நாவு..நரம்பில்லாத நாக்கினால்;
நரம்புகள் முறுக்கேறும்;
முகங்களில் சுருக்கம் விழும்!

ஒட்டிவாழும் உறவுகளையும்
வெட்டிவிடும் வலிமை;
வெட்டியப் பின்னே;
இதயத்திற்குக் கட்டுப்போட்டுக்;
காயம் கொடுக்கும் தனிமை!

வெடுக்கென்றப் பேச்சால்;
வெடித்துவிடும் உறவு;
கட்டியவளையும் கரைச்சேர்க்க;
கொண்டுச் சேர்க்கும் மணமுறிவு!

சிரித்துவாழும் நட்பினையும்
சீண்டிப் பார்க்கும் நாவு;
சிலந்தி வலைப்போல்
சிக்கவிட்டுக் கொட்டிவிடும் பாம்பு!

பலம் கொண்ட
எதிரியையும்
பாசவலையில் வீழ்த்தும்;
நேசம் கொண்ட மனிதனுக்கு
நாசவலையும் பின்னும்!

சிந்திக்கும் சிந்தனைக்கு
அலைவரிசையாய் எண்ணம்;
துடுக்குத் தனமாய் பயன்படுத்தினால்
வீங்கும் நம் கன்னம்!

மோசமான ஆயுதத்திற்கு
முன்னோடித் தலைவன்;
பாசம் கொண்ட வார்த்தைக்கும்
அவன்தான் நண்பன்!நரம்பில்லாத நாக்கினால்;
நரம்புகள் முறுக்கேறும்;
முகங்களில் சுருக்கம் விழும்!

ஒட்டிவாழும் உறவுகளையும்
வெட்டிவிடும் வலிமை;
வெட்டியப் பின்னே;
இதயத்திற்குக் கட்டுப்போட்டுக்;
காயம் கொடுக்கும் தனிமை!

வெடுக்கென்றப் பேச்சால்;
வெடித்துவிடும் உறவு;
கட்டியவளையும் கரைச்சேர்க்க;
கொண்டுச் சேர்க்கும் மணமுறிவு!

சிரித்துவாழும் நட்பினையும்
சீண்டிப் பார்க்கும் நாவு;
சிலந்தி வலைப்போல்
சிக்கவிட்டுக் கொட்டிவிடும் பாம்பு!

பலம் கொண்ட
எதிரியையும்
பாசவலையில் வீழ்த்தும்;
நேசம் கொண்ட மனிதனுக்கு
நாசவலையும் பின்னும்!

சிந்திக்கும் சிந்தனைக்கு
அலைவரிசையாய் எண்ணம்;
துடுக்குத் தனமாய் பயன்படுத்தினால்
வீங்கும் நம் கன்னம்!

மோசமான ஆயுதத்திற்கு
முன்னோடித் தலைவன்;
பாசம் கொண்ட வார்த்தைக்கும்
அவன்தான் நண்பன்!

1 comment:

  1. வெடுக்கென்றப் பேச்சால்;
    வெடித்துவிடும் உறவு;
    கவிதை அருமை..

    ReplyDelete