எனது தேசத்தில்


படிப்பிற்குப் பாடைக்கட்டி;
பயங்கரவாதி என
முத்திரையிட்டு இன்று
முகத்திரையிட்டு வீதியில்!

நிம்மதியாய்
உறங்கிய நாட்கள்
காலமாகி;
நள்ளிரவிலும்
கதவை உடைத்து;
தேடுதல் வேட்டை என்று
பெண்களைத் தொடத் துடிக்கும்;
பயங்கரவாதி பாதுகாவலர்கள்!

உரிமைக்கு விரைத்து நிற்கும்
இளைஞர்களை முறைத்துவிட்டு;
எல்லாம் முடித்துப் புதைத்துவிட்டு;
பத்திரிக்கைக்கு படத்துடன் பேட்டி;
தீவிராவதிச் சுட்டுக்கொலை!

காய்ந்துப் போனக்
காவலரின் தடிக்கு
ஈரம் கொடுக்க;
துருப்பிடிக்கும்
இராணுவத்தின்
தோட்டாக்களுக்குச்
சோதனை ஒட்டமாக
காஷ்மீரிகள் நாங்கள்!


படிப்பிற்குப் பாடைக்கட்டி;
பயங்கரவாதி என
முத்திரையிட்டு இன்று
முகத்திரையிட்டு வீதியில்!

நிம்மதியாய்
உறங்கிய நாட்கள்
காலமாகி;
நள்ளிரவிலும்
கதவை உடைத்து;
தேடுதல் வேட்டை என்று
பெண்களைத் தொடத் துடிக்கும்;
பயங்கரவாதி பாதுகாவலர்கள்!

உரிமைக்கு விரைத்து நிற்கும்
இளைஞர்களை முறைத்துவிட்டு;
எல்லாம் முடித்துப் புதைத்துவிட்டு;
பத்திரிக்கைக்கு படத்துடன் பேட்டி;
தீவிராவதிச் சுட்டுக்கொலை!

காய்ந்துப் போனக்
காவலரின் தடிக்கு
ஈரம் கொடுக்க;
துருப்பிடிக்கும்
இராணுவத்தின்
தோட்டாக்களுக்குச்
சோதனை ஒட்டமாக
காஷ்மீரிகள் நாங்கள்!

No comments:

Post a Comment