வாழாவெட்டி..மணம் முடித்து
ரணம் கொடுத்து
தேசம் தாண்டி
நேசம் தாண்டிச் சென்றாய்!

மரணிக்காமல்
மணம் வீசும் நம்
மணநாள் ஆடைகள்!

கண்குளிரக் கண்ணாடிக்
காண்பதில்லை
காரணம்
கணவன் நீயில்லை!

பெண்மைக்குப் பெருமையாய்
தாய்மையைத் தந்தாய்;
தாயகம் கடந்தாய்!

வாழ்வாதாரத்திற்கு
வளைகுடாவில் நீ;
தவிப்புடன்
வாழும் தாரம் இங்கே
வாழாவெட்டியாக!


மணம் முடித்து
ரணம் கொடுத்து
தேசம் தாண்டி
நேசம் தாண்டிச் சென்றாய்!

மரணிக்காமல்
மணம் வீசும் நம்
மணநாள் ஆடைகள்!

கண்குளிரக் கண்ணாடிக்
காண்பதில்லை
காரணம்
கணவன் நீயில்லை!

பெண்மைக்குப் பெருமையாய்
தாய்மையைத் தந்தாய்;
தாயகம் கடந்தாய்!

வாழ்வாதாரத்திற்கு
வளைகுடாவில் நீ;
தவிப்புடன்
வாழும் தாரம் இங்கே
வாழாவெட்டியாக!

No comments:

Post a Comment