குறட்டை...


உறங்கியப் பின்னே
விழித்துக்கொள்வேன்;
அருகில் இருப்போரை
எழுப்பிவிடுவேன்!

விதவிதமானச் சப்தத்தால்
வண்ணமிடுவேன்
தூக்கத்திற்கு;
விழிமூடியப் பின்னும்
வழியனுப்பும் ஒசையாய்
வாசலுக்கு!

கொடுத்தவர் ஆழ்ந்திருக்க;
கேட்பவர் உறக்கத்தை
கெடுத்திருக்க;
திரையில் வராத
விசித்திர வில்லன்!

நடு இரவிலும்
புலம்ப வைப்பேன்;
பக்கத்தில் இருப்பவரை
நடுங்க வைப்பேன்!

போர்த்திக் கொண்டுப்
படுத்தாலும்;
செவித் திரையில்
முட்டுவேன்;
உறங்கப்போகும்
இமைகளையும் தட்டுவேன்!

குட்டிக் குழந்தைகளை
மிரள வைப்பேன்;
கேட்கும் நபரை தூக்கமின்றி
உருள வைப்பேன்!

என்னை விட்டு
விலகச்செய்ய;
வேண்டும் வைத்தியம்;
இல்லையென்றால்
தூக்கத்திற்கு என்றும் பத்தியம்!

உறங்கியப் பின்னே
விழித்துக்கொள்வேன்;
அருகில் இருப்போரை
எழுப்பிவிடுவேன்!

விதவிதமானச் சப்தத்தால்
வண்ணமிடுவேன்
தூக்கத்திற்கு;
விழிமூடியப் பின்னும்
வழியனுப்பும் ஒசையாய்
வாசலுக்கு!

கொடுத்தவர் ஆழ்ந்திருக்க;
கேட்பவர் உறக்கத்தை
கெடுத்திருக்க;
திரையில் வராத
விசித்திர வில்லன்!

நடு இரவிலும்
புலம்ப வைப்பேன்;
பக்கத்தில் இருப்பவரை
நடுங்க வைப்பேன்!

போர்த்திக் கொண்டுப்
படுத்தாலும்;
செவித் திரையில்
முட்டுவேன்;
உறங்கப்போகும்
இமைகளையும் தட்டுவேன்!

குட்டிக் குழந்தைகளை
மிரள வைப்பேன்;
கேட்கும் நபரை தூக்கமின்றி
உருள வைப்பேன்!

என்னை விட்டு
விலகச்செய்ய;
வேண்டும் வைத்தியம்;
இல்லையென்றால்
தூக்கத்திற்கு என்றும் பத்தியம்!

1 comment:

  1. குறட்டையைவிட கொடுமையான ஒண்ணு எதுவுமே இல்லைங்க....அதையும் கவிதையா எழுதி இருக்கீங்கன்னா சூப்பர்தான்

    ReplyDelete