புது இனம்..எங்கோ ஒர் மூலையில்
எதிர்காலத் தலைமுறைகள்
இரண்டும்;
படிகளைப் பங்குப்போட்டுக்கொண்டுப்;
பசிக்குக் கட்டுப்பட்டு;
அனாதை என அங்கீகாரம்
அளிக்கப்பட்டு; ஒதுக்கப்பட்டு;
ஒதுங்கி வாழும் புது இனம்!

ஒட்டும் இல்லை;
உறவும் இல்லை;
ஒட்டிக்கொள்ள யாரும்
தயாராகயில்லை!

விட்டு விடப்பட்ட
மொட்டுக்கள் இரண்டும்;
கட்டிப்பிடித்து;
மனம் கனத்து;
வயிறுச் சிறுத்து;
உறக்கம் கண்டதோ;
எங்கள் விழிகள்
ஈரம் கொண்டதோ!

குப்பை எனக்
கொட்டும் உணவும்;
ஒருவர் வயிற்றை நிரப்புமே;
பிச்சை எனும்
பெயரை அகற்றுமே!

பழையது எனப்
பல் இளிக்கும்
ஆடையும் ஒருவரைச்
சிரிக்க வைக்குமே;
அவரின் அகம் சிரிக்குமே!

கணநேரம் கண்டுக்;
கனத்துப்போகும் மனமே;
சிறந்த மனிதனின் அறிகுறி;
கண்டுவிட்டுச்;
சிரிப்பால் கொன்றுவிட்டுச்
செல்லும் மனிதனேத் தற்குறி!


எங்கோ ஒர் மூலையில்
எதிர்காலத் தலைமுறைகள்
இரண்டும்;
படிகளைப் பங்குப்போட்டுக்கொண்டுப்;
பசிக்குக் கட்டுப்பட்டு;
அனாதை என அங்கீகாரம்
அளிக்கப்பட்டு; ஒதுக்கப்பட்டு;
ஒதுங்கி வாழும் புது இனம்!

ஒட்டும் இல்லை;
உறவும் இல்லை;
ஒட்டிக்கொள்ள யாரும்
தயாராகயில்லை!

விட்டு விடப்பட்ட
மொட்டுக்கள் இரண்டும்;
கட்டிப்பிடித்து;
மனம் கனத்து;
வயிறுச் சிறுத்து;
உறக்கம் கண்டதோ;
எங்கள் விழிகள்
ஈரம் கொண்டதோ!

குப்பை எனக்
கொட்டும் உணவும்;
ஒருவர் வயிற்றை நிரப்புமே;
பிச்சை எனும்
பெயரை அகற்றுமே!

பழையது எனப்
பல் இளிக்கும்
ஆடையும் ஒருவரைச்
சிரிக்க வைக்குமே;
அவரின் அகம் சிரிக்குமே!

கணநேரம் கண்டுக்;
கனத்துப்போகும் மனமே;
சிறந்த மனிதனின் அறிகுறி;
கண்டுவிட்டுச்;
சிரிப்பால் கொன்றுவிட்டுச்
செல்லும் மனிதனேத் தற்குறி!

2 comments: