முதுமை...வாடிப்போன
நரம்புகளும்
ஒடி ஒய்ந்துப்போன
இரத்தமும்!

தள்ளாடும் நடையால்
தணிக்கைச் செய்யப்பட்ட
இளமை;
சொல்லாமல் சொல்லும்
என் முதுமை!

வெட்ட வெளிச்சத்திலும்
திரைப் போடும்
விழி இமை!

கட்டுப்படாத இளமைக்குக்
குட்டுப்போடும்
முதுமை!

தூணாகக் கால்கள்
இருந்தாலும்;
துணைத்தேடிக்
கைத்தேடும் கைத்தடிக்கு!

இளமை விளிம்பில்
முதுமை நுனியில்;
இறைத்தேடி நடைப்போடும்
முன்னே - வழித்தேடுப்;
பிதுங்கும் இளமையிலே
இறைவனின் அருள் தேடு!


வாடிப்போன
நரம்புகளும்
ஒடி ஒய்ந்துப்போன
இரத்தமும்!

தள்ளாடும் நடையால்
தணிக்கைச் செய்யப்பட்ட
இளமை;
சொல்லாமல் சொல்லும்
என் முதுமை!

வெட்ட வெளிச்சத்திலும்
திரைப் போடும்
விழி இமை!

கட்டுப்படாத இளமைக்குக்
குட்டுப்போடும்
முதுமை!

தூணாகக் கால்கள்
இருந்தாலும்;
துணைத்தேடிக்
கைத்தேடும் கைத்தடிக்கு!

இளமை விளிம்பில்
முதுமை நுனியில்;
இறைத்தேடி நடைப்போடும்
முன்னே - வழித்தேடுப்;
பிதுங்கும் இளமையிலே
இறைவனின் அருள் தேடு!

No comments:

Post a Comment