உன் ஞாபங்கள்எரிந்து விழும் மனம்
அழுது வடியும் கண்கள்;
சிந்தும் வியர்வைக்கு
விலையாய் வருமானம்;
சிலையாய் நீயும் நானும்!

தொலைவில் இருக்கும்
நமக்கு இணைப்பாக
இணையம் மட்டும்;
கனைத்துக் குரல்
கொடுத்தால் கழுத்தை
முறிக்கும் உன் ஞாபங்கள்!

முட்டித் தள்ளும் உன்
நினைவிற்கு நிலைக் குலைந்து;
தடுமாறி விழும் என் கண்ணீர்!

கடல் கடந்து உன்
கடிதம் என் கரம்
வந்து சேரும்;
மனம் ஒடிந்து கனமாகும்
வளையில் விலைப்போன எனக்கு!


எரிந்து விழும் மனம்
அழுது வடியும் கண்கள்;
சிந்தும் வியர்வைக்கு
விலையாய் வருமானம்;
சிலையாய் நீயும் நானும்!

தொலைவில் இருக்கும்
நமக்கு இணைப்பாக
இணையம் மட்டும்;
கனைத்துக் குரல்
கொடுத்தால் கழுத்தை
முறிக்கும் உன் ஞாபங்கள்!

முட்டித் தள்ளும் உன்
நினைவிற்கு நிலைக் குலைந்து;
தடுமாறி விழும் என் கண்ணீர்!

கடல் கடந்து உன்
கடிதம் என் கரம்
வந்து சேரும்;
மனம் ஒடிந்து கனமாகும்
வளையில் விலைப்போன எனக்கு!

No comments:

Post a Comment