வழிப்பறி..


நச்சரிக்கும் மனமும்
உச்சரிக்கும்;
உன் நினைவுகளை
அசைப்போட்டுப் பசைப்போல்
ஒட்டிக்கொள்ளும்;

நடைப்போடும்
பிள்ளையின் அழகைச்;
செவிகள் கேட்டு;
விழிகள் மலறும்!

கதறும் உள்ளமோ;
கதைக்கேட்கும்;
தினம் குழந்தையின்
நடை அழகைக் கேட்கும்!

அழும் பிள்ளையின்
குரல் கேட்டு;
என் குரல் வலை
கனக்கும்;
காரணம் கேட்டுக்
கன்னம் சிவக்கும்!

காதோடுக் கைப்பேசியைக்
கொடுத்தாலும்;
குட்டி நாவினால்
நக்கிப் பார்க்கும்;
உன் அழகை
கண்மூடிச் சிரிப்பேன்;
கண்டப்படி ரசிப்பேன்!

கடல் கடந்து வந்ததால்;
உனக்கான முத்தங்கள்
அனைத்ததையும்
வழிப்பறிச் செய்யும்
என் கைப்பேசி!

நச்சரிக்கும் மனமும்
உச்சரிக்கும்;
உன் நினைவுகளை
அசைப்போட்டுப் பசைப்போல்
ஒட்டிக்கொள்ளும்;

நடைப்போடும்
பிள்ளையின் அழகைச்;
செவிகள் கேட்டு;
விழிகள் மலறும்!

கதறும் உள்ளமோ;
கதைக்கேட்கும்;
தினம் குழந்தையின்
நடை அழகைக் கேட்கும்!

அழும் பிள்ளையின்
குரல் கேட்டு;
என் குரல் வலை
கனக்கும்;
காரணம் கேட்டுக்
கன்னம் சிவக்கும்!

காதோடுக் கைப்பேசியைக்
கொடுத்தாலும்;
குட்டி நாவினால்
நக்கிப் பார்க்கும்;
உன் அழகை
கண்மூடிச் சிரிப்பேன்;
கண்டப்படி ரசிப்பேன்!

கடல் கடந்து வந்ததால்;
உனக்கான முத்தங்கள்
அனைத்ததையும்
வழிப்பறிச் செய்யும்
என் கைப்பேசி!

No comments:

Post a Comment