ஆண்மை...


மெளனமாக மணவீசும்
கரு எனும் பெட்டகத்தில்
பொக்கிஷமாக!

உன் அழுகைக்காக
மெளனித்து மனம் பூத்து;
மணிக்கணக்கில்
பிரசவ அறை வாசலில்
காவலாக!

முதல் சுவாசம் முட்ட;
பிஞ்சிக் குரலால் நீ
ஒலி எழுப்ப;
ஒளிரும் எங்கள் முகம்!

சுவாசத்திற்கு அழும்
உனக்குத் துணையாக;
மகிழ்ச்சியில் திணறி
அழுதுக்கொண்டேச்
சிரிப்பேன்!

பழக்கமில்லை என
உனைப் பறித்துக்கொண்ட
முதுமை;
என் கரத்தில் இருந்து!

தூக்கமுடியவில்லை
என்றாலும்;
நுகர்ந்துப் பார்க்கிறேன்;
மனம் குளிர்ந்துப் பார்க்கிறேன்;
உன்னையும்;
வலியுடன் வழிக்கொடுத்த
உன் அன்னையும்!

மெளனமாக மணவீசும்
கரு எனும் பெட்டகத்தில்
பொக்கிஷமாக!

உன் அழுகைக்காக
மெளனித்து மனம் பூத்து;
மணிக்கணக்கில்
பிரசவ அறை வாசலில்
காவலாக!

முதல் சுவாசம் முட்ட;
பிஞ்சிக் குரலால் நீ
ஒலி எழுப்ப;
ஒளிரும் எங்கள் முகம்!

சுவாசத்திற்கு அழும்
உனக்குத் துணையாக;
மகிழ்ச்சியில் திணறி
அழுதுக்கொண்டேச்
சிரிப்பேன்!

பழக்கமில்லை என
உனைப் பறித்துக்கொண்ட
முதுமை;
என் கரத்தில் இருந்து!

தூக்கமுடியவில்லை
என்றாலும்;
நுகர்ந்துப் பார்க்கிறேன்;
மனம் குளிர்ந்துப் பார்க்கிறேன்;
உன்னையும்;
வலியுடன் வழிக்கொடுத்த
உன் அன்னையும்!

No comments:

Post a Comment