பதில் இல்லாமல்
நித்தமும் சத்தம் இல்லா

ஒரு சவுக்கடி;
யாரோ விரல் கொண்டு
என் குரல் நெரிப்பதுப் போல!

என் உழைப்பை விலைப்பேசி;
வெளிநாட்டில் என்
வியர்வையை விதையாக்க
புறப்படுகிறேன்!

சொந்தங்களின் சூடான
முத்தங்கள் நெற்றியை நனைக்க;
ஒரத்தில் ஒளிந்திருந்து
அழும் என் இன்னொருக்
குழந்தை மனைவி!

சிந்தும் கண்ணீருக்குப்
பதில் இல்லாமல்;
இந்த முறையும்
தோல்வியுடன்!

கரம் பிடித்தக்
கடவுச் சீட்டுடன்
கரம் அசைத்து;
மனம் பிசைந்து;
விட்டுச் செல்கிறேன்
இறுதியாக என் கண்ணீர் மட்டும்!

தடம் பதித்த உன்
நினைவுகள்;
அடம் பிடித்து
ஒட்டிக்கொள்ளும்!

சுமை
இறக்க முடியாமல்
இறுக்கிப் பிடித்திருக்கிறேன்;
இந்தவருடமாவது கிடைக்குமா
விடுமுறை!நித்தமும் சத்தம் இல்லா

ஒரு சவுக்கடி;
யாரோ விரல் கொண்டு
என் குரல் நெரிப்பதுப் போல!

என் உழைப்பை விலைப்பேசி;
வெளிநாட்டில் என்
வியர்வையை விதையாக்க
புறப்படுகிறேன்!

சொந்தங்களின் சூடான
முத்தங்கள் நெற்றியை நனைக்க;
ஒரத்தில் ஒளிந்திருந்து
அழும் என் இன்னொருக்
குழந்தை மனைவி!

சிந்தும் கண்ணீருக்குப்
பதில் இல்லாமல்;
இந்த முறையும்
தோல்வியுடன்!

கரம் பிடித்தக்
கடவுச் சீட்டுடன்
கரம் அசைத்து;
மனம் பிசைந்து;
விட்டுச் செல்கிறேன்
இறுதியாக என் கண்ணீர் மட்டும்!

தடம் பதித்த உன்
நினைவுகள்;
அடம் பிடித்து
ஒட்டிக்கொள்ளும்!

சுமை
இறக்க முடியாமல்
இறுக்கிப் பிடித்திருக்கிறேன்;
இந்தவருடமாவது கிடைக்குமா
விடுமுறை!

No comments:

Post a Comment