முட்டித் தள்ளும்


உன் விரல் பேசும்
வருடியப்படி என்
சிகையில்;
என் இமை மூட;
உன் கரம் பேசும்;
என் நெஞ்சில் தட்டியப்படி!

உதடுகள் பிதுங்கக்
கண்ணைக் கசக்கி;
ஓடி வருவேன்
உனைத்தேடி;
பதறியப்படி எனை
அள்ளிக்கொண்டு
அணைத்துக் கொண்டு;
இடம் கொடுப்பாய்
உன் அன்பு மடியில்!

முடித்த உன்
பள்ளிப்படிப்பை;
எனக்காகத் தொடங்குவாய்
எனக்குச் சொல்லித்தர!

என் வீட்டுப்பாடப் புத்தகத்தில்
உன் கையெழுத்துக்
கதைப் பேசும்;
எனைப்போலவே உன்
கரம்பேசும்!

கையில் காசைத் திணித்துக்
கடையில் ஏதும் வாங்காதே;
என்றுச் சொல்லி அனுப்புவாய்
விசித்திரமாய்;
உன் பேசைக்கேட்டுத்
திருப்பித் தருவேன்
காசைப் பத்திரமாய்!

குரங்குப் பெடல் போட்டு;
முக்கித் திணறி நான்
ஒட்டும் மிதிவண்டியைச்;
சொல்லி ரசிப்பாய் அத்தாவிடம்!

கைக்கொள்ளாதப் பேனாவை
என் கையில் கொடுத்து;
என் கையையும்
சிறைப்பிடிக்கும் உன் கரம்!

ஒரு வரியில்
உன் அன்புக்கு இடம்
கொள்ளாது;
முட்டித் தள்ளும்
உன் அன்பு ஒருபோதும்
எனைக் கீழேத் தள்ளாது!

உன் விரல் பேசும்
வருடியப்படி என்
சிகையில்;
என் இமை மூட;
உன் கரம் பேசும்;
என் நெஞ்சில் தட்டியப்படி!

உதடுகள் பிதுங்கக்
கண்ணைக் கசக்கி;
ஓடி வருவேன்
உனைத்தேடி;
பதறியப்படி எனை
அள்ளிக்கொண்டு
அணைத்துக் கொண்டு;
இடம் கொடுப்பாய்
உன் அன்பு மடியில்!

முடித்த உன்
பள்ளிப்படிப்பை;
எனக்காகத் தொடங்குவாய்
எனக்குச் சொல்லித்தர!

என் வீட்டுப்பாடப் புத்தகத்தில்
உன் கையெழுத்துக்
கதைப் பேசும்;
எனைப்போலவே உன்
கரம்பேசும்!

கையில் காசைத் திணித்துக்
கடையில் ஏதும் வாங்காதே;
என்றுச் சொல்லி அனுப்புவாய்
விசித்திரமாய்;
உன் பேசைக்கேட்டுத்
திருப்பித் தருவேன்
காசைப் பத்திரமாய்!

குரங்குப் பெடல் போட்டு;
முக்கித் திணறி நான்
ஒட்டும் மிதிவண்டியைச்;
சொல்லி ரசிப்பாய் அத்தாவிடம்!

கைக்கொள்ளாதப் பேனாவை
என் கையில் கொடுத்து;
என் கையையும்
சிறைப்பிடிக்கும் உன் கரம்!

ஒரு வரியில்
உன் அன்புக்கு இடம்
கொள்ளாது;
முட்டித் தள்ளும்
உன் அன்பு ஒருபோதும்
எனைக் கீழேத் தள்ளாது!

No comments:

Post a Comment