சந்தேகம்...


சண்டைகள் முகாமிட;
இருக்கும் உறவுகளுக்கு
இறப்புச் சான்றிதழ் கொடுக்க;
நாற்றம் எடுக்கும் சந்தேகங்கள்
ஊற்றெடுக்கும்!

கள்ளம் இல்லா உள்ளத்தையும்
கறைப் பூசி மறைத்து;
முடிச்சுப்போடும் பேச்சுக்களால்
அவிழத்தொடங்கும் உறவுகள்!

புழுக்கத்தினாலே மனம்
வியர்த்துக் கொட்டும்;
முட்டும் கண்ணீரால்
மூச்சுத்திணறும் பாசம்;

தேகத்தில் புகுந்தச் சந்தேகம்;
நேசத்தைக் குடையும்;
விஷம் கொண்டப் பேச்சினால்
ரசம் பூசி மொழுகும்!

திரையிட்ட மூளையால்
களைக்கட்டும் கோபம்;
களையிழந்தச் சந்தோஷத்தால்
வார்த்தைகள் முட்கள்
கொண்டு முட்டும்!


சண்டைகள் முகாமிட;
இருக்கும் உறவுகளுக்கு
இறப்புச் சான்றிதழ் கொடுக்க;
நாற்றம் எடுக்கும் சந்தேகங்கள்
ஊற்றெடுக்கும்!

கள்ளம் இல்லா உள்ளத்தையும்
கறைப் பூசி மறைத்து;
முடிச்சுப்போடும் பேச்சுக்களால்
அவிழத்தொடங்கும் உறவுகள்!

புழுக்கத்தினாலே மனம்
வியர்த்துக் கொட்டும்;
முட்டும் கண்ணீரால்
மூச்சுத்திணறும் பாசம்;

தேகத்தில் புகுந்தச் சந்தேகம்;
நேசத்தைக் குடையும்;
விஷம் கொண்டப் பேச்சினால்
ரசம் பூசி மொழுகும்!

திரையிட்ட மூளையால்
களைக்கட்டும் கோபம்;
களையிழந்தச் சந்தோஷத்தால்
வார்த்தைகள் முட்கள்
கொண்டு முட்டும்!

No comments:

Post a Comment