வயதானத் தந்தை...


நீ பட்டம் பெற்றச்
சான்றிதழ்களில்;
ஒட்டிக்கொண்டிருப்பது எனது
வியர்வை;
எல்லாம் முடித்து
என்னால் மட்டும் என்கிறாய்
இது என்ன மாயை!

தொலைத்துவிட்ட
இளமையை;
தேட வந்திருக்கிறேன்;
ஓய்ந்துப்போனதால்
ஓய்வெடுக்க உன்னைத்
தேடி வந்திருக்கிறேன்!

கண்கொட்டாமல்
கண்டு ரசிப்பேன்;
நீ சிறு வயதில்
எட்டி உதைப்பதை அன்று;
கண்கலங்கி என்
தோளைச் சுருக்குகிறேன்
நீ கண்டு முறைப்பதை இன்று!

பணம் கேட்க என்
கன்னம் நனைப்பாய்
உன் உதட்டைக் கொண்டு
அன்று;
மருந்து வாங்க உன்
உதட்டைப் பிதுக்குகிறாய்
இன்று!

அணுதினமும் நான்
அஞ்சுவதெல்லாம்;
உன் பிள்ளைகளும்
உன் போல் வேண்டாமென்று;
எனக்குத் தெரியும்
என்னைப்போல் உனக்கு
எதிர்ப்பு சக்தி இல்லையென்று!

நீ பட்டம் பெற்றச்
சான்றிதழ்களில்;
ஒட்டிக்கொண்டிருப்பது எனது
வியர்வை;
எல்லாம் முடித்து
என்னால் மட்டும் என்கிறாய்
இது என்ன மாயை!

தொலைத்துவிட்ட
இளமையை;
தேட வந்திருக்கிறேன்;
ஓய்ந்துப்போனதால்
ஓய்வெடுக்க உன்னைத்
தேடி வந்திருக்கிறேன்!

கண்கொட்டாமல்
கண்டு ரசிப்பேன்;
நீ சிறு வயதில்
எட்டி உதைப்பதை அன்று;
கண்கலங்கி என்
தோளைச் சுருக்குகிறேன்
நீ கண்டு முறைப்பதை இன்று!

பணம் கேட்க என்
கன்னம் நனைப்பாய்
உன் உதட்டைக் கொண்டு
அன்று;
மருந்து வாங்க உன்
உதட்டைப் பிதுக்குகிறாய்
இன்று!

அணுதினமும் நான்
அஞ்சுவதெல்லாம்;
உன் பிள்ளைகளும்
உன் போல் வேண்டாமென்று;
எனக்குத் தெரியும்
என்னைப்போல் உனக்கு
எதிர்ப்பு சக்தி இல்லையென்று!

No comments:

Post a Comment