தியாகத் திருநாள்நினைத்துப் பார்க்கையிலே
நனைந்துப் போகும்
விழிகள்;
காலம் கடந்துப் போனாலும்
கனத்துப் போகும்
தியாகம்!

இறைக் கொடுத்த
வஹிக்கு;
பலிக் கொடுக்கச் சென்று;
வரலாற்றில் பதிக்கப்பட்ட
தியாகம்!

பெற்றெடுத்தப் பிள்ளையை
விட்டுக் கொடுத்த மாண்பு;
துணிந்தப் போதும்
தணிக்கைச் செய்த
அல்லாஹ்வின் அன்பு!

வெற்றிப்பெற்றச் சோதனைக்கு
இன்னும் ஒரு பெருநாள்;
தியாகத்தை நினைத்துப் பார்க்க
அறுத்து பலியிடும் திருநாள்!

முகம் ஒளிர ; அகம் மலர
வாழ்த்துக்கள் பரிமாற்றம்;
புத்தாடைகளும் இனிப்புகளும்
காட்டட்டும் புதுத் தோற்றம்!

கசப்புகளைக் கசக்கிவிட்டு;
வெறுப்புகளை உமிழ்ந்துவிட்டு;
முத்தமிட்டு அணைப்போம்
சகோதரனை!
எட்டுத் திக்கும் தெரியட்டும்
நம் தோரணை!


நினைத்துப் பார்க்கையிலே
நனைந்துப் போகும்
விழிகள்;
காலம் கடந்துப் போனாலும்
கனத்துப் போகும்
தியாகம்!

இறைக் கொடுத்த
வஹிக்கு;
பலிக் கொடுக்கச் சென்று;
வரலாற்றில் பதிக்கப்பட்ட
தியாகம்!

பெற்றெடுத்தப் பிள்ளையை
விட்டுக் கொடுத்த மாண்பு;
துணிந்தப் போதும்
தணிக்கைச் செய்த
அல்லாஹ்வின் அன்பு!

வெற்றிப்பெற்றச் சோதனைக்கு
இன்னும் ஒரு பெருநாள்;
தியாகத்தை நினைத்துப் பார்க்க
அறுத்து பலியிடும் திருநாள்!

முகம் ஒளிர ; அகம் மலர
வாழ்த்துக்கள் பரிமாற்றம்;
புத்தாடைகளும் இனிப்புகளும்
காட்டட்டும் புதுத் தோற்றம்!

கசப்புகளைக் கசக்கிவிட்டு;
வெறுப்புகளை உமிழ்ந்துவிட்டு;
முத்தமிட்டு அணைப்போம்
சகோதரனை!
எட்டுத் திக்கும் தெரியட்டும்
நம் தோரணை!

4 comments:

 1. இறைவன் அருள் எப்போதும் எல்லொருக்கும் உண்டு...

  ReplyDelete
 2. உங்களுக்கும் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அருமையாக உள்ளது ஹஜ் பெருநாள் கவிதை! உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. அருமையாக உள்ளது ஹஜ் பெருநாள் கவிதை! உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete