முஸ்லிம்களின் தாடி..முடிச் சுமக்கும்
முகத்திற்கு மதம்
கொண்டு பொய் முகச்சாயம்
பூசும் பெருச்சாளிகள்!

அறிவாளிகள் கொண்டது எனக்
பெரியாரைக் காட்டுவர்;
தீவிரவாதிகள் என
இஸ்லாமியரைக் காட்டுவர்!
 
கால் கொண்ட என் ரோமத்திற்கு;
எதிரிக் கால் இரண்டும் ஆடும்;
என்னிடம் அணு ஆயுதம்
இல்லாமலே அணு அணுவாய் சாகும்!

கத்தரித்த தாடிக்கு
கதிரியக்கங்கள் குவியும்;
அனைத்து நிலையமும்
சோதனைச் சாவடியால் நிறையும்!

ஏற்றத்தாழ்வுப் பார்வையால்
பூசுகிறாய் சாயம்;
முஸ்லிம் என முணுமுணுத்து
ஒதுக்குகிறாய் என்ன நியாயம்!


முடிச் சுமக்கும்
முகத்திற்கு மதம்
கொண்டு பொய் முகச்சாயம்
பூசும் பெருச்சாளிகள்!

அறிவாளிகள் கொண்டது எனக்
பெரியாரைக் காட்டுவர்;
தீவிரவாதிகள் என
இஸ்லாமியரைக் காட்டுவர்!
 
கால் கொண்ட என் ரோமத்திற்கு;
எதிரிக் கால் இரண்டும் ஆடும்;
என்னிடம் அணு ஆயுதம்
இல்லாமலே அணு அணுவாய் சாகும்!

கத்தரித்த தாடிக்கு
கதிரியக்கங்கள் குவியும்;
அனைத்து நிலையமும்
சோதனைச் சாவடியால் நிறையும்!

ஏற்றத்தாழ்வுப் பார்வையால்
பூசுகிறாய் சாயம்;
முஸ்லிம் என முணுமுணுத்து
ஒதுக்குகிறாய் என்ன நியாயம்!

No comments:

Post a Comment