் காலத்தில்
சோர்ந்துப் போய்
தனிமையில் நீயும் நானும்;
அங்கலாய்க்கும் 
வயதின் கதறலை
வாய் மூடி விழிப்பிதிங்கி;
வழியனுப்புவிட்டேன்!   

படுத்து உருள
பஞ்சு மெத்தையும்;
உடுத்தி மகிழ
பட்டுப்புடவையும்;
வாழ்ந்து மகிழ
வசதியாய் வீடும் 
உனக்கு தந்து மகிழ்ந்தேன்!

தேவை எனும் தேடுதலுக்குப்
பாலையில் பலியாகி;
இப்போது;
கன்னம் குழியாகி;
முடியோ நரையாகி;
உன் முன்னே!

தேம்பி அழ 
தெம்பில்லாமல்;
சாய்ந்துக் கொள்கிறேன்
உன் மேனியில்;
சபதம் கொண்டேன்
இனியொரு புலம்பல்
வேண்டாம் நம் பிள்ளைக்கு!