இருள் கூட;
இமை மூட;
இறைக் கொடுத்தப்
போர்வை!
ஒயாமல் ஒடும்
மேகம்;
தாகமாய் தலை
உயர்த்தி நாம் பார்க்கும்
வானம்!
எல்லைத் தெரியாக்
கொள்ளைப் போகும் அழகு;
ஒடிவிளையாடும்
குழந்தைக்குப் பூச்சாண்டியாகப்
பாதம் பிடிக்கப்
பாய்ந்துச் செல்லும் கடல்!
வாடிய முகத்திற்குப்
புன்னகையாய்;
தோகை மூடிய இரவிற்கு
மின்னும் நட்சத்திரங்கள்!
ஒளித் தரும்;
அதனால் வழித்தரும்;
எரிந்துக் கொண்டே
விளக்கை எரியவிடும் சூரியன்!
தன்னாலே உருவாகத்
தனக்கென்றும் தெரியாதே;
சொன்னாலும் புரியாதச்
சுய அறிவும் கிடையாதே;
மறைத் தந்த விதிமுறைகள்
கதியே எனக் கடமையாற்றுதே!
விக்கித்துத் திணறும்
உனக்கோ இது
விடுகதையே;
சிந்தித்து உணர்ந்தால்
அது உனக்கு
முதல் விதையே!
இல்லாதக் கதவிற்குச்
சாவி நீ தேடுகிறாய்;
பூட்டாதக் கதவாய்;
மார்க்கம் உனக்கு இருக்கிறது;
வாராமல் இருப்பதற்கு
எது உனைத் தடுக்கிறது!
Tweet
No comments:
Post a Comment