மலடி..வருடம் ஏற
வயதும் ஏற
கருமுடிகள்
வெளிறி வெள்ளைக்காகக்
காத்திருக்கின்றன!

சில்லுக்கோடு
விளையாடியவர்களெல்லாம்
சின்னச்சிறு வாண்டுகளோடு!

திடமான மனமிருந்தாலும்
வடுவாகிப் போகும்;
நொந்துப்போகும் மனம்
வந்துப்போகும் உறவினர்களால்!

கட்டிச்சென்ற நீ
விட்டுச்சென்றாய்;
மலராதத் தாய்மையால்
மலடி என்றப் பட்டம்!

மணம் முடித்து
வருடம் பல ஆனாலும்;
விரல்விட்டுச் சொல்லும்
உன் விடுமுறைக்குப்
பலிக்கடாவாய் நான்;
பாலையில் நீ!


வருடம் ஏற
வயதும் ஏற
கருமுடிகள்
வெளிறி வெள்ளைக்காகக்
காத்திருக்கின்றன!

சில்லுக்கோடு
விளையாடியவர்களெல்லாம்
சின்னச்சிறு வாண்டுகளோடு!

திடமான மனமிருந்தாலும்
வடுவாகிப் போகும்;
நொந்துப்போகும் மனம்
வந்துப்போகும் உறவினர்களால்!

கட்டிச்சென்ற நீ
விட்டுச்சென்றாய்;
மலராதத் தாய்மையால்
மலடி என்றப் பட்டம்!

மணம் முடித்து
வருடம் பல ஆனாலும்;
விரல்விட்டுச் சொல்லும்
உன் விடுமுறைக்குப்
பலிக்கடாவாய் நான்;
பாலையில் நீ!

No comments:

Post a Comment