சினம்..


முடிச்சிப்போடும்
உறவுகளையும்
திரிச்சிப் போடும்;
வெடித்து நிற்கும் உதடுகள்;
பிளந்து நிற்கும்;
சுழன்றுக் கொல்லும்
நாவிற்கு இடம் கொடுக்கும்!

இரத்தம் சூடேறிப்
பித்தம் ஏறும்;
நரம்புகள் முறுக்கேறி
அறிவுத் தோற்கும்!

வலிமை என்று;
காதோறும்
பெருமைப் பீற்றும்;
ஒதுங்கிப்போகும்
மனிதனைக்கண்டு
ஆணவம் அரங்கேறும்!

எப்போதாவது;
வரும் கோபத்திற்கு
மதிப்பு வரும்;
எப்போதும் வரும்
கோபத்திற்கு  
நோயாளி என்றப்
பெயர்தான் வரும்!

புறம் சிரித்து;
இனம் காண;
வழித்தேடு;
வலிக்கொடுக்கும் சினத்திற்கு
வழியனுப்ப
உதடுகளைப் பிரித்து அனுப்பு!

முடிச்சிப்போடும்
உறவுகளையும்
திரிச்சிப் போடும்;
வெடித்து நிற்கும் உதடுகள்;
பிளந்து நிற்கும்;
சுழன்றுக் கொல்லும்
நாவிற்கு இடம் கொடுக்கும்!

இரத்தம் சூடேறிப்
பித்தம் ஏறும்;
நரம்புகள் முறுக்கேறி
அறிவுத் தோற்கும்!

வலிமை என்று;
காதோறும்
பெருமைப் பீற்றும்;
ஒதுங்கிப்போகும்
மனிதனைக்கண்டு
ஆணவம் அரங்கேறும்!

எப்போதாவது;
வரும் கோபத்திற்கு
மதிப்பு வரும்;
எப்போதும் வரும்
கோபத்திற்கு  
நோயாளி என்றப்
பெயர்தான் வரும்!

புறம் சிரித்து;
இனம் காண;
வழித்தேடு;
வலிக்கொடுக்கும் சினத்திற்கு
வழியனுப்ப
உதடுகளைப் பிரித்து அனுப்பு!

1 comment:

  1. ஒரு களம் அமைக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த இணையதளம் !
    http://nidurseason.wordpress.com/
    இணையத்திற்கு வந்து கருத்துக்களை அற்புதமாய் தாருங்கள் .

    ReplyDelete