பொடுகு..


உதிரும் முடிக்கு
மூலதனம்;
கதறும் உள்ளம்
கழண்டு விழும்;
சுருண்டு விழும் சிகைக்கு!

குழப்பம் இல்லாமலே
குடுமியைப் பிடிக்கவைப்பேன்;
கொட்டும் முடியைக் கண்டு
முகத்தை சுருங்கப்வைப்பேன்!

ஒட்டிக்கொண்டு முத்தமிட்டு
தலையில் படிந்துக்கிடப்பேன்;
என்னை விரட்ட எண்ணி;
சீண்டிப்பார்த்தால்
தூசுப்போலப் பறப்பேன்!

சொறியச் சொறிய
ஆனந்தமாய்;
சொப்பணத்திற்கேக்
கொண்டுச் செல்வேன்;
விழித் திறந்தப்பின்னே
விழிப் பிதுங்கி;
திகைத்து நிற்கச்செய்வேன்!

வெள்ளை நிறத்தில் வந்து
கொள்ளையடிப்பேன் முடியை;
எனக்கு முடிவுக் கட்டாத வரை;
விடமாட்டேன் உன் தலையை!

உதிரும் முடிக்கு
மூலதனம்;
கதறும் உள்ளம்
கழண்டு விழும்;
சுருண்டு விழும் சிகைக்கு!

குழப்பம் இல்லாமலே
குடுமியைப் பிடிக்கவைப்பேன்;
கொட்டும் முடியைக் கண்டு
முகத்தை சுருங்கப்வைப்பேன்!

ஒட்டிக்கொண்டு முத்தமிட்டு
தலையில் படிந்துக்கிடப்பேன்;
என்னை விரட்ட எண்ணி;
சீண்டிப்பார்த்தால்
தூசுப்போலப் பறப்பேன்!

சொறியச் சொறிய
ஆனந்தமாய்;
சொப்பணத்திற்கேக்
கொண்டுச் செல்வேன்;
விழித் திறந்தப்பின்னே
விழிப் பிதுங்கி;
திகைத்து நிற்கச்செய்வேன்!

வெள்ளை நிறத்தில் வந்து
கொள்ளையடிப்பேன் முடியை;
எனக்கு முடிவுக் கட்டாத வரை;
விடமாட்டேன் உன் தலையை!

No comments:

Post a Comment