செல்லமாய் கோபம்..
சுருட்டியப் பகலை
இரவாக்கி;
முத்தைப் போர்த்தும்
போர்வையாக இமை!

இமைக்குள்ளும்
உறங்காத விழி
உனக்காக
உழன்றுக் கொண்டே
இருக்கும்!

மூடியப் பின்னும்
பிதிங்கி வரும்;
உன் நினைவுகளால்
வழிந்து வரும்;
விழிகளில் கசிந்து வரும்!

சண்டையிட்ட நிமிடங்கள்
சங்கடமாய்;
முற்றிபோனச் சினத்தால்
வற்றிப்போன முகம்!

சண்டிச் செய்யும்
மனம் ஈகோவிற்கு;
முண்டியடித்து ஓடிச்செல்லும்
செல்லமாய் கோபித்துக்கொண்டு!

விறைத்து நின்று என்னை
முறைத்துப் பார்ப்பாய்
உன் ஓரக் கண்ணால்!

சிறைப்பட்டிருந்த என்
ஆணவம் அடங்கிப்போய்;
அடிமாடாய் உன்னிடம்!

விட்டுக்கொடுக்கும் உறவிலே ;
உனக்காக விட்டுக்கொடுத்தேன்;
உன்னை விட்டுக்கொடுக்க
மனமில்லாமல்!சுருட்டியப் பகலை
இரவாக்கி;
முத்தைப் போர்த்தும்
போர்வையாக இமை!

இமைக்குள்ளும்
உறங்காத விழி
உனக்காக
உழன்றுக் கொண்டே
இருக்கும்!

மூடியப் பின்னும்
பிதிங்கி வரும்;
உன் நினைவுகளால்
வழிந்து வரும்;
விழிகளில் கசிந்து வரும்!

சண்டையிட்ட நிமிடங்கள்
சங்கடமாய்;
முற்றிபோனச் சினத்தால்
வற்றிப்போன முகம்!

சண்டிச் செய்யும்
மனம் ஈகோவிற்கு;
முண்டியடித்து ஓடிச்செல்லும்
செல்லமாய் கோபித்துக்கொண்டு!

விறைத்து நின்று என்னை
முறைத்துப் பார்ப்பாய்
உன் ஓரக் கண்ணால்!

சிறைப்பட்டிருந்த என்
ஆணவம் அடங்கிப்போய்;
அடிமாடாய் உன்னிடம்!

விட்டுக்கொடுக்கும் உறவிலே ;
உனக்காக விட்டுக்கொடுத்தேன்;
உன்னை விட்டுக்கொடுக்க
மனமில்லாமல்!

No comments:

Post a Comment