ஈரமான ஈராக்..


வறண்டுப்போன
எங்கள் மண்ணிற்கு;
பிசுப்பிசுக்கும்
எண்ணைக்காக வந்தாய்;
கொன்றுத்தீர்க்கும்
அரக்கனாய் இருந்தாய்!

கண்ணீர் விட்டுக்
கதறினாலும்;
காதுகேளாத உலகம்!

உன் இரத்த வெறியாட்டத்திற்குப்
பலிக்கடாவாய் நாங்கள்;
சதைகள் சிதைந்த
எங்கள் மண்ணில்;
வித்துக்கள் விலைப்போகும்
கருப்புத் தங்கம்!

அரண் எனச் சொல்லி;
முரண் செய்ததை;
முறைத்து நின்று
வேடிக்கைப்பார்க்கும் குழந்தையாக;
ஊனமுற்ற மனிதநேயங்கள்!

இரக்கப்படும்
இருதயங்கள்
இறுகிப்போனதால்
ஈரமாகும் ஈராக்;
குருதிகளால்!

வறண்டுப்போன
எங்கள் மண்ணிற்கு;
பிசுப்பிசுக்கும்
எண்ணைக்காக வந்தாய்;
கொன்றுத்தீர்க்கும்
அரக்கனாய் இருந்தாய்!

கண்ணீர் விட்டுக்
கதறினாலும்;
காதுகேளாத உலகம்!

உன் இரத்த வெறியாட்டத்திற்குப்
பலிக்கடாவாய் நாங்கள்;
சதைகள் சிதைந்த
எங்கள் மண்ணில்;
வித்துக்கள் விலைப்போகும்
கருப்புத் தங்கம்!

அரண் எனச் சொல்லி;
முரண் செய்ததை;
முறைத்து நின்று
வேடிக்கைப்பார்க்கும் குழந்தையாக;
ஊனமுற்ற மனிதநேயங்கள்!

இரக்கப்படும்
இருதயங்கள்
இறுகிப்போனதால்
ஈரமாகும் ஈராக்;
குருதிகளால்!

No comments:

Post a Comment