வரும் பெருநாளில்


உறக்கத்தால் ஒட்டி
நிற்கும் இமைகளை;
வெட்டியெடுக்கும்
உன் குரல்!

பெருநாள் குளியலுக்குச்
சண்டிச் செய்யும்
பாதத்திற்குப் பாதைக்காட்டும்
உன் முரட்டு விழிகள்!

கசங்கிய என் ஆடைகளும்
விளக்கம் பெற்று;
முருக்கேறி நிற்கும்;
இஸ்திரிச் செய்து
பளிச்சென்று நிற்கும்!

புத்தம் புது ஆடைகள்
மணக்க;
நறுக்கிப் போடும்
நறுமணம்;
மூக்கைத் துளைத்து;
உன் முகம் சிரித்து;
பெருநாள் திடலுக்கு அனுப்புவாய்!

தொழுகை முடித்து வந்ததும்;
மணக்கும் உன் உணவால்
கனக்கும் என் வயிறு!

இன்று;
நினைத்துப் பார்க்கையிலே;
நனைந்துப் போகும் என் விழிகள்;
உறவுகள் தூரமானதால்;
உணர்வுகள் ஊமையாகி;
முடங்கிப்போனது;
முடமாகிப்போகினது
என் உள்ளம்;

மினு மினுக்கும் கண்களும்;
தொண தொணக்கும் எண்ணமும்;
ஒயாமல் உரைத்துக்கொண்டே
இருக்கும்;
அடுத்தப் பெருநாளிலாவது
ஊரில் இருக்க வேண்டும் என்று!

உறக்கத்தால் ஒட்டி
நிற்கும் இமைகளை;
வெட்டியெடுக்கும்
உன் குரல்!

பெருநாள் குளியலுக்குச்
சண்டிச் செய்யும்
பாதத்திற்குப் பாதைக்காட்டும்
உன் முரட்டு விழிகள்!

கசங்கிய என் ஆடைகளும்
விளக்கம் பெற்று;
முருக்கேறி நிற்கும்;
இஸ்திரிச் செய்து
பளிச்சென்று நிற்கும்!

புத்தம் புது ஆடைகள்
மணக்க;
நறுக்கிப் போடும்
நறுமணம்;
மூக்கைத் துளைத்து;
உன் முகம் சிரித்து;
பெருநாள் திடலுக்கு அனுப்புவாய்!

தொழுகை முடித்து வந்ததும்;
மணக்கும் உன் உணவால்
கனக்கும் என் வயிறு!

இன்று;
நினைத்துப் பார்க்கையிலே;
நனைந்துப் போகும் என் விழிகள்;
உறவுகள் தூரமானதால்;
உணர்வுகள் ஊமையாகி;
முடங்கிப்போனது;
முடமாகிப்போகினது
என் உள்ளம்;

மினு மினுக்கும் கண்களும்;
தொண தொணக்கும் எண்ணமும்;
ஒயாமல் உரைத்துக்கொண்டே
இருக்கும்;
அடுத்தப் பெருநாளிலாவது
ஊரில் இருக்க வேண்டும் என்று!

1 comment:

  1. அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே.. தொடர்ந்து எழுதுங்கள்.

    இது எனது பெருநாள் கவிதை: முடிந்தால் சென்று பாருங்கள்.

    http://sarhoon.blogspot.com/2010/11/blog-post_14.html

    ReplyDelete