பிரசவம்..பெருத்த வயிறில்
பெருமைக் கொண்டு;
கனத்தப் பருமனால்
வெட்கத்தில் சிவந்தக்
கன்னம்!

இளமை வயதிலும்
முதுமை நடை;
முதற் கட்டப் பயிற்சி!

வேண்டியதைக் கேட்க
அனுமதி இருந்தும்
மறுத்துவிடும் என் பிள்ளை;
வயிற்றிலிருந்து!

செல்லமாய் தட்டினாலும்
எட்டி உதைப்பான்;
வலித்தாலும்
சிரிப்பேன்;
"வெளியே வா"  என்று
என் விரலைக் கொண்டு
அவனை மிரட்டிக் கொண்டு!

கருவை நான் சுமக்க;
கருத்தாய் அனைவருக்கும் நான்;
என்னை மிரட்டுவதல்லாம்
மருந்துக் குடிக்கத்தான்!

பாசங்கள் சூழ;
பரிகாசங்கள் தவழ;
பிரகாசிக்கும் என் முகம்;
பிரசவிக்கும்;
தினந்தோறும் என்  அகம்!


பெருத்த வயிறில்
பெருமைக் கொண்டு;
கனத்தப் பருமனால்
வெட்கத்தில் சிவந்தக்
கன்னம்!

இளமை வயதிலும்
முதுமை நடை;
முதற் கட்டப் பயிற்சி!

வேண்டியதைக் கேட்க
அனுமதி இருந்தும்
மறுத்துவிடும் என் பிள்ளை;
வயிற்றிலிருந்து!

செல்லமாய் தட்டினாலும்
எட்டி உதைப்பான்;
வலித்தாலும்
சிரிப்பேன்;
"வெளியே வா"  என்று
என் விரலைக் கொண்டு
அவனை மிரட்டிக் கொண்டு!

கருவை நான் சுமக்க;
கருத்தாய் அனைவருக்கும் நான்;
என்னை மிரட்டுவதல்லாம்
மருந்துக் குடிக்கத்தான்!

பாசங்கள் சூழ;
பரிகாசங்கள் தவழ;
பிரகாசிக்கும் என் முகம்;
பிரசவிக்கும்;
தினந்தோறும் என்  அகம்!

1 comment: