சகோதரத்துவம்


நாடுவிட்டு நாதியற்று;
உறவுகளை விட்டு;
உடமைகளை உதறிவிட்டு;
தேசம் தேடி வந்து
நேசம் கண்டுக் கொண்ட;
வரலாற்றுக்கு வலிக்கொடுக்கும்;
கண்களில் நீர் சுரக்கும்!

எட்டிப்பார்க்கும் கண்ணீரைத்
தொட்டுத் துடைத்து;
இருக்க இடம் கொடுத்து;
தியாகத்திற்குப் பக்கம் கொடுத்து;
இஸ்லாமியச் சாம்ராஜ்யத்தில்
சம்மணமிட்ட அமர்ந்தச்
சஹாபாக்கள்!

ஒட்டிய வயிறை
நிரப்பிக் கொள்ள ஒரு
பேரித்தப்பழம்;
மார்க்கத்தை உரசிச்செல்லும்  
கயவருக்கு பாடம் புகட்டப்
போர்க்களம்!

வரலாற்றைப் படித்து முடித்தப்
பக்கங்கள் நனைந்துவிட;
இதயத்தில் ஒளிந்திருந்தக்
கசப்புகள் காலமாக!

தாடைகள் சிலிர்த்து நிற்க;
நரம்புகள் புடைத்து நிற்க;
கலங்கிக் நிற்கும் கண்களும்;
எழுந்து நிற்கும் ரோமங்களும்;
தூங்கிக்கிடந்தச் சகோதரத்துவத்தை
எழுப்பிவிட!

மனதிற்குள்ளே மடல்
ஒன்று இட்டேன்;
மறந்தும் நான்
முகம் சுளிக்க மாட்டேன்;
அகம் மகிழ்ந்து
புஜம் அணைப்பேன்!

கசப்புகளை முடக்கிவிட்டு;
கன்னத்தில் முத்தமிட்டு;
எண்ணத்தில் தெளிவடைந்து;
எட்டி உதைத்தேன்;
இதுவரைக் கைக்கொட்டிச் 
சிரித்தக் காழ்ப்புணர்ச்சியை!

நாடுவிட்டு நாதியற்று;
உறவுகளை விட்டு;
உடமைகளை உதறிவிட்டு;
தேசம் தேடி வந்து
நேசம் கண்டுக் கொண்ட;
வரலாற்றுக்கு வலிக்கொடுக்கும்;
கண்களில் நீர் சுரக்கும்!

எட்டிப்பார்க்கும் கண்ணீரைத்
தொட்டுத் துடைத்து;
இருக்க இடம் கொடுத்து;
தியாகத்திற்குப் பக்கம் கொடுத்து;
இஸ்லாமியச் சாம்ராஜ்யத்தில்
சம்மணமிட்ட அமர்ந்தச்
சஹாபாக்கள்!

ஒட்டிய வயிறை
நிரப்பிக் கொள்ள ஒரு
பேரித்தப்பழம்;
மார்க்கத்தை உரசிச்செல்லும்  
கயவருக்கு பாடம் புகட்டப்
போர்க்களம்!

வரலாற்றைப் படித்து முடித்தப்
பக்கங்கள் நனைந்துவிட;
இதயத்தில் ஒளிந்திருந்தக்
கசப்புகள் காலமாக!

தாடைகள் சிலிர்த்து நிற்க;
நரம்புகள் புடைத்து நிற்க;
கலங்கிக் நிற்கும் கண்களும்;
எழுந்து நிற்கும் ரோமங்களும்;
தூங்கிக்கிடந்தச் சகோதரத்துவத்தை
எழுப்பிவிட!

மனதிற்குள்ளே மடல்
ஒன்று இட்டேன்;
மறந்தும் நான்
முகம் சுளிக்க மாட்டேன்;
அகம் மகிழ்ந்து
புஜம் அணைப்பேன்!

கசப்புகளை முடக்கிவிட்டு;
கன்னத்தில் முத்தமிட்டு;
எண்ணத்தில் தெளிவடைந்து;
எட்டி உதைத்தேன்;
இதுவரைக் கைக்கொட்டிச் 
சிரித்தக் காழ்ப்புணர்ச்சியை!

1 comment:

  1. அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா
    http://mathisutha.blogspot.com/

    ReplyDelete