நீ வரும் வரை..சரிந்திருக்கும் குடும்பத்திற்கு
நீ முட்டுக்கட்டையல்ல;
முட்டுக்கொடுக்கும் கையாக!

மணம் முடிக்கும்
மங்கையாக உன்
தங்கை;
கற்கத் துடித்துக்
கண்ணீர் வெடித்து நிற்கும்
தம்பி உனக்குண்டு!

முதுமைக்குச் சொந்தமாகி
தள்ளாடும் வயதில்
தூணாக உன் தோள் தேடும்
பெற்றோர்கள்!

உன் கனம் கொண்ட
மனதை கழற்றிவிடு;
மணம் கொண்ட
முகத்தால் சிரித்துவிட்டு;
சென்று வா!

கொட்டமடிக்கும்
இளமையைக்
கட்டிவைத்துவிட்டு;
காத்துக்கொண்டிருப்பேன்;
உனக்காக விழிப்
பூத்துக்கொண்டிருப்பேன்!

கடல் தாண்டிச்சென்றாலும்
நம் மணம் மாறிப்போகாது;
மனம் நாறிப்போகாது!

சென்று வா; என் கணவா
நீ சென்று வா!


சரிந்திருக்கும் குடும்பத்திற்கு
நீ முட்டுக்கட்டையல்ல;
முட்டுக்கொடுக்கும் கையாக!

மணம் முடிக்கும்
மங்கையாக உன்
தங்கை;
கற்கத் துடித்துக்
கண்ணீர் வெடித்து நிற்கும்
தம்பி உனக்குண்டு!

முதுமைக்குச் சொந்தமாகி
தள்ளாடும் வயதில்
தூணாக உன் தோள் தேடும்
பெற்றோர்கள்!

உன் கனம் கொண்ட
மனதை கழற்றிவிடு;
மணம் கொண்ட
முகத்தால் சிரித்துவிட்டு;
சென்று வா!

கொட்டமடிக்கும்
இளமையைக்
கட்டிவைத்துவிட்டு;
காத்துக்கொண்டிருப்பேன்;
உனக்காக விழிப்
பூத்துக்கொண்டிருப்பேன்!

கடல் தாண்டிச்சென்றாலும்
நம் மணம் மாறிப்போகாது;
மனம் நாறிப்போகாது!

சென்று வா; என் கணவா
நீ சென்று வா!

No comments:

Post a Comment