தோற்றுப்போய் விழுந்தாலும்


சின்னச் சண்டைகள்
நமக்குள் விரிசல்
காட்டும்;
மனதிற்குள் பரிசல்
ஓட்டும்!

ஒட்டி நிற்கும்
தன்மானமோ;
நம் நினைவை
எட்டி உதைக்கும்;
“ஈகோவைக்
கட்டியணைக்கும்!

தடுமாறும் சிந்தனையால்
இடம்மாறும்;
ஒருவரையொருவர் கண்டால் நம்
முகம்மாறும்!

பசித்தாலும்
முரண்டுப்பிடிக்கும் விரல்;
உணவை எடுக்க;
எரியும் மனதோடு;
எரிந்துக் கொண்டிருக்கும்;
வயிறும் சேர்ந்து!

கணநேரம் நாம் சிந்தித்தால்;
சினம் ஏதும் வராது;
வந்தாலும் கணநேரம்
தங்காது!

விட்டுக்கொடுக்கும் வாழ்க்கை
ஒரு நாளும்;
கெட்டுப்போவதில்லை!
துணையிடம் தோற்றுப்போய்
விழுந்தாலும்;
அன்புக்கு அவமானம் ஏதுமில்லை!

சின்னச் சண்டைகள்
நமக்குள் விரிசல்
காட்டும்;
மனதிற்குள் பரிசல்
ஓட்டும்!

ஒட்டி நிற்கும்
தன்மானமோ;
நம் நினைவை
எட்டி உதைக்கும்;
“ஈகோவைக்
கட்டியணைக்கும்!

தடுமாறும் சிந்தனையால்
இடம்மாறும்;
ஒருவரையொருவர் கண்டால் நம்
முகம்மாறும்!

பசித்தாலும்
முரண்டுப்பிடிக்கும் விரல்;
உணவை எடுக்க;
எரியும் மனதோடு;
எரிந்துக் கொண்டிருக்கும்;
வயிறும் சேர்ந்து!

கணநேரம் நாம் சிந்தித்தால்;
சினம் ஏதும் வராது;
வந்தாலும் கணநேரம்
தங்காது!

விட்டுக்கொடுக்கும் வாழ்க்கை
ஒரு நாளும்;
கெட்டுப்போவதில்லை!
துணையிடம் தோற்றுப்போய்
விழுந்தாலும்;
அன்புக்கு அவமானம் ஏதுமில்லை!

2 comments:

 1. // விட்டுக்கொடுக்கும் வாழ்க்கை
  ஒரு நாளும்;
  கெட்டுப்போவதில்லை!
  துணையிடம் தோற்றுப்போய்
  விழுந்தாலும்;
  அன்புக்கு அவமானம் ஏதுமில்லை! //

  அர்த்தங்கள் ஆயிரம் சொல்லும் வார்த்தைகள்.. வாழ்த்துக்கள் தோழா!

  ReplyDelete
 2. துணையிடம் தோற்றுப்போவதில் மனைவி அறிவுடையவள் என்பது உண்மையாகும். அது மகிழ்வுதான். துணையாக இருப்பதினால் துணைவி

  ReplyDelete