சிறையில்லைதிணிக்கப்பட்டதாய் எண்ணும்
திரையிட்டக்  கண்கள்;
விலகி நின்றுப் பார்ப்பதால்
குறுகலாய் தோணும்!

வெட்ட வெளிச்சத்தில்
குட்டைப் பாவாடையில்;
குறுக் குறுக்காதப்
பார்வைகள் - எங்களை
அருவருப்பாய் பார்க்கும்!

சுதந்திரமான ஆடையென
எண்ணி விலங்கிடப்பட்ட
பெண் கைதிகள்;
திரைக்குள் இருந்தாலும்
சிறையில்லை எங்களுக்கு!

கட்டுப்பட்ட ஆடைகள்
குட்டு  வைக்கும் ஆண்களுக்கு;
மூடியிருந்தாலே விழித்துப்பார்க்கும்;
திறந்திருந்தால் கற்பழிக்கும் கண்கள்!

என் உரிமை இதுவென்று
முடிவு செய்ய நான் என்ன
உனக்கு அடிமையா;
திறந்துக் காட்டி
உன்னைக் குதுகலிக்க
நான் என்ன மடமையா!

எச்சில் ஊறும் 
உன் விழிகள்
கொத்திச் செல்லும் பருந்து;
திறந்துக் காட்ட  நானில்லை
உனக்கான விருந்து!


திணிக்கப்பட்டதாய் எண்ணும்
திரையிட்டக்  கண்கள்;
விலகி நின்றுப் பார்ப்பதால்
குறுகலாய் தோணும்!

வெட்ட வெளிச்சத்தில்
குட்டைப் பாவாடையில்;
குறுக் குறுக்காதப்
பார்வைகள் - எங்களை
அருவருப்பாய் பார்க்கும்!

சுதந்திரமான ஆடையென
எண்ணி விலங்கிடப்பட்ட
பெண் கைதிகள்;
திரைக்குள் இருந்தாலும்
சிறையில்லை எங்களுக்கு!

கட்டுப்பட்ட ஆடைகள்
குட்டு  வைக்கும் ஆண்களுக்கு;
மூடியிருந்தாலே விழித்துப்பார்க்கும்;
திறந்திருந்தால் கற்பழிக்கும் கண்கள்!

என் உரிமை இதுவென்று
முடிவு செய்ய நான் என்ன
உனக்கு அடிமையா;
திறந்துக் காட்டி
உன்னைக் குதுகலிக்க
நான் என்ன மடமையா!

எச்சில் ஊறும் 
உன் விழிகள்
கொத்திச் செல்லும் பருந்து;
திறந்துக் காட்ட  நானில்லை
உனக்கான விருந்து!

2 comments: