மூழ்கிப்போன நினைவுமூழ்கிப்போன நினைவுகளால்
வாடிப்போன முகம்;
தத்தளிக்கும் விழிகள்;
கொதிக்கும் கண்ணீரால்!

பற்களுக்குக் கெடுதி
எனத் தெரிந்தாலும்
தினமும் இனிப்புகள்;
வர மறுத்த பிள்ளைக்கு!

கடிப்பான் எனத் தெரிந்தும்
விரல் விடுவேன்;
எச்சில் சொட்டும்
முத்துப் பற்களுக்கு நடுவே!

கடித்துவிட்டுச் சிரிப்பான்;
வலித்தாலும் மீண்டும்
கொடுப்பேன்;
அதட்டும் அன்னைக்குப்
பயந்து ஒளிந்துக்கொள்வான்;
என் கரங்களுக்கு நடுவே!

அறிந்தே என்
முடியைக் கொடுப்பேன்;
இழுத்துச் சிரிப்பான் என்று!

கட்டியணைத்துப்
பிடித்திருந்தாலும்;
அவன் விழிகள்
அம்மாவைத்தான் தேடும்!

எல்லோரும் அழுது
எனை வழியனுப்பினாலும்;
அவன் மட்டும்
அழைத்துக் கூறுவான்;
அடுத்த முறை வரும்போது
பெரியக் கார் வேண்டுமென்று!

முத்தமிட்டு மெதுவாய் கேட்டேன்;
கார் கொடுத்தால்
அடுத்த முறை என்னிடம்
வருவாயா என!

வேகமாக தலையாட்டினான்;
போனத் தடவை
ஆட்டியதுப் போலவே!


மூழ்கிப்போன நினைவுகளால்
வாடிப்போன முகம்;
தத்தளிக்கும் விழிகள்;
கொதிக்கும் கண்ணீரால்!

பற்களுக்குக் கெடுதி
எனத் தெரிந்தாலும்
தினமும் இனிப்புகள்;
வர மறுத்த பிள்ளைக்கு!

கடிப்பான் எனத் தெரிந்தும்
விரல் விடுவேன்;
எச்சில் சொட்டும்
முத்துப் பற்களுக்கு நடுவே!

கடித்துவிட்டுச் சிரிப்பான்;
வலித்தாலும் மீண்டும்
கொடுப்பேன்;
அதட்டும் அன்னைக்குப்
பயந்து ஒளிந்துக்கொள்வான்;
என் கரங்களுக்கு நடுவே!

அறிந்தே என்
முடியைக் கொடுப்பேன்;
இழுத்துச் சிரிப்பான் என்று!

கட்டியணைத்துப்
பிடித்திருந்தாலும்;
அவன் விழிகள்
அம்மாவைத்தான் தேடும்!

எல்லோரும் அழுது
எனை வழியனுப்பினாலும்;
அவன் மட்டும்
அழைத்துக் கூறுவான்;
அடுத்த முறை வரும்போது
பெரியக் கார் வேண்டுமென்று!

முத்தமிட்டு மெதுவாய் கேட்டேன்;
கார் கொடுத்தால்
அடுத்த முறை என்னிடம்
வருவாயா என!

வேகமாக தலையாட்டினான்;
போனத் தடவை
ஆட்டியதுப் போலவே!

1 comment:

  1. உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
    தமிழ்
    ஆங்கிலம்

    ReplyDelete